25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பழமொழி.

Jul 09, 2025

‘‘எள்ளுக்கு ஏழு உழவு’’

‘‘எள்ளுக்கு ஏழு உழவு’’                                                                                                                                                 .நெல், கரும்பு, சோளம் என ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு மாதிரியாக உழுதல் வேண்டும். எள் விதைப்பதற்கு முன்னர் நிலத்தை ஏழு முறை உழுதல் வேண்டும். அப்போதுதான் எள் நன்கு முளைத்து வளர்ந்து பலனளிக்கும். இல்லை எனில் வளர்ச்சி குன்றி விளைச்சலும் குறையும். இத்தொழில் நுட்பக் கருத்தினை, பழமொழி தெளிவுறுத்துகிறது.

Jul 02, 2025

உனக்குக் கோபமாச்சி, எனக்கு இலாபமாச்சி..

சிறு பிள்ளைகள் இருவர் அண்ணன் தம்பி என்று வைத்துக்கொள்வோம். ஆனால், தற்போது அவர்கள் சண்டை போட்டுக்கொண்டு பேசுவதில்லை. அண்ணன் ஒரு தின்பண்டம் வாங்கி வருகிறான். தன் தம்பியிடம் பாதி கொடுக்கிறான். ஆனால் தம்பி, அண்ணன் மீதுள்ள கோபத்தால் வேண்டாம் என்கிறான். அப்போது அண்ணன்'உனக்குக் கோபமாச்சி, எனக்கு இலாபமாச்சி' என்று சொல்லிக்கொண்டு மீதி பாதி தின்பண்டத்தையும் அவனே தின்றுவிடுவான்.

Jun 25, 2025

தண்ணீர் இல்லாத குளத்துக்கு மீன் பிடிக்கச்சென்றானாம்.

தண்ணீர் இல்லாத குளத்துக்கு மீன் பிடிக்கச்சென்றானாம்.பொருள்: எந்த பொருள் எங்கு கிடைக்குமோ, அங்கு சென்று வாங்க வேண்டும்; இல்லாத இடத்தில் தேடக் கூடாது. அப்படி தேடுவதாகச் சொன்னால், அது பொய்.

Jun 18, 2025

தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறு வேறு.

பொருள்: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை உண்டு.யாரும் யாரையும், எந்த விஷயத்திற்கும் நிர்ப்பந்திக்க முடியாது; 'இந்த பாதை ஆபத்து' என்று இதமாகச் சொல்லி, நகர்ந்து விடுவது நல்லது, அது, நாம் வளர்த்த மகனே ஆனாலும் கூட!

Jun 10, 2025

தை பிறந்தால் வழி பிறக்கும்.

சொல்லப்படும் பொருள்:தை மாதம் பிறந்தால் நல்ல வழி அல்லது நல்ல விஷயம் நடக்கும் .உண்மையான விளக்கம்:தை மாதத்தில் அறுவடை காலத்தில், விவசாயிகளின் கையில் பணவரவு இருக்கும். அதை வைத்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்யலாம்.இன்னொரு பொருள், வயலில் முளைத்து இருக்கும் நெல் மணிகள் வரப்பை அடைத்து கொண்டு வழியில்லாமல் வளர்ந்து நிற்கும். தை மாதம் பிறந்தவுடன் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, வரப்பில் நடக்க வழி கிடைக்கும்.  

Jun 03, 2025

மண் பானையில் இருப்பதை மாணிக்கப் பானையில் போட்டு மூடணும்.

மண் பானையில் இருப்பதை மாணிக்கப் பானையில் போட்டு மூடணும்.மாணிக்கப் பானை என்பது நமது வயிறு. அதாவது பாத்திரத்தில் இருக்கும் உணவை நமது வயிறு என்னும் பாத்திரத்தில் போட்டு மூடுவதை இவ்வாறாகக் கூறுகிறார்கள்.

May 27, 2025

அள்ளாம குறையாது, சொல்லாம வராது.

அள்ளாம குறையாது, சொல்லாம வராது.எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தாமல் அது குறையாது. குறைந்திருக்கிறது என்றால், கண்டிப்பாக நாம் அதனைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல, ஒரு செய்தி பரவுகிறது என்றால், அதை யாராவது சொல்லியிருந்தால்தானே வெளிவரும்.

May 20, 2025

பக்கத்து இலைக்கேன் பாயாசம் கேக்கற?

பக்கத்து இலைக்கேன் பாயாசம் கேக்கற?அடுத்தவர்களுக்காகப் பரிந்து பேசி, பிறரிடம் பிரச்சினைக்குச் செல்பவர்களை இந்தப் பழமொழி வைத்துத் திட்டுவோம்.  ஒரு விருந்தில் அமர்ந்து சாப்பிடுகிறோம் என்றால், நமக்குப் பாயாசம் இன்னும் வரவில்லையென்று பரிமாறுபவரிடம் கேட்கலாம். ஆனால், அருகில் அமர்ந்து உண்பவருக்காகக் கேட்பது என்பது நம் வேலை இல்லை. அவருக்கு வாய் இருக்கிறது, அவர் கேட்டுக்கொள்வார். அதுபோலதான் வாழ்க்கையும்.

May 13, 2025

தனக்கே தகராறாம், தம்பிக்குத் தயிர் சோறாம்.

 தனக்கே தகராறாம், தம்பிக்குத் தயிர் சோறாம்."தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும்" என்பார்கள். தன்னுடைய குடும்பத்தையே கவனிக்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களை இந்தப் பழமொழி குறிப்பிடுகிறது. அதாவது, உதவி செய்யக்கூட நாம் ஒரு நிலையில் இருக்க வேண்டும். மிகவும் ஏழ்மையானவர்கள் பிறருக்கு உதவி செய்ய என்னும்போது இப்படித்தான் சமுதாயம் அவர்களைக் கேலி செய்கிறது.

May 06, 2025

சிவன் சொத்து குல நாசம்.

1.படை கொண்ட அரசருக்கும் இறுதியில் பிடி சாம்பல் தான் மிஞ்சும். 2. சிவன் சொத்து குல நாசம். 3. மக நட்சத்திர பெண் ஜெகத்தை ஆள்வார். 4 ஆடையின்றி குளிப்பது அறம் ஆகாது. 5. சஷ்டியில் விரதம் இருந்தால், அகப்பையில் பிள்ளை வரும். 6.ஆனியில் அடி கோளகூடாது. ஆடியில் குடி போக கூடாது. 7. வஸ்திரம் இன்றி குளிப்பதோ தூங்குவதோ கூடாது. 8 புரட்டாசியில் மண்ணுரிய மழை பெய்யும். பொன்னுரிய வெயில்' காயும். 9.மார்கழியில் மண்ணும் குளிரும், தையில் தரையும் குளிரும். 10.பூரம் மாப்பிள்ளை யோகத்தை தரும்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 17 18

AD's



More News