25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


பழமொழி.

Nov 04, 2025

‘‘அவரைக் கொடியும் பெண்ணும் ஒண்ணு பீர்க்கங்கொடியும் பையனும் ஒண்ணு’’

‘‘அவரைக் கொடியும் பெண்ணும் ஒண்ணுபீர்க்கங்கொடியும் பையனும் ஒண்ணு’’ஒவ்வொரு செடியும், கொடியும் வெவ்வேறு நிலைகளில் வளரும் தன்மை கொண்டன. சில தரையிலும், சில மேலேயும் படரும் தன்மை கொண்டன. அவரை வளராதது போன்று தெரிந்தாலும், விரைவாக வளரும் தன்மை கொண்டது. அதுபோன்று பீர்க்கங்கொடி வேகமாக வளரும் தன்மை கொண்டது. இவ்விரண்டு கொடியையும் பெண், ஆண் குழந்தைகளின் வளர்ச்சியுடன் ஒப்பிடுவர்.இவ்வாறு இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த நமது முன்னோர்கள் தமது அனுபவ அறிவால் பெற்ற கருத்துக்களை பழமொழிகள் வாயிலாகத் தொழில் நுட்பக் கருத்துக்களை உணர்த்தியுள்ளனர். இவை நமக்கு நலமுடனும், வளமுடனும் வாழ்வதற்கு வகைசெய்பவையாக அமைந்துள்ளன.வளர்கின்ற குழந்தையையும், வளர்கின்ற பயிரையும் ஒப்பிடும் முறையை வேளாண் பழமொழி தெளிவுறுத்துகின்றது. 

Oct 29, 2025

அள்ளாம குறையாது, சொல்லாம பிறவாது.

அள்ளாம குறையாது, சொல்லாம பிறவாது.பொருள்- எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தாமல் அது குறையாது.குறைந்திருக்கிறது என்றால், கண்டிப்பாக நாம் அதனைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல, ஒரு செய்தி பரவுகிறது என்றால், அதை யாராவது சொல்லியிருந்தால்தானே வெளிவரும்?.

Oct 28, 2025

‘‘முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும் பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்’’

ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு முறையில் வளர்க்கவேண்டும். அவ்வாறு வளர்த்தால், அம்மரம் நமக்கு அதிகம் பலனைத் தரும். மர வளர்ப்பு முறையில் கவ்வாத்து செய்தல் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். முருங்கை, கொய்யா போன்ற மரங்களை ஆண்டிற்கு ஒரு முறை கவ்வாத்து செய்தால் புதிய கிளைகள் வந்து அதிக பலன்களைத் தரும். இத்தகைய கவ்வாத்து முறையை,‘‘ஒடிச்சு வளர்க்காத முருங்கையும்,அடிச்சு வளர்க்காத பிள்ளையும் உருப்படாது’’ என்ற பழமொழிகளின் வாயிலாக நமது முன்னோர்கள் குறிப்பிடுகின்றனர்.

Oct 22, 2025

தகப்பன் வெட்டிய கிணறு என்று தலைகீழாய் விழுவரா?

தகப்பன் வெட்டிய கிணறு என்று தலைகீழாய் விழுவரா?பொருள்- : தந்தை வெட்டிய கிணறு என்றாலும், அதில் விழ முடியுமா... அது போல, ஆபத்து என தெரியும் செயல்களை, எக்காரணம் கொண்டும் மேற்கொள்வது கூடாது.

Oct 21, 2025

. ‘‘எருப்போட்டவன் காடுதான் விளையும்;

. ‘‘எருப்போட்டவன் காடுதான் விளையும்; பொறாமைப்படுபவன்- காடு விளையாது’’பயிர் நடவு செய்துவிட்டால் மட்டும் பயிர் விளைச்சலைத் தராது. அதற்குத் தேவையான உரமிடுவது அவசியமானதாகும். நமது முன்னோர்கள் இயற்கை உரத்தையே பயன்படுத்தினர். செயற்கை உரத்தைப் பயன்படுத்தினால் உணவுப்பொருளில் நச்சுத்தன்மை ஏற்பட்டு, அதனை உண்ணும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் பெரும்பாலும் இயற்கை சார்ந்த வேளாண்மையையே அதிகம் செய்தனர். தற்போது போல் அதிகமாக செயற்கை உரத்தைப் பயன்படுத்தவில்லை. தொழு எரு போட்டு பயிர்களின் விளைச்சலைப் பெருக்கினர். இன்று வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குறிப்பிடுவது போன்று இயற்கை சார்ந்த உரங்களை அதிகம் பயன்படுத்தினர்.எருப் போடாது, மற்றவருடைய வயலைப் பார்த்து பொறாமைப் படுவதால் எதுவும் விளையாது.

Oct 15, 2025

தங்கத்தை குவிக்கிறேன் என்றாலும், தன் புத்தி விடுவதில்லை .

தங்கத்தை குவிக்கிறேன் என்றாலும், தன் புத்தி விடுவதில்லை என்கிறான்.பொருள்: அறிவுத்திறன் இன்றி வேலை செய்து பழக்கப்பட்டவர்களுக்கு,  தங்கம் இலவசமாகத் தருகிறேன் என்று சொன்னால் கூட செய்வதை நிறுத்தத் தெரியாது; 

Oct 14, 2025

‘‘வலுத்தவனுக்கு வாழை; இளைச்சவனுக்கு எள்ளு’’

யார் யார் எத்தகைய பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும் என்பதையும் பழமொழிகளில் நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீர்ப் பாசன வசதி, பிற செலவுகள் செய்வதற்குரிய பணம் வாய்ப்பிருப்போர் வாழையைப் பயிரிடலாம். நீர் வசதி பிறவோ இல்லாதவர்கள் எள்ளைப் பயிரிட்டுப் பயன் பெறலாம். இதனை,என்ற பழமொழி மொழிகின்றது. வாழை பயிரிடுவோர் காற்றினால் மரம் சாய்ந்து விடுகின்றபோது அதனால் பாதிப்படையாமல் அவ்விழப்பைத் தாங்கிக் கொள்கின்ற சக்தி இருக்க வேண்டும். மேலும், எள்ளிற்கு அதிக அளவு நீர் தேவைப்படாது. சிறிதளவே நீர் தேவைப்படும் காற்றடித்தாலும் எள் செடியானது பாதிப்படையாது. இதனால் பொருளாதாரப் பாதிப்பும் ஏற்படாது என்பதை இப்பழமொழி குறிப்பிடுவதும் நோக்கத் தக்கது.

Oct 08, 2025

நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.

பணக்காரர்கள் தாம் தூம் என்று செலவு செய்வார்கள். எவ்வளவு நாளைக்கு? எல்லாம் அந்தப் பணம் உள்ளவரை மட்டும்தான். சிலர், தங்கள் அருகில் நண்பர்கள் பக்கபலமாக இருந்தால், ஒரு பிரச்சினை வரும்போது தங்கள் மேலே தவறு இருந்தாலும் கூட, நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக மிகவும் அதிகமாகப் பேசித் தங்களது வீரத்தை நிரூபிக்க முயல்வார்கள். அதுவே அவர்கள் தனியாக இருந்தால், பயந்துபோய் ஓடிவிடுவார்கள்.

Oct 07, 2025

‘‘ஆட்டுப் புழுக்கை அன்றைக்கே! மாட்டுச் சாணம் மக்குனாத்தான்!’’

நடமாடும் வங்கியான ஆட்டின் புழுக்கை அன்றைக்கே உரமாகப் பயன்படும். மாட்டுச் சாணம் மட்க வேண்டும். அப்போதுதான் அது நன்கு பயனைத் தரும். மேலும் மாட்டிலிருந்து பெறப்படும் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரத்தை ‘பஞ்சகவ்வியம்’ என்பர். இத்தகைய இயற்கையான உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களை, பழமொழிகள் விளக்குகின்றன.

Oct 01, 2025

தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அமிக்கும்.

தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அமிக்கும்.தண்ணீர், பச்சை தண்ணீராக இருந்தாலும் சுடுநீராக இருந்தாலும் அதனை நெருப்பின் மீது ஊற்றினால் நெருப்பு அமிந்துபோகும். அதுபோல, நல்லவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் கொள்கையில் மாறமாட்டார்கள். நல்லது மட்டுமே செய்வார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News