25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


பழமொழி.

Jan 28, 2026

சாப்பாடு பற்றிய பழமொழிகள்.

பண்டாரம் பிண்டத்துக்கு அழுதானாம்; லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டதாம்...... பங்கு இட்டவளுக்கு, பானை தான் மிச்சம். குடலு கூழுக்கு அழுததாம், கொண்டை பூவுக்கு அழுததாம்...... ஆகாதது வேகாதது ஆண்டவனுக்கு, அதிலும் கெட்டது குருக்களுக்கு...... பணக்காரனுக்குத் தகுந்த பருப்புருண்டை, ஏழைக்குத் தகுந்த, எள்ளுருண்டை....

Jan 21, 2026

சாப்பாடு பற்றிய பழமொழிகள்.

பசி ருசி அறியாது, நித்திரை சுகம் அறியாது..... அன்னம் இறங்குவது அபான வாயுவால்..... .உள்ள புள்ளை உரலை நக்கி கிட்டு இருக்க, வேற புள்ளைக்கு திருப்பதிக்கு போனாளாம்..... மருந்தாக இருந்தாலும், விருந்தோடு உண்.... சொரிந்து தேய்க்காத எண்ணையும், பரிந்து இடாத சோறும் பாழ்......

Jan 14, 2026

கோயில் பூ நெய் தேவனுக்கு அம்சம் ஆகாது.

கோயில் பூ நெய் தேவனுக்கு அம்சம் ஆகாது.இந்தப் பழமொழியையும் 'கோவில் பூனை தேவனுக்கு அஞ்சாது' என்று தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள். கோயிலில் சாமிக்கு நெய் பூ வைத்து அர்ச்சனை செய்தால் ,அது இறைவனிடம் போய்ச் சேரவா போகிறது? மாறாக, நாம் நம் எண்ணத்தில் மற்றும் செயலில் இறை பக்தியுடன் வேண்டுவதும் புகழ்வதும்தான் அவருக்கு உண்மையான அர்ச்சனை.

Jan 07, 2026

ஆயிரம் முறை போய் ஒரு கலியாணத்த பண்ணனும்.

இந்தப் பழமொழி 'ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கலியாணத்தப் பண்ணனும்' என்று தவறாகக் கூறப்பட்டு வருகிறது. ஒரு திருமணம் செய்வதற்கு முன்பு மாப்பிள்ளையோ,பெண்ணோ எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆயிரம் முறை ,அவர்கள் வீட்டிற்கு போய் அலசி ஆராய்ந்து, பிறகு திருமணத்தை நடத்த வேண்டும் என்பதே உண்மையான பழமொழியின் அர்த்தம்.

Jan 06, 2026

“கூளை குடியைக் கெடுக்கும் குட்டைக்கலப்பை காட்டைக் கெடுக்கும்”

வேளாண்மைக்குப் பயன்படுத்தும் கருவிகள் சரியாக இருக்குமானால் விவசாயிகளுக்குத் தகுந்த பயனைத் தரும். இல்லையென்றால் நிலம் வீனாகிவிடும் என்ற நடைமுறை உண்மையை, என்ற பழமொழி மூலம் அறியலாம்“கூளை குடியைக் கெடுக்கும்குட்டைக்கலப்பை காட்டைக் கெடுக்கும்”என்ற பழமொழி மூலம் அறியலாம்.நிலத்தைப் பாதுகாக்கும் முறையையும் விதைகளையிட்டுப் பயிர் விளைவிக்கும் முறையையும் மறைத்து வைக்காமல் எல்லோரும் பயன்பெரும் வகையில் கிராம விவசாயிகள் எடுத்து கூறினர்.

Dec 31, 2025

குத்தாலத்தில குளிக்கப் போகக் கும்பகோணத்திலேயே துணி அவுக்கறான்.

குத்தாலத்தில குளிக்கப் போகக் கும்பகோணத்திலேயே துணி அவுக்கறான். ஆர்வக்கோளாறு மற்றும் ஒரு விஷயத்தில் அதிகப்படியான ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு சொல்லப்படும் பழமொழி

Dec 24, 2025

ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்து வந்தவ நெல்லு குத்துராளாம்.

ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்துவந்தவ நெல்லு குத்துராளாம். தன்மனைவியைப்பதறடித்துவிட்டுபுதிதாகச்சேர்த்துக்கொண்டபெண்ணுக்கு(வைப்பாட்டி)உரிமைகொடுத்துக்கொண்டாடும்போது, இவர்களைப் பார்த்து ஊரார் சொல்லும் பழமொழிதான் இது.

Dec 17, 2025

வந்தா வரவுல வச்சிக்க, இல்லன்னா  செல்வுல வச்சிக்க.

வந்தா வரவுல வச்சிக்க, இல்லன்னா  செல்வுல வச்சிக்க.வாழ்கையில் நமக்குக் கிடைப்பது இலாபம் என்று வைத்துக்கொள்வோம். கிடைக்காததை அது நமக்கு இல்லையென்ற ஒரு நன் மனதுடன் கவலையற்று இருப்போம்.

Dec 10, 2025

ஆடத் தெரியாதவள் தெருக்கோணல் என்றாளாம்.

ஆடத் தெரியாதவள் தெருக்கோணல் என்றாளாம்.தன்னிடம் உள்ள தவற்றை ஒத்துக்கொள்ளாமல் சூழ்நிலைகள் மீதோ அல்லது அடுத்தவர்கள் மீதோ பழி போடுபவர்களை இப்படி கூறலாம்.

Dec 09, 2025

“அடர விதைத்துச் சிதறப் பிடுங்கு”

“சிரைத் தேடின் ஏரைத் தேடு”“களை பிடுங்காத பயிர் கால் பயிர்”“அடர விதைத்துச் சிதறப் பிடுங்கு”“உழுகிற நாளில் ஊருக்குப் போனால்அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை”ஆகிய பழமொழிகள் வேளாண்மைத் தொழில் நுணுக்கங்களை வெளிப்படுத்துகின்றன.கிராமப்புற மனிதனின் எல்லாச் செயல்களிலும் அவன் பெறும் அனுபவங்களே அவனுடைய வாழ்க்கையைச் சிராக்க வழிவகை செய்கிறது. மனித வாழ்வோடு பிரிக்கவொண்ணா நிலையைப் பழமொழிகள் பெற்றுள்ளன.கொங்கு நாட்டு வேளாண்மை தொடர்பான பழமொழிகளையும், அப்பழமொழிகள் கிராமப்புற விவசாயிகள் வாழ்வில் பெற்றுள்ள சிறப்பிடத்தையும் ஆராய்ந்ததன் மூலம் கொங்குநாட்டு மக்களின் வாழ்க்கை முறையினைச் சிறப்பாக அறிய முடிந்தது உண்மை.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 19 20

AD's



More News