25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பழமொழி.

Sep 17, 2025

தண்ணீருக்கு பயந்தால் நீச்சல் வருமா?

தண்ணீருக்கு பயந்தால் நீச்சல் வருமா?பொருள்: ஒரு பணியை செய்ய முடிவு செய்தால், அச்சப்படக் கூடாது; துணிந்து காரியத்தில் இறங்க வேண்டும்.

Sep 16, 2025

‘‘உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்’’

 ‘‘உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்’’அனைவரும் வயலில் பயிரிடுகின்றபோது நாமும் பயிரிடவேண்டும். அப்போதுதான் அது விளையும். இல்லையெனில் அஃது பாழ்பட்டுப் போய்விடும். மேலும் உழவுத் தொழிலில் கவனம் செலுத்துதல் வேண்டும் என்பதையும் இப்பழமொழி நன்கு விளக்குகின்றது..ஒவ்வொரு பயிரையும் அதற்குரிய தொழில் நுட்பத்திற்குத் தகுந்தாற்போல் நடவு செய்தால் அப்பயிர் நன்கு விளைச்சலைத் தரும். அவ்வாறு செய்யவில்லையெனில் விளைச்சல் குறையும். பயிர் நடவு செய்யும் இத்தொழில் நுட்பத்தை,

Sep 10, 2025

சர்க்கரை என்றால் தித்திக்குமா?

சர்க்கரை என்றால் தித்திக்குமா?சர்க்கரையை சாப்பிட்டால்தானே தித்திக்கும். அதற்குக் காசு வேண்டாமா? வாழ்க்கைக்கு எப்படி வாழ வேண்டும் என்று கனவு கண்டால் மட்டும் போதாது. அந்தக் கனவை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும்.சிலர் ஒருவருக்காக எல்லாமும் செய்வேன் என்று சர்க்கரைப் போன்று பேசுவார்கள். ஆனால், ஒரு துரும்பைக்கூட அசைக்கமாட்டார்கள். இந்தப் பிதற்றல்காரர்கள் வாயால் வடை சுடுவதால் என்ன பலன்? 

Sep 03, 2025

துளசிக்கு வாசமும், முள்ளுக்கு கூர்மையும் முளைக்கிற போதே தெரியும்.

துளசிக்கு வாசமும், முள்ளுக்கு கூர்மையும் முளைக்கிற போதே தெரியும்.பொருள்: துளசிசெடி, கன்றாகஇருக்கும்போதே,அதன்வாசனைதெய்வீகமணத்தைப்பரப்பத்துவங்கிவிடும்; முள்ளும், முளைக்கும்போதே அதன் கூர்மை தன்மைதான் முதலில் வெளிப்படும். அதுபோல, ஒருவரின் குணத்தை, அவரின் ஐந்து வயதிலேயே அறிந்துகொள்ள முடியும்

Aug 27, 2025

தலைக்கு தலை நாட்டாண்மையாய் இருக்கிறது.

தலைக்கு தலை நாட்டாண்மையாய் இருக்கிறது.பொருள்: ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு நபரும் அவரவர் சிந்தனைக்கேற்ப அணுகுவார்; சரியான கோணத்தில் சிந்திக்கப்படும்போது தோன்றும் கருத்தே, அந்த விஷயத்தைச் சிறப்பிக்கும்.

Aug 20, 2025

தன் பலம் கொண்டு அம்பலம் ஏற வேண்டும்.

பொருள்: பண பலமோ, உடல் பலமோ, மன பலமோ.,நமக்கென்ன உண்டோ அந்த அளவு மட்டுமே முதலீடாக வைத்து, காரியங்களைச் செய்ய வேண்டும்; பலத்தை மீறி செய்யப்படும் காரியம் எதுவுமே, சிக்கலில் சிக்க வைக்கும்.

Aug 13, 2025

தான் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது.

பொருள்: எந்த பணியையும் ஒரு பலனை எதிர்பார்த்துசெய்யும்போது, அந்தபலன்கிடைக்காமல்போகலாம்; அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதை உணர்ந்து, எதிர்பார்ப்பை கைவிட வேண்டும்; இல்லையெனில், துக்கமே மிஞ்சும்.

Aug 06, 2025

ஆடி பழமொழி

ஆடிமாதப் பழமொழிகள் பல 'ஆடிப் பட்டம் தேடி விதை', 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்', 'ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', 'ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்' என்னும் பழமொழிகளாக மக்கள் மத்தியில் வழங்கப்படுகின்றன 

Jul 30, 2025

விவசாயமப்பழமொழி ‘‘ஆடிப்பட்டம் தேடி விதை’’

ஆடி மாதத்தில் விதைப்பதே விதைப்பதற்குச் சரியான காலகட்டமாகும்.மேலும், விவசாயம் செய்கின்றபோது விவசாயம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாது பலனை மட்டும் எதிரபார்த்தல் கூடாது. என்ற இக்கருத்தை, பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன

Jul 23, 2025

‘‘பருவத்தே பயிர் செய்’’

காலத்தோடு, காலத்திற்கேற்ற பயிர்களைப் பயிரிட வேண்டும். அவ்வாறு பயிரிட்டால் தான் நன்கு விளைச்சலைப் பெருக்க இயலும். பருவம் தவறி விதைத்தால் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற முடியாது. இதனை, இப்பழமொழி தெளிவுறுத்துகின்றன.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 18 19

AD's



More News