‘‘அவரைக் கொடியும் பெண்ணும் ஒண்ணு பீர்க்கங்கொடியும் பையனும் ஒண்ணு’’
‘‘அவரைக் கொடியும் பெண்ணும் ஒண்ணு
பீர்க்கங்கொடியும் பையனும் ஒண்ணு’’
ஒவ்வொரு செடியும், கொடியும் வெவ்வேறு நிலைகளில் வளரும் தன்மை கொண்டன. சில தரையிலும், சில மேலேயும் படரும் தன்மை கொண்டன. அவரை வளராதது போன்று தெரிந்தாலும், விரைவாக வளரும் தன்மை கொண்டது. அதுபோன்று பீர்க்கங்கொடி வேகமாக வளரும் தன்மை கொண்டது. இவ்விரண்டு கொடியையும் பெண், ஆண் குழந்தைகளின் வளர்ச்சியுடன் ஒப்பிடுவர்.இவ்வாறு இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த நமது முன்னோர்கள் தமது அனுபவ அறிவால் பெற்ற கருத்துக்களை பழமொழிகள் வாயிலாகத் தொழில் நுட்பக் கருத்துக்களை உணர்த்தியுள்ளனர். இவை நமக்கு நலமுடனும், வளமுடனும் வாழ்வதற்கு வகைசெய்பவையாக அமைந்துள்ளன.வளர்கின்ற குழந்தையையும், வளர்கின்ற பயிரையும் ஒப்பிடும் முறையை வேளாண் பழமொழி தெளிவுறுத்துகின்றது.
0
Leave a Reply