26வது நிகழ்ச்சி... ஐந்தாவது ஆண்டு துவக்க விழாஇராஜபாளையம் நகைச்சுவை மன்றம் ,சிரித்து வாழ வேண்டும்.பெருமையுடன் வழங்கும் சிரிப்பு வெடிகள்.நாள் : 14.06.2026 ஞாயிற்றுக்கிழமைநேரம்: மாலை 5.00 மணிஇடம் : ஆனந்தா கார்டன், தென்காசி ரோடு, இராஜபாளையம்.முனைவர் .சிவ. சதீஷ்குமார் - தலைப்பு சிரித்துப் பழகு!சிரிப்பே அழகு!திருச்சி. பேராசிரியர் , சா. நீலகண்டன்- தலைப்பு வாங்க சிரிக்கலாம்!வயசை குறைக்கலாம்!அனைவரும் வருக. அனுமதி இலவசம்.தவறாது கலந்து கொண்டு சிரிப்பு மழையில் நனையுங்கள்...,
தொழில்துறையில் பெரும் வரவேற்பைப் பெற்ற INTEC வர்த்தகக் கண்காட்சி, தற்போது தனது வெற்றிகரமான21-வது பதிப்பைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. உற்பத்தி, பொறியியல் மற்றும் தானியங்குமயமாக்கல் (Automation) ஆகிய துறைகளின் சமீபத்திய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் இக்கண்காட்சிமுக்கியப் பங்கு வகிக்கிறது.கடந்து வந்த சாதனைப் பாதை (கடந்த 20 பதிப்புகள்):1,00,000+ வணிகப் பார்வையாளர்கள் (Business Visitors)600+ கண்காட்சியாளர்கள் மற்றும் 1,100+அரங்குகள்200-க்கும் மேற்பட்ட தயாரிப்புப்பிரிவுகள்3,000 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகப் பரிவர்த்தனைகள்இந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்:உலகளாவிய பங்கேற்பு: ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தின் ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்அங்கீகாரம் மற்றும் உலகெங்கிலும் உள்ள 20-க்கும் மேற்பட்ட நாடுகளின்அபார பங்கேற்பு.பிரமாண்ட வடிவமைப்பு: மொத்தம் 7 கண்காட்சி அரங்குகளில், 200-க்கும் மேற்பட்ட பல்வேறு தயாரிப்புப்பிரிவுகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.வணிக வாய்ப்புகள்: புதிய வர்த்தகத் தொடர்புகளுக்கான வணிகப் பொருத்தம் (Business Matchmaking) மற்றும் நிபுணர்களின்மாநாட்டு அமர்வுகள் (Conference Sessions).நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரைஅனுமதிச் சீட்டு: RS.150/- (பொதுப் பார்வையாளர்களுக்கு)குறிப்பு: உற்பத்தி மற்றும் பொறியியல் துறையில் உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்குஎடுத்துச் செல்ல, இந்த சர்வதேசக் கண்காட்சியைத் தவறவிடாதீர்கள்!
ஜூன் 1 முதல் மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. குறுகிய மற்றும் நீண்ட தூர அரசு பேருந்துகளிலும், இந்த சலுகை வழங்கப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கு இலவச பேருந்து பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் காலத்தில்பாஜக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த திட்டத்தின் நோக்கம் பெண்களின் பயணச் செலவை குறைக்க.பெண்களின் சுயசார்பு மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்த.கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு எளிதான பயணம்.பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தை உறுதி செய்ய.எங்கே எங்கே பயன்படும்?மாநில அரசு பேருந்துகள் (நகர்ப்புற, புறநகர் மற்றும் நீண்ட தூர சேவைகள்)பெண்கள் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம்!
எந்த அரசு துறையாக இருந்தாலும் உங்களிடம் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால் கூட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்.புகார் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
ஹெல்மெட் அணிவது ஒரு உறுதியான பாதுகாப்பு, ஆனால் ஒரு பெரிய தவறு உயிருக்கே ஆபத்தாக முடியும். காலாவதியான ஹெல்மெட்டை அணியாதீர்கள்! அதன் உள்ளே இருக்கும் முக்கியமான EPS Foam, 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் மிகவும் கடினமாகிவிடும். அதன்பிறகு, அது அதிர்வுகளைத் தாங்கும் திறனை இழந்துவிடும். பழைய ஹெல்மெட்டை அணிவது என்பது, உங்கள் தலையில் ஒரு பலவீனமான பிளாஸ்டிக் பெட்டியை அணிவதைப் போன்றது!
தமிழ்நாடு பொது சேவை ஆணையம் அதிரடி அறிவிப்பு 2026!ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (நேர்காணல் இல்லாத பதவிகள்)நேர்முகத் தேர்வு இல்லை! நேரடி நியமனம்!விளம்பர எண் 734,அறிவிப்பு எண் 04/2026,தேதி 20.05.2026ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (நேர்காணல் இல்லாத பதவிகள்)பணிகளுக்கு நேரடி ஆட் சேர்புக்கான ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.www.tnpsc.gov.inஆன்லைனில் விண்ணப்பிக்கவும்முக்கிய தேதிகள்அறிவிப்பு வெளியான தேதி -20.05.2026விண்ணப்பிக்க தொடங்கும் தேதி - 27.05.2026விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் நேரம் - 25.06.2026, 11.59pmவிண்ணப்ப திருத்தம் செய்யும் காலம்- 29.06.2026,12.01AM முதல் 01.07.2026, 11.59 PM வரை
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினால் பல்வேறு உதவிகளை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து வழங்குகின்றன. காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை.பிள்ளைகள் கவனிக்க வில்லை என்பது முதல், வங்கியில் பென்சன் பணம் வரவில்லை என்பது வரை எல்லா உதவிகளையும் கேட்கலாம். உங்களிடம் விவரங்கள் வாங்கிய பிறகு, அந்தந்த துறைகளை அவர்களே தொடர்பு கொண்டு எல்லாப் பிரச்சனைகளையும் சரி செய்ய உதவி செய்வார்கள். நகரங்களில் வழி தெரியாமல் இருந்தால் கூடத் தயங்காமல் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம். ஒரு நண்பனைப் போல உதவிகளையும் ஆலோசனைகளும் வழங்குவார்கள். எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய எண்: 14567. உங்களுக்குத் தெரிந்த அனைத்து பெரியவர்களுக்கும் அனுப்புங்கள்.
ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D.தர்மராஜா கல்வி தர்ம ஸ்தாபனம், இராஜபாளையம்.ஹண்டாய் & ஐஐடி மெட்ராஸ் கார்க்கினோஸ் ஹெல்த்கேர் இணைந்து நடத்தும்,தலைசிறந்த மருத்துவ குழுவினர் பங்குபெறும் மாபெரும் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்.நாள் : 23.05.2026 முதல் 25.05.2026 வரை நேரம் : தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை. இடம் : ஸ்ரீராவ்பகதூர் ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளிஇரயில்வே பீடர் ரோடு, இராஜபாளையம்.முகாமின் சிறப்பம்சங்கள்வாய்வழி புற்றுநோய்,மார்பகப் புற்றுநோய்,பெருங்குடல் புற்றுநோய்,கருப்பை வாய் புற்றுநோய்,ஆகியவற்றிற்கான மருத்துவ பரிசோதனைகள் செய்து மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும்.
மாநில வாரியாக ஆதார் துறையில் ஆப்ரேட்டர்,சூப்பர்வைசர் உள்ளிட்டமொத்தம் 252 காலியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன. 10வது, 12வது, ஐடிஐ அல்லது டிப்ளமோ கல்வித் தகுதி பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் 20.05.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழக சாலைகளில் இனி விபத்துகளே இருக்கக்கூடாது என்பதில் நமது புதிய அரசு உறுதியாக உள்ளது.அதன் ஒரு பகுதியாக, 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஒட்டினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:₹25,000 அபராதம்:மைனர்கள் வண்டி ஓட்டினால் வாகன உரிமையாளருக்கு (பெற்றோருக்கு) உடனடியாக ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.3 ஆண்டு சிறை:விதியை மீறும் பெற்றோர்களுக்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.RC ரத்து:அந்த வாகனத்தின் பதிவு சான்றிதழ் (RC Book) ரத்து செய்யப்படும்.25 வயது வரை தடை:சட்டத்தை மீறிய அந்த சிறுவர் சிறுமிக்கு 21 வயது ஆகும் வரை, டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படாது. மக்களுக்கு ஒரு வேண்டுகோள்:தம் பிள்ளைகளின் கையில் பைக் சாவியைத் தருவது, அவர்களின் உயிர்க்கே ஆபத்தாக முடியலாம். சட்டத்தை மதிப்போம், உயிர்களைக் காப்போம்!"பாதுகாப்பான பயணம் - பாதுகாப்பான எதிர்காலம்.,விதிகளை மீறாதீர்கள் ,உயிரை காப்பற்றுங்கள்.