சுக்கு - மிளகு சாதம்.
தேவையானவை:
பச்சரிசி- ஒரு கப்,
சுக்குத்தூள்- ஒரு தேக்கரண்டி,
மிளகுத்துாள், சீரகம் - தலா 2 தேக்கரண்டி,
முந்திரி - 10,
இஞ்சித்துருவல்,கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு,நெய் - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் போட்டு, அதனுடன், சீரகம், இஞ்சி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். வாணலியில் நெய்விட்டு முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வேக வைத்த சாதத்துடன் சேர்க்கவும். மிளகுத்துாள், சுக்குத்துாள் தூவி பரிமாறவும்.
0
Leave a Reply