சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.
பாகற்காய் துண்டுகளை உப்பு சேர்த்து பிசறி பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் அலசி விட்டு சமைத்தால் அவ்வளவாக கசக்காது.
கூட்டு, பொரியலுக்கு தேங்காய்ப்பூ இல்லையா! புழுங்கல் அரிசியை பொரித்து பொடி செய்து தூவி இறக்கினால், தேங்காய் சேர்ந்த சுவை கிடைக்கும்.
தோசை மாவில் உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு கரண்டி அரிசி, அரைக் கரண்டி உளுத்தம்பருப்பை ஊற வைத்து, மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்து விட்டால் உப்பு சரியாகிவிடும். பால் பாயசம் செய்யும் போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.
வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கிவிடும் அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது குழம்பும் ருசியாக இருக்கும்.
சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.
0
Leave a Reply