இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் (REWA) மற்றும் வினேஷ் ராமகிருஷ்ணன் அறக்கட்டளை (VRCT) இணைந்து நடத்தும் இளஞ்சிவப்பு மாதம் (PinkMonth) முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி .(REWA வின் 55வது நிகழ்ச்சி)நாள் : 31-10-2026, சனிக்கிழமைநேரம் : காலை 10-00 மணி முதல் மாலை 5-00 மணி வரைஇடம் : ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபம், (அருள்மிகு சொக்கர் கோவில் வளாகம், இராஜபாளையம்.)சென்னை Paterson Cancer Center-ன் நிர்வாக இயக்குனர். Dr.S. விஜயராகவன் M.D., அவர்கள் தலைமையில் சிறந்த நிபுணர்கள் குழுவால் நடைபெறவுள்ளது.நிகழ்ச்சியின் நோக்கங்கள்புற்றுநோய் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல். புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து மக்களுக்குக் கல்வியளித்தல்.ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் உரிய மருத்துவப் பரிசோதனையின் அவசியத்தை வலியுறுத்துதல். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல்.புற்றுநோய் குறித்த சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல். பேட்டர்சன் புற்றுநோய் மையம் சமூக நல விழிப்புணர்வு மற்றும் சேவைத் திட்டம்.புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வோம்!ஆரோக்கியமான, புற்றுநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம்!!"புற்றுநோய் இல்லாத சமுதாயம்" என்பதே டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் கனவு.இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விழிப்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்து புற்றுநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.மேலும் விபரங்களுக்கு முகாம் ஒருங்கிணைப்பாளர் - திரு. S. இராமகிருஷ்ணராஜா - அலைபேசி : 94437 06923.
SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA BOYS' HR. SEC. SCHOOL - RAJAPALAIYAM. SPORTS DAY CELEBRATION On Saturday, 31 October 2026 at 8.30 A.MVenue: A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGE , Shenbaga Thoppu Road, Rajapalaiyam.ProgrammePrayer : Our StudentsWelcome Address : Mr. K. SARAVANANHeadmaster Sri Rao Bahadur A.K.D. Dharma Raja Boys' Hr. Sec. School.Presidential Address : Sri. A.K.D.KRISHNAMA RAJU Correspondent,Sports Events : AthleticsChief Guest's Address: & Prize distribution Mr. N.A. JEYARATHNARAJAN, M.Com., B.P.Ed., NIS.,District Sports Officer, Tuticorin. School President and Committee Members - Prof. Dr. S. MUTHUKRISHNAN Presitent ,Dr. B. GANESHRAM ,Mr. T.D.R. RAMKUMAR,Mr. K.R. KARTHIKAU RAJA.Annual Sports Report: Mr. R. MUTHUMANI Physical Education Teacher.Vote of Thanks : Mr. K. MUTHUKUMAR Physical Education Teacher.National Anthem .
சேமிப்பையும், சிக்கனத்தையும் வலியுறுத்தி (30.10.2026) அன்று உலக சிக்கன நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1985-ஆம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30-ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து சிக்கன நடவடிக்கையை நாட்டு மக்கள் கடைபிடித்து, சிக்கனமாக வாழ்ந்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது. "சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்" என்ற முது மொழிக்கேற்ப ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தன் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எதிர் காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மக்கள் சிக்கனமாக வாழ்ந்து, தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ளவேண்டும். எதிர்கால வாழ்க்கை ஒளியமயமாக திகழ்ந்திட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே, சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். "சிறுதுளி பெருவெள்ளம்" என்பதற்கேற்ப மக்கள் தாங்கள் ஈட்டிய பணத்தை, அஞ்சலகச் சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், சிறுகச் சிறுக சேமிக்கப்படும். அத்தொகை பன்மடங்காகப் பெருகி, எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பை அளிக்கும். சேமிப்பு முதல் செலவாக இருக்கட்டும். அது எதிர்காலத் தேவைக்கான முதலீடாகும். இந்த உலக சிக்கன நாளில், மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற, அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டும் என்று மண்டல உதவி இயக்குநர் (சிறுசேமிப்பு) அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா கல்வி தர்ம ஸ்தாபனத்தின் நிறுவனர் ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா அவர்களின் 148-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அன்னாரது புனரமைக்கப்பட்ட திருவுருவச் சிலைமஹா ஸ்ரீ ராஜ மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜூயர் சுவாமி அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.இடம்: இராஜபாளையம் ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா கல்வி தர்மஸ்தாபனச் சந்தை வளாகம்.நாள் : 26-10-2026, திங்கட்கிழமை.நேரம் : காலை 10.00 மணி.சந்தை வளாகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட R.O. குடிநீர் பிளான்ட் அமரர் A.K.D. தர்மகிருஷ்ண ராஜா (முன்னாள் மேனேஜிங் டிரஸ்டி) அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அன்னாரது துணைவியார், திருமதி. A.K.D. ரமணிதேவி அம்மையார் அவர்களால் துவக்கிவைக்கப்பட உள்ளது.இந்த இனிய விழாவில் தாங்களும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். நிகழ்ச்சி நிரல்இறைவணக்கம் :பள்ளி மாணவியர்வரவேற்புரை: திரு. A.K.D. கிருஷ்ணம ராஜீ மேனேஜிங் டிரஸ்டி,திருவுருவச்சிலை திறப்பு விழா வாழ்த்துரை மற்றும் அருளாசி வழங்குதல் - மஹா ஸ்ரீ ராஜ மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜூயர் சுவாமிகள்,RO பிளான்ட் துவக்கி வைத்தல் : திருமதி. A.K.D. ரமணி தேவிநன்றியுரைஇப்படிக்கு,A.K.D. கிருஷ்ணம ராஜுமேனேஜிங் டிரஸ்டி2024 -2027.ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா கல்வி தர்ம ஸ்தாபனம் இராஜபாளையம்.
வடகிழக்குப் பருவமழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்"மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்பகிர்மானப் பெட்டிகள் அருகில் செல்வதையும், அதன் அருகே தேங்கிய மழைநீரில் இறங்குவதையும் தவிர்க்க வேண்டும்"தரையிலோ, சாலையிலோ அல்லது மழைநீரிலோ அறுந்து விழுந்த மின்கம்பிகளைத் தொடவோ, அப்புறப்படுத்தவோ கூடாது'இடி, மின்னலின்போது திறந்தவெளி, தனித்த மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளின் கீழ் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்மின்கம்பிகளில் விழுந்த மரக்கிளைகளை வெட்டவோ, இழுத்து அகற்றவோ கூடாதுமின்கம்பங்களில் கால்நடைகளைக் கட்டுதல், துணிகளை உலர்த்துதல், விளம்பரப் பலகைகள் அல்லது பந்தல்களுக்கு பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும்"வீடுகளில் மின்கசிவால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க RCCB (RESIDUAL CURRENT CIRCUIT BREAKER)பொருத்த வேண்டும்.மின்தடை, அறுந்த மின்கம்பிகள், மின்கசிவு தொடர்பான புகார்கள் மற்றும் அவசர உதவிக்கு மின்னகத்தை அணுகவும்* 94987 94987 என்ற எண்ணை அழைத்தோ அல்லது வாட்ஸ்அப் வாயிலாகவே தொடர்புகொள்ளலாம்.
CHINMAYA VIDYALAYA SRIMATHI LINGAMMAL RAMARAJU MATRICULATION HIGHER SECONDARY SCHOOL.RAJAPALAYAMTWENTY EIGHTH SCHOOL YEAR SPORTS MEET.at 8.00 a.m. on Wednesday, 14th October, 2026 at the School Premises, Lingammal Ramaraju Salai, Rajapalayam. PROGRAMME : 14.10.2026 / 8.00 a.m.On the FieldArrival of the Chief GuestFlag HoistingMarch PastArrival of the Olympic TorchOath TakingDeclaring the Sports Meet OpenDemonstration of Physical ExercisesSports EventsGuest EventsOn the StagePrayerWelcome AddressFelcitationAnnual Sports ReportAddress by the Chief GuestPrize DistributionVote of ThanksNational Anthem.
ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை தொடர்பாக சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால், அதிகாரப்பூர்வ உதவி எண்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.🪪 ரேஷன் கார்டு / TNEPDS: 1967🗳️ வாக்காளர் அட்டை / ECI: 1950🆔 ஆதார் / UIDAI: 1947⚠️ தெரியாத நபர்கள் அல்லது போலி இணையதளங்களுக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்.பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக மட்டும்.
ராஜபாளையம் பொன்னகரம் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (அக். 6) காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மின்சாரம் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் குறைகளை பொதுமக்கள் நேரில் தெரிவித்துப் பயனடையலாம் என ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.
REWA ராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம், ராஜபாளையம்முதியோர்களின் அமைதியான வாழ்க்கையை ஊக்குவிக்கவும்,மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கக் கோரி,அமைதியான போராட்டம்.இடம்: ராஜபாளையம் ரயில் நிலையம்.தேதி: 01-10-2026நேரம்: மாலை 05:00 முதல் 05.30 வரை அன்பு நண்பர்களே,அகில இந்திய மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு, மும்பை விடுத்துள்ள அழைப்பின்படி, 01-10-2026 அன்று நாடு முழுவதும் அமைதியான போராட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும், உள்ளூர் அளவில் கோட்ட ரயில்வே மேலாளர் அல்லது, உள்ளூர் ரயில் நிலைய மேலாளர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம், தேவைக்கேற்ப கோரிக்கை மனுவும் அளிக்கப்படும்.இந்த நியாயமான கோரிக்கையை வெற்றியடையச் செய்ய, REWA உறுப்பினர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.K.pethuraja - தலைவர் , N. Thevaraajhah - செயலாளர் (REWA) , Muthuramalingam - பொருளாளர்.
முன்னோர்களை நினைவுகூரும் முக்கியமான காலமாக இந்து மரபில் கருதப்படுவது மகாளய பட்சம். ஆண்டுதோறும் முன்னோர்களுக்காக வழிபாடுகள் மற்றும் தர்ப்பணம் செய்வதற்கு இந்த 15 நாட்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.இந்த ஆண்டு மகாளய பட்சம் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 வரை நடைபெறுகிறது என குறிப்பிடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்யும் வழக்கம் உள்ளது.தர்ப்பணம் செய்ய விரும்புபவர்கள், காலையில் 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் எள் மற்றும் தண்ணீர் கொண்டு தர்ப்பணம் செய்வது வழக்கம். 15 நாட்களிலும் செய்யலாம் அல்லது இறுதி நாளான அக்டோபர் 10-ம் தேதி அமாவாசை நாளில் மட்டும் செய்யலாம்.மேலும், காலையில் காகத்திற்கு எள் சாதம் வழங்குவதும், பசுவுக்கு அகத்திக் கீரை கொடுப்பதும் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.மகாளய பட்ச நாட்களில் சுப காரியங்கள் குறித்து பேசுவதையும், புதிய ஆடைகள் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்ற நம்பிக்கையும் சிலரிடம் உள்ளது.முன்னோர்களை நினைவுகூர்ந்து செய்யப்படும் தர்ப்பணம் மற்றும் வழிபாடுகள் குடும்ப நலனுக்கும் முன்னோர்களின் ஆசீர்வாதத்திற்கும் உதவும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாகும்.