25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முக்கிய அறிவிப்பு

Jan 08, 2026

மாபெரும் இலவச புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்.

மாபெரும் இலவச புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்இடம்: PACR மண்டபம் சக்கராஜா கோட்டை தேதி: 08.01.26 & 09-01-26 நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணிகார்கினோஸ் ஹெல்த்கேர் & ஐஐடி குவஹாத்தி, மும்பாய்,  சென்னை, IITகான்பூர், & கல்யான்சிங் கேன்சர் இன்ஸ்டியூட் மற்றும் WHO உலக சுகாதார மையத்தின் ஒத்துழைப்புடன் (புற்றுநோய் விழிப்புணர்வு, ஆராய்ச்சி மற்றும்  அதற்கான தீர்வுகளை உருவாக்குவது நோக்கம் மற்றும் ஆரம்ப கால புற்றுநோய் விளைவுகளை முன்கூட்டியே கண்டறிவது,சுய பரிசோதனை கல்வி (மார்பக, வாய், கர்ப்பப்பை வாய், நுரையீரல், பெருங்குடல், புரோஸ்டேட் புற்றுநோய்கள்) பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல். 12 பேர் கொண்ட மருத்துவ குழு இந்த முகாமை நடத்திட வந்து இருக்கிறார்கள். முக்கியமாக மகளிருக்கு  சிறப்பு பெண் மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள்.இந்த முகாமின் முக்கியத்தை கருத்தில் கொண்டு இரண்டு நாட்கள் (08-01-26 & 09-01-26) ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.  முகாம் சரியாக காலை 09:00 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.  REWA அங்கத்தினர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.கேன்சர் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.முக்கிய அறிவிப்பு : ஆதார் நம்பர், செல் போன் நம்பர் முக்கியம்.முகாம் ஒருங்கிணைப்பாளர் - S. இராமகிருஷ்ணன்.

Dec 20, 2025

இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் வழங்கும் வழக்காடு மன்றம்.

இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் வழங்கும் வழக்காடு மன்றம்,நாள் : 21.12.2025, ஞாயிற்றுக்கிழமைநேரம்: மாலை 5.00 -8.00 மணி வரைஇடம்: ஆனந்தா கார்டன் திருமண மண்டபம். தென்காசி ரோடு, இராஜபாளையம்தலைப்பு: நகைச்சுவை பெரிதும் பிறப்பது...சமூகத்திலா ? குடும்பத்திலா ?இலக்கிய வித்தகர் ,நடுவர்: பேராசிரியர். திரு. த. ராஜாராம் அவர்கள், நாகர்கோவில்.

Dec 03, 2025

SBI LIFE INSURANCE GRAND OPENING RAJAPALAYAM

SBI LIFE INSURANCE GRAND OPENING RAJAPALAYAM BRANCH Date: 05th December 2025Time: 9.00 am to 10.00 amVenue: Sri Madhava Complex, Ground Floor, 106-A, T.P. Mills Road, Rajapalayam - 626 117. 

Nov 29, 2025

எழுத்தாளர் திருமதி. ரஜினி பெத்துராஜாவின் நூல்கள் வெளியீட்டு விழா.

எழுத்தாளர் திருமதி. ரஜினி பெத்துராஜாவின் நூல்கள் வெளியீட்டு விழா  30.11.2025 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி, ருக்மணிஅம்மாள் அரங்கம் (காந்தி கலைமன்றம்), இராஜபாளையம்.வரவேற்புரை : திரு. P.R.ஸ்ரீதர் ரெங்கராஜா ஆடிட்டர், சென்னை.அறிமுகவுரை & ஏற்புரை எழுத்தாளர் ரஜினி பெத்துராஜாநூல்பெற்று வாழ்த்துரை : எழுத்தாளர் ராஜேஸ்வரி கோதண்டம், கவிஞர் இரா. ஆனந்திஎழுத்தாளர் மதுமிதா திரு. மயில் சுப்பிரமணியம்சரித்திர ஆசிரியர். G.K.N.H.S. பள்ளி கூகலூர், கோபி.விழாவில் கௌரவிக்கப்படுவோர் & வாழ்த்துறைப் போர்  : மருத்துவர் கு. கணேசன் & முது முனைவர் V. வெங்கட்ராமன் வரலாற்றுத்துறை எழுத்தாளர் இரா. நரேந்திரகுமார் எழுத்தாளர் கண்மணிராசாதிரு. K. வெங்கட்ரமணன் இயக்குநர், ரிதம் சிறப்புப் பள்ளி, இராஜபாளையம்.நன்றியுரை: திரு. S. வெங்கட்ராமன் தேசிய நல்லாசிரியர், ஸ்ரீவில்லிபுத்தூர். அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். 

Nov 26, 2025

அழகாபுரி - மீசலூர் ரெயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், 26.11.2025 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 06.00 வரை வழித்தடம் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், அழகாபுரி - மீசலூர் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 410 Rly KM:  544/400-500  என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.எனவே 26.11.2025 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, அந்த ஒரு வழித்தடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து,  மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Nov 21, 2025

SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA BOYS' HR. SEC. SCHOOL,RAJAPALAIYAM. SPORTS DAY CELEBRATION

SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA BOYS' HR. SEC. SCHOOL,RAJAPALAIYAM. SPORTS DAY CELEBRATION 22.11.2025, Saturday at 8.30 A.M.Venue: A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGEShenbaga Thoppu Road, Rajapalaiyam.  ProgrammePrayer : Our StudentsWelcome Address : Mr. K. SARAVANAN ,HeadmasterSri Rao Bahadur A.K.D. Dharma Raja Boys' Hr. Sec. School.Presidential Address :  Sri. A.K.D.KRISHNAMA RAJU ,Correspondent Sports Events : AthletesChief Guest's Address: & Prize distribution - Mr. P. SURESH B.A.Southern Railway, Global Sports Academy, ChennaiAnnual Sports Report - Mr. R. MUTHUMANI, Physical Education Teacher.Vote of Thanks : Mr. K. MUTHUKUMA ,Physical Education Teacher.National Anthem : Our Students

Nov 21, 2025

வாரணாசி ஸ்ரீ காசி அருள்மிகு விசாலாட்சி அம்மன் திருக்கோயில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா.

வாரணாசி ஸ்ரீ காசி அருள்மிகு விசாலாட்சி அம்மன் திருக்கோயில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நிகழும் மங்களகரமான விஸ்வாசு வருடம் கார்த்திகை மாதம் 15ஆம் தேதி (1.12.2025) திங்கட்கிழமை ஏகாதசி திதியும் ரேவதி நக்ஷத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் மகர லக்கனத்தில் சுபவேளையில் அருள்மிகு விசாலாட்சி அம்மன் விஸ்வேஸ்வரர் பெருமான்,ஜிர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளதால், அது சமயம் பக்தகோடி பெருமக்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகின்றோம்.

Nov 20, 2025

SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA GIRLS' HR. SEC. SCHOOL RAJAPALAYAM ,SPORTS DAY CELEBRATION.

SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA GIRLS' HR. SEC. SCHOOL RAJAPALAYAM ,SPORTS DAY CELEBRATION 21.11.2025, Friday at 8.30 A.M.Venue: A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGEShenbaga Thoppu Road, Rajapalaiyam.  ProgrammePrayer : Our StudentsWelcome Address : Mrs. K. SHENBAGAVALLIHeadmistress - InchargeSri Rao Bahadur A.K.D. Dharma Raja Girls' Hr. Sec. School.Presidential Address : Sri. A.K.D.KRISHNAMA RAJU (Correspondent)Sports Events : AthletesChief Guest's Address & Prize distribution : Mrs. L. SUJATHA B.A., M.PEd., M.Phil., NIS.,General Manager, Sports Development Authority of Tamilnadu, Jawaharlal Nehru Stadium, Chennai.Annual Sports Report  Mrs. S. MALA -Physical DirectorVote of Thanks : Mrs. V. PRIYAPhysical Education TeacherNational Anthem : Our Students 

Nov 08, 2025

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , இராசபாளையம் குறிஞ்சிச்செல்வர். கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு நினைவேந்தல்.

"இயற்கை அழகும்,நல்ல காற்றும்,அமைதியும்,பயமும் கலந்த மலைப்பாதைகளில் நடப்பதில் எனக்கு விருப்பம் அதிகம்"-குறிஞ்சிச் செல்வர்.கொ.மா.கோ.வனப்பு நிறைந்த வனப் பகுதியில் வாழ்கின்ற சூழலில் கொ.மா.கோ. படைத்த இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்தில் தனி இடம் பெற்றவை.ஆரண்யகாண்டம், ஏலச்சிகரம், குறிஞ்சாம் பூ காட்டுக்குள்ளே இசை விழா - என பல படைப்புகளை வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம். குறிஞ்சி பற்றிப் பேசினாலே பூரித்துப் போகும் மலை நகைக்காரர். இராஜபாளையம் ,இலக்கிய ரசனையும் வாசனையும் மிகுந்த ஊர். இலக்கியம் - எங்கள் செல்வம்  என்பதில் அதிகப் பெருமை எங்களுக்கு.இராஜையின் இலக்கிய அன்பரை குறிஞ்சிச் செல்வரைப் போற்றிப் பேச  9.11.25 ஞாயிறு அந்தி மழைப் பொழுதில், அன்புடன் அழைக்கிறோம்.

Oct 29, 2025

பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா 30.10.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள், எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 ஆகிய உரிமஸ்தலங்களில் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது .

எதிர்வரும் 30.10.2025 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு இணைப்பில் கண்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 உரிமஸ்தலங்கள் ஆகியவற்றில் உள்ள மதுக்கூடங்களில் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது. 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (License and Permit)  Rules,  1981-ன்படி 30.10.2025 அன்று ஒரு நாள் மட்டும்  தற்காலிகமாக  மூடுவதற்கு   மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் (F.L-1), F.L-2 மற்றும்  F.L-3 மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (License and Permit)  Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 26 27

AD's



More News