இன்று 11-10-25, 4ம் சனிக்கிழமையை முன்னிட்டு வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் கருட சேவையை பிரகாஷ் ராஜா மற்றும் சுதர்சனா குடும்பத்தினர் சார்பாக ஏற்பாடு ஆகி உள்ளது.நிகழ்வு மாலை 4.00 PM to 5.30 PM.அனைவரும் கலந்து கொண்டு வெங்கடேச பெருமாள் அருள் பெற அழைக்கிறோம்!!!ஓம் நமோ நாராயணாய!!!
மின்சாரம் தொடர்பான ராஜபாளையம் தாலுகா மக்களின் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் அக். 7 காலை 11:00 மணி முதல் குறைகளை கேட்டறிய இருப்பதால், மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரிய சம்பந்தப்பட்ட குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம், என்றார் ராஜபாளையம்மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ்.
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் 02.10.2025 காந்தி ஜெயந்தி அன்று நடைபெறவிருந்த கிராம சபைக்கூட்டமானது நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. மேற்படி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபைக்கூட்டம் 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராமசபை ஒப்புதல் பெறுதல், சாதிப்பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் (01.04.2025 முதல் 30.09.2025 முடிய), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், சபாசார் செயலி செயல்பாடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, தூய்மை பாரத இயக்க (ஊரக) திட்டம், தொழிலாளர் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டம், இதர பொருட்கள் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, 11.10.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் F.L-1, F.L-2, F.L-3 மற்றும் F.L-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, காந்தி ஜெயந்தி தினமான 02.10.2025 ( வியாழன் ) அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் F.L-1, F.L-2, F.L-3 மற்றும் F.L-11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981- நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் பெருமையுடன் வழங்கும் (23வது நிகழ்ச்சி)தீபாவளி சிறப்பு நகைச்சுவைப் பாட்டுப் பட்டிமன்றம்நாள் : 27.09.2025 சனிக்கிழமை நேரம் : மாலை 5.00 to 8.00 மணிஇடம் : ஆனந்தா கார்டன் திருமண மண்டபம், தென்காசி ரோடு, இராஜபாளையம். தலைப்பு: திரையிசையில் தடம் பதித்த கவிஞர் யார்?மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா?கவியரசர் கண்ணதாசனா? வாலிபக் கவிஞர் வாலியா?நடுவர் “இசைக்கலைமணி”இராஜபாளையம் உமாசங்கர் ,செயலாளர், இராஜபாளையம் கம்பன் கழகம் அவர்கள் பட்டுக்கோட்டையே ...! என வாதிடுபவர்"நகைச்சுவை நாவரசி"திருமதி. மலர்விழி,நாகர்கோவில் கண்ணதாசனே...! என வாதிடுபவர்"இசைக்குயில்"திருமதி. இந்திரா விஜயலட்சுமி ,மதுரைகவிஞர் வாலியே...!என வாதிடுபவர் "சிரிப்பு மத்தாப்பூ திருமதி. அன்னலட்சுமி -திருச்சி. அனுமதி இலவசம் - அனைவரும் வருக!
105வது இலவச பல் மருத்துவ முகாம்Dr.ஜெ.தினேஷ்பாபு BDS.,நாள் :14.09.2025 ஞாயிறு,நேரம் : 10 மணி முதல் மதியம் 2 மணி வரைஇடம் - ஸ்ரீ ராஜ்குமார் பல் & இம்ப்ளாண்ட் மருத்துவமனை488- தென்காசி ரோடு, சுபம் ஸ்வீட்ஸ் எதிரில், ராம்கோ & சித்ரா மருத்துவமனை அருகில், இராஜபாளையம்.இந்த முகாமில் இலவசமாக பல் எடுக்கப்படும். இலவச பல் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இம்மருத்துவ முகாம் நடைபெறும்.ஸ்ரீ ராஜ்குமார் பல் மருத்துவமனைசெல்: 94864 26199, 04653-223199
ஆதன மீதில் அரசு சிவலிங்கம் போதும் இரண்டினில் ஒன்றைத்தா பித்து மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வங் காதலிற்சோடசங் காணுப சாரமே- திருமூலர்நிகழும் மங்களகரமான விஸ்வாவஸு நாம ஸம்வத்ஸர ஆவணி மாதம் 13ம் தேதி (29.08.2025) வெள்ளிக்கிழமை சஷ்டி திதி நன்னாளில் காலை 9.00 மணிக்கு மேல்ஸ்ரீலஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் 36வது குருபூஜை விழா இராஜபாளையம் சிரஞ்சீவி மலைச்சாரலில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் நடைபெற உள்ளது.திரு S.விஸ்வநாதன் அவர்கள் தர்மாதிகாரி ஸ்ரீ சிருங்கேரி மடம், மேல்மங்களம்.கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். ஆன்மீக அன்பர்களும் சீடர்களும் கலந்து கொண்டு ஸ்ரீ சுவாமிகளின் குருவருள் பெற்றுய்ய வேண்டுகிறோம்.இப்படிக்கு ஸ்ரீ P.R.வெங்கட்ராம ராஜா தலைவர், ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் அறக்கட்டளை, இராஜபாளையம்.
தரம் சேல் , தரமான சேல் ! 50% தள்ளுபடி விலையில் உலக தரம் வாய்ந்தபெட் ஷீட்கள் , இதர படுக்கை விரிப்புகள், தலையணை, தலையணை உறைகள்Bed Sheets, Comforters, Quilts , Pillows , Pillowcoversபுதுவித டிசைன்கள் அட்டகாசமான வண்ணங்கள்இடம் - காந்தி கலை மன்றம், இராஜபாளையம்.நாள் - 08.08.2025 முதல் 10.08.2025 வரைநேரம் - காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைமேலும் தொடர்புக்கு +91 99444 41608.
இராஜபாளையம் ஆனந்தாஸ் M.B.ராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவாகநகைச்சுவை மன்றம் நடத்தும் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சிநாள் : 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை, நேரம் : மாலை 5.00 மணிஇடம் : ஆனந்தா கார்டன், தென்காசி ரோடு, இராஜபாளையம்.சிறப்புரைமுனைவர் சிவ. சதீஸ்குமார்,சொற்பொழிவாளர். சென்னை.அவர்கள்அனைவரும் வருக! வருகவென்றுஆனந்தாஸ் குடும்பத்தார்அன்புடன் அழைக்கின்றோம்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் மற்றும் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் பிரச்சித்தி பெற்ற பிரார்த்தனை திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இத்திருவிழா 20.07.2025 முதல் 28.07.2025 வரை நடைபெறுகிறது. 28.07.2025 (திங்கள் கிழமை) அன்று திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது.அதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் 28.07.2025 (திங்கள் கிழமை) அன்று விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் மாதத்தின் 2 வது சனிக்கிழமை 09.08.2025 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.