முதியோர்களுக்கும் தடுப்பூசி அவசியம்.
முதியோர்கள் அடிக்கடி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்கும் இறப்பதற்கும் தொற்று நோய்களேகாரணமாகும். இதைத் தடுப்பதற்குத் தடுப்பூசிஒன்றினால் மட்டுமே முடியும்.
தொற்று நோய்கள் வரக் காரணங்கள்
நோய்களைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
சத்துணவுக் குறைவினாலும் எதிர்ப்பு சக்தி குறையலாம்.
உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் தொற்று நோய்கள் வர வாய்ப்பு அதிகமுண்டு.
தோல் மிகவும் மிருதுபடுவதால் சுலபமாகத் தோல் சிராய்ப்பு அல்லது புண்கள் ஏற்படலாம்.
ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினால் சிறுநீர்ப்பையில் நீர் தேங்கிப்பூச்சித்தொல்லைகளுக்கு வழிவகுக்கலாம்.
பெண்களுக்கு ஹார்மோன் குறைவினால் பிறப்புறுப்புகளில் வறட்சி ஏற்பட்டு பூச்சித் தொல்லைகள் வர வாய்ப்பு உண்டாகலாம்.
உடலில் இருக்கும் பல நோய்களினாலும் எதிர்ப்பு சக்தி குறையலாம். உதாரணம்: நீரிழிவு நோய், தைராய்டு தொல்லை, சீறுநீரகச் செயலிழப்பு.
முதுமையில் காணும் தொற்றுநோய்கள்
நெஞ்சக நோய்கள்: ப்ளூ, நிமோனியா, காசநோய்
சிறுநீர் தாரை நோய்கள்: ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினாலும், பெண்களுக்கு இறுதி மாதவிடாய் சமயத்தில் பிறப்புறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களினாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சிறுநீர்ப்பை சரிவரச் சுருங்கி விரிவடையாத காரணத்தினால்
வயிறு: குடல் சார்ந்த பூச்சித் தொல்லைகள். உதாரணம்: டைபாய்டு, சீதபேதி, பித்தப்பையில் பூச்சித்தொல்லை மற்றும் கெட்டுப்போன உணவு உண்பதால்
தோல் சார்ந்த தொற்று நோய்கள்: நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குப் படை மற்றும் சிறுசிறு கொப்புளங்கள். அக்கி சார்ந்த அம்மை நோய்களும் வரலாம்.
மூளை, எலும்பு மற்றும் இதய வால்வுகளிலும் தொற்று நோய்கள் வரலாம்.
நோய் தடுப்பு என்றால் குழந்தைகளுக்கு மட்டும்தான் என்ற காலம் போய், முதியோர்களுக்கும் உண்டு என்ற வந்துள்ளது.
சில தொற்றுநோய்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் அந்நோய்கள் வராமலே தடுத்து நலமாக வாழமுடியும். முதுமைக் காலத்தில் நலமாய் வாழச் சீரான உணவு முறையும், உடற்பயிற்சியும் எப்படி அவசியமோ அதுபோலத் தடுப்பூசியும் அவசியம்.
0
Leave a Reply