விக்கல் தொடர்ந்து இருப்பின் அது நல்லதல்ல, கெட்டதுதான்
விக்கல் என்பது ஒருவருடைய உதர விதானம் அவரை அறியாமலேயே துடிப்பதால் ஏற்படும் ஒரு சத்தமே ஆகும்.வயதான காலத்தில் விக்கல் ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்தான அறிகுறி என்கிறார்கள். விக்கல் ஏற்பட்டவர் களிடம் தீடீரென்று மிக்க அதிர்ச்சியைக் கொடுக்கும் செய்தியை சொன்னால் விக்கல் நின்றுவிடும் என்று சொல்கிறார்கள். இவையெல்லாமஎந்த அளவிற்கு உண்மை.உதரவிதானம் என்பது வயிற்றுக்கும் நெஞ்சுப்பகுதிக்கும் இடையிலே இருக்கும் ஒரு மெல்லிய சதையாகும். இதை நம்விருப்பம் போல் இயக்க முடியாது.
விக்கலுக்கு பல காரணங்கள் உண்டு .
குளிர்பானங்கள் அருந்துவது,
அதிவிரைவாக உண்ணுவது,
மன உளச்சல்,
வயிற்றுப் புண்,
நீரிழிவு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழத்தல்,
தூக்க மாத்திரை, ஸ்டீராய்டு மாத்திரைப் பயன்பாடு,
நரம்பு சார்ந்த தொல்லைகள்: உதாரணம் - பக்கவாதம், மூளையில் ஏற்படும் கட்டி உதரவிதானத்துக்குக் கீழே சீழ்க் கட்டி
சோடியம், பொட்டாசியம் குறைந்தாலோ, அதிகரித்தாலோ விக்கல் வரலாம்
சில மணித்துளிகள் மட்டுமே விக்கல் வந்து போவதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை, விக்கல் தொடர்ந்து இருப்பின் உடனே மருத்துவரை நாட வேண்டும். முதலில் விக்கலுக்கான காரணத்தைக் கண்டறிந்து தக்க சிகிச்சை அளிக்க வேண்டும். விக்கல் என்றாலே உயிருக்கு ஆபத்து என்று எண்ண வேண்டாம்.விக்கல் தொடர்ந்து 24 - 48 நேரத்துக்கு மேல் இருந்தால், காலம் தாழ்த்தாமல் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். சாதாரணமாக வரும் விக்கலுக்கு Baclofen மற்றும் Chlorpromazine மாத்திரையை மருத்துவர் பரிந்துரைப்பார். மருத்துவரின் ஆலேசானையின்றி ஒருவர் மேற்கண்ட மருந்துகளை உண்ண வேண்டாம்.ஒரு சில மணித்துளிகள் ஏற்பட்டால் அது தானாகவே சிகிச்சையின்றிச் சரியாகி விடும். ஆனால், விக்கல் தொடர்ந்து இருப்பின் அது நல்லதல்ல, கெட்டதுதான்.
0
Leave a Reply