வளைவு விரல் .
வலது கையில் உள்ள மோதிர விரல் அடிக்கடி மடங்கிப் போய்விடுகிறது. அதை இடது கையை வைத்து நிமிர்த்தினால் பழைய நிலைக்கே வந்துவிடுகிறது. விரல் மடங்கும்பொழுது சற்று வலிக்கிறது. மற்றபடி செய்யும் வேலைகளில் எந்தத் தொந்தரவும் இல்லை. இது எதனால் வருகிறது. இதற்கு சிகிச்சை முறை.
உங்களுக்கு ஏற்படும் தொல்லை 'வளைவு விரல் தொல்லை என்று சொல்லப்படும். இது எதனால் வருகிறது என்ற காரணம் சரியாகத் தெரியவில்லை. நீரிழிவு மற்றும் முடக்குவாதம் உள்ளவர்களுக்கு இந்தத் தொல்லை வர வாய்ப்பு அதிகம், விரல்களை அதிகமாக மற்றும் அழுத்தமாக உபயோகப்படுத்துபவர்களுக்கு இத்தொல்லை வரலாம். முதுமையில் இத்தொல்லை வர வாய்ப்பு அதிகம்.
அறிகுறிகள்
விரல்கள் சாதாரண நிலையில் இருக்கும் போது வலி ஏதுமிருக்காது. விரல்களை மடக்கி, நீட்டும் போது ஒருசில சத்தத்துடன் வலி ஏற்படும். தொடர் ஓய்வுக்குப் பிறகு விரலை நீட்டிமடக்கும்போது வலி ஏற்படலாம். உதாரணம்: இரவுக்குப் பின் காலையில் இந்த வலி வரலாம். இந்தத் தொல்லை வலது கைவிரல்களில் வந்தால், உணவு உண்ணச் சிரமமாக இருக்கும். முடிந்தால் ஸ்பூன் அல்லது இடது கையில் சாப்பிடலாம்.
சிகிச்சை முறை
வலி அதிகமாக இருப்பின் விரலுக்குச் சற்று ஓய்வு கொடுக்கலாம்.
இயன்முறைச் சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
தேவைப்படும்போது வலி நிவாரணியை எடுத்துக்கொள்ளலாம்.
மேற்கண்ட வழிமுறைகளில் பலன் கிடைக்காவிட்டால், விரலின் அடிப்பாகத்தில் ஸ்டீராய்டு ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். இந்த ஊசியைத் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் போட்டுக்கொள்ளக் கூடாது.ஊசி போட்டும் வலி குறையவில்லை என்றால் அறுவைசிகிச்சைமூலம்நல்லபலன் கிடைக்கும்.
0
Leave a Reply