வயிற்று வலி
வயிறுஎன்பதுஇரைப்பை, சிறுகுடல், பெருங்குடல்,குடல்வால், கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், கணையம், சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, புராஸ்டேட் சுரப்பி (ஆண்களுக்கு), கர்ப்பப்பை ஓவரிகள் (பெண்களுக்கு) ஆகிய பல உறுப்புகள் அடங்கிய ஒரு பகுதியாகும்.
வயிற்று வலி வரக் காரணங்கள்.
இரைப்யைப் புண், புற்றுநோய் கட்டி.
சிறுகுடலில் ஏற்படும் புண், நோய்த்தொற்று.
வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல்.
கல்லிரல் பாதிப்பு, உதாரணம்: காமாலை.
பித்தப்பையில் கற்கள்.
கணையத்தில் ஏற்படும் அழற்சி.
சிறுநீரகத்தில்உள்ளகற்கள், கட்டி, நோய்த்தொற்று.
சிறுநீர்ப்பையில் ஏற்படும் கட்டி, நோய்த்தொற்று.
புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் நோய்த்தொற்று.
கர்ப்பப்பையில் ஏற்படும் புண், கட்டி.
மருந்துகளின் விளைவு / வலி நிவாரணி.
உறுப்புகள் பாதிக்கப்பட்டதைப் பொறுத்து நோயின் தொல்லைகளும் மாறுபடும். உதாரணம்.
இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு உணவு உண்டபின் வலி அதிகமாகும்.
குடற்புண் உள்ளவர்களுக்குப் பசி எடுக்கும் போதெல்லாம் வயிற்றுவலி ஏற்படும்.
சிறுகுடலில் நோய்த்தொற்று (உதாரணம்: காசநோய்) ஏற்பட்டால் பசி குறையும். எடையும் குறையும், லேசாக காய்ச்சல் இருக்கும், வயிறு சற்று வீங்கினாற்போல இருக்கும்.
பித்தப்பையில் உள்ள கற்களின் விளைவாக வயிற்றின் வலது பக்கத்தில் (மேல் பகுதி) வலி இருக்கும். அது, வலது முதுகு வரையிலும் பரவலாம், வலி விட்டு விட்டும் வரலாம்.
சிறுநீரகத்தில் உள்ள கற்களினால் ஏற்படும் வலி. வலது அல்லது இடதுபுறம் வலி ஏற்படும், அது விட்டு விட்டும் வரும், வலி வயிற்றின் அடிப்பாகம் வரை இறங்கும்.
வலி ஏற்பட்டால் சுயசிகிச்சை ஏதும் செய்யாமல், காலம் தாழ்த்தாமல் மருத்துவரை நாடி, தக்க சிகிச்சை பெற்று வயிற்று வலியின்றி நலமாக வாழ்வோம்.
0
Leave a Reply