முதுமை காலத்தில் ஆரோக்கியமாக வாழ….
உடற்பயிற்சி என்றால் கனமான பொருள்களை தூக்குவது, ஓடுவது, உட்கார்வது என்று நினைக்க வேண்டாம். வேகமான பயிற்சியும் அவசியமில்லை. நாற்காலியில் உட்கார்ந்தபடி கைகளை கால்களை அசைத்து இலேசான பயிற்சி செய்யலாம். நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
வாரத்துக்கு 150 நிமிடங்கள் வரை பயிற்சி செய்ய வேண்டும். வீட்டிலேயே அடைந்து கிடக்காமல் அருகில் இருக்கும் பூங்கா, கோவில் போன்ற இடங்களுக்கும் செல்லலாம். பயிற்சியின் போது அல்லது அவ்வபோது உடலில் சூரிய ஒளி பட வேண்டும். அப்பொதுதான் வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் இருக்கும்.
வயதான காலத்திலும் இனிப்புகளை அதிகம் விரும்புவது, கார சாரமான உணவை எடுத்துகொள்வது, துரித உணவுகளை விரும்பி உண்பது என எல்லாமே மோசமான பழக்கங்கள் தான். இனி நாக்குக்கு நீங்கள் அடிமை ஆக கூடாது.
இந்தகாலத்தில்உங்களுக்குநோய்எதிர்ப்புசக்திகுறையக்கூடும்.அதைஈடுசெய்யும்வகையில்பழங்கள், காய்கறிகள், கீரைகள், கொட்டைகள் போன்றவற்றை எடுத்துகொள்ள வேண்டும். இது நோய்த்தொற்றை உண்டாக்கும் வைரஸ் மற்றும்பாக்டீரியாக்களிடமிருந்து பாதுகாக்கிறது. இது ஆக்ஸிஜனேற்றிகளின் நல்ல மூலமாகும். இது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.
ஆண்கள்புகைப்பழக்கம்மற்றும்மதுப்பழக்கத்தைகொண்டிருந்தால்கண்டிப்பாகதவிர்க்கவேண்டும்.பாக்கு, புகையிலை, வெற்றிலை என எல்லாமே வயதான காலத்தில் தவிர்க்க வேண்டியவையே.
உடல் உறுப்புகள் வயதான காலத்தில் தங்களது பணியை மெதுவாக்கும். இந்த நேரத்தில் இதன் பாதிப்புகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். புகைப்பிடிப்பதால் பக்கவாதம், இதய செயலிழப்பு, பெருந்தமனி தடிப்பு, விறைப்புத்தன்மை தோல் நெகிழ்ச்சி உண்டாக்க கூடும். ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருந்தால் நீங்கள் இந்த பழக்கத்திலிருந்து வெளியேறியே தீர வேண்டும்.
வருடம் ஒரு முறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். கண் மருத்துவரை சந்தித்து கண் கோளாறுகள் குறித்த பரிசோதனை செய்ய வேண்டும். காது கேட்பதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் காது மருத்துவ நிபுணரை அணுக வேண்டும். வயதான காலத்தில் தான் இந்த கோளாறுகள் அதிகரிக்க கூடும் என்பதால் இந்த பரிசோதனை அவசியம்.
0
Leave a Reply