முதுமை என்பது ஒரு பருவமே.நோயல்ல.!
முதுமை என்பது ஒரு பருவமே. முதுமையே ஒரு நோயல்ல. ஆனால் முதுமையில் பல நோய்கள் வர வாய்ப்புகள் அதிகமாகின்றன.
நாம் ஏன் முதுமை அடைகிறோம்? என்றுமே இளமையுடன் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்!ஆரம்பம் என்கிற ஒன்று இருந்தால் அதற்கு முடிவு என்று ஒன்று உண்டு. ஆகையால் இளமைக்கு முதுமை ஒரு முடிவு.
முதுமை அடை வதற்கு என்ன காரணங்கள் என்று பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இன்னமும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. முதுமை அடையப் பல காரணங்களைக் கூறுகிறார்கள்.
முன்னோர்கள் நீண்ட நாட்கள் வழ்ந்திருந்தால் அவர்கள் சந்ததியினரும் அவ்வாறே இருப்பார்கள்.
வயது ஆக ஆக உடலில் உள்ள முக்கிய உயிர் அணுக்கள் குறைகின்றன.
திறனற்ற உயிரணுக்கள் உற்பத்தி ஆகுதல்.
உயிரணுக்கள் பெருகி வரும் தன்மை.
கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படாமல் தங்கி விடுதல்.
ஃப்ரிரேடிகல்ஸ் என்ற திரவம் உடலில் அதிகம் சேர்ந்து மற்ற திசுக்களை அழித்தல்.
உடல்வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன் குறைதல்.
நமது மூளைப் பகுதியிலுள்ள பிட்யூட்ரி என்னும் நாளமில்லாச் சுரப்பி Killer hormone எனும் திரவத்தைச் சுரக்கிறது. இந்தத்திரவம் பெண் பூப்பெய்தும் பருவத்தில் சுரக்க ஆரம்பிக்கிறது. இத்திரவம் உடலை அழித்து மரணத்தை ஏற்படுத்துகிறது. அதனால், ஒரு பெண் பூப்படையும் வயது தள்ளிப்போனால், அவள் வாழும் வயதும் அதிகரிக்கும் என்ற ஒரு கருத்து உண்டு,
தலையிலுள்ள மூளைப் பகுதியில் பீனியல் எனும் சுரப்பி Melotinin எனும் திரவத்தைச் சுரக்கிறது. இளமையைப் பாதுகாக்க இத்திரவம் மிகவும் அவசியம். ஒருவர் 25 வயதை அடையும்போது இத்திரவம் குறைகிறது. ஆகையால் முதுமை அப்போதே தொடங்க ஆரம்பித்து விடுகிறது.
இவ்வுடல் மாற்றங்கள் காலத்தால் ஏற்படுவதுஎன்றாலும்,முதுமைஅடைந்தவர்க்கெல்லாம் இம்மாற்றங்கள் ஏற்படுவதில்லை. சிலருக்குச் சில மாற்றங்களே நிகழும் .மேற்கண்ட மாற்றங்கள் முதுமையில் ஏற்படினும், வாழ்க்கையைப் பக்குவமாக அமைத்துக்கொண்டால் முதுமையிலும் இன்பம் காணலாம்.
0
Leave a Reply