மூட்டுத் தேய்மானத்தால் ஏற்படும் முதல் அறிகுறி.
மூட்டுத் தேய்மானத்தால் முழங்கால், இடுப்பு முதுகுத் - தண்டு மற்றும் கழுத்துகளின் மூட்டுகள் மிகுதியாகப் பாதிப்புக்கு உள்ளாகும். முதலில் மூட்டு வலி விட்டுவிட்டுத் தோன்றும். படிக்கட்டு ஏறும்போதும் தொடர்ந்து தரையில் அமர்ந்திருந்து எழும்போதும் முழங்கால் வலிமிகுதியாய் ஏற்படும். காலையில் படுக்கையிலிருந்து எழும்போது மூட்டுகள் சற்று இறுக்கமாக இருக்கும். முழுங்காலை மடக்கி நீட்டும்போது ஒருவித சத்தமும் உண்டாகும். இடுப்பு, முழங்கால்களில் வலி மிகுதியாய் இருந்தால் நடை குறையும். தள்ளாடிக் கீழே விழவும் நேரிடலாம். நாள்பட்ட வலியினால் மனம் சோர்வு அடையும். இரவில் தூக்கம் பாதிக்கும்.
இந்நோய் கழுத்திலுள்ள மூட்டுகளைத் தாக்கும் பொழுது (cervical spondylosis) கழுத்தின் அசைவு குறைந்து, பின்புறம் வலி தோன்றும்.இவ்வலி கழுத்தை அசைக்கும் போது தோள்பட்டைக்கும், கைகளுக்கும் பரவிச் செல்லும். மேலும் கழுத்தினைப் பக்கவாட்டிலும் மேலும் கீழும் திருப்பும் பொழுதும் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் மயக்கம் ஏற்படும்.
இந்த நோய் தண்டுவடத்தைத் தாக்கும்போது கை கால்களில் மரத்த உணர்ச்சி ஏற்பட்டு, அவை வலிமை இழக்கும். நடை தள்ளாடும். இந்நோய் கீழ் முதுகிலுள்ள எலும்புகளைப் பாதிக்கும்போது (lumbar spondylosis) குனிந்து நிமிரும்போது முதுகுவலி அதிகமாகும். சில நேரங்களில் முதுகிலிருந்து இரண்டு கால்களுக்கும் வலி பரவிச் செல்லும்.
தேய்மானத்தினால் மூட்டு வலி ஏற்படுவதால் மருந்துகள் மற்றும் மாற்றுச் சிகிச்சைகள் வலியைக் குறைக்க முடியுமே தவிர பூரணமாகக் குணப்படுத்த முடியாது. தேய்மானம் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
0
Leave a Reply