25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தனியே வசிக்கும் முதியோர்களின் கவனத்திற்கு...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தனியே வசிக்கும் முதியோர்களின் கவனத்திற்கு...

கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வரும் இன்றைய காலத்தில் தனித்திரு நிலையில்தான் பல முதியோர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கல்விக்காகவோ, திருமணமாகியோ, வேலை விஷயமாகவோ குழந்தைகள் வெளியூர் சென்று விடுகிறார்கள். இதனால் முதியோர்கள் தனியாக வசிக்க வேண்டிய ஒரு கட்டாயச் சூழல் உருவாகி வருகிறது. இப்படித் தனியாக வசிப்பவர்கள் 'விழித்திரு' மனநிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சில தற்காப்பு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான்தனிமையும் இனிமையாக மாறும்.

தனியாக வசிக்கும் முதியோர்கள். அக்கம்பக்கத்தினரிடம் நல்ல உறவை வைத்துக்கொள்வது அவசியம்.

அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதையோ, அவர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதையோ தவிர்க்க வேண்டும்.

கதவுகளைக் கொஞ்சமாகத் திறக்கும்விதமாகக் கதவுக்கும் வாசலுக்கும் இடையே சங்கிலி பொருத்திக்கொள்ள வேண்டும்.

வீட்டில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்த வேண்டும். அந்தக் காட்சிகளை உலகின் எந்த மூலையிலிருந்தாலும் உங்கள் குழந்தைகள், உறவினர்கள் பார்க்கும்விதமாக அமைத்துக் கொள்ளலாம். இந்தப் பாதுகாப்பு உணர்வே நிம்மதியை அளிக்கும்.

வீட்டில் டார்ச்லைட் வைத்திருப்பது அவசியம். இன்வெர்ட்டர் இணைப்பு இருந்தால்,மின்சாரம் தடைப்பட்டாலும் கவலை இல்லாமல்இருக்கலாம்.

அவசர உதவி தேவைப்படும்போது போன் அழைக்க, வீட்டுக்கு அருகே இருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்களின் தொலைபேசி செய்து எண்களை வைத்திருங்கள்.

சற்று அதிக சத்தம் எழுப்பக்கூடிய அலாரமும் வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

தினமும் வெளியூரில் உள்ள உங்கள் குழந்தைகள், உறவினர்களுடன் பேசுங்கள். அது நீங்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதை உறுதி செய்யும்."

சிறிது தூரமே வெளியே சென்றாலும், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய உங்களின் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். சில சமயங்களில் இது உயிரைக்கூடக் காக்க உதவும்.

வெளியில் செல்லும்போது தேவையில்லாமல் அதிக நகைகளை அணிய வேண்டாம். முதுமையில் நகை மற்றும் ஆடை ஆபரணங்களில் அதிக நாட்டம் வேண்டாம். இதன்மூலம் தேவையில்லாத சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

விழாக்களுக்குச் செல்லும்போது முடிந்தவரை தனியாகச் செல்ல வேண்டாம். யாரையேனும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்.

 பாதுகாவலர் மற்றும் வேலையாட்களை நியமிப்பதில் கவனம் தேவை. வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் டிரைவர் போன்றவர்கள் முன்னே பணத்தைப் பற்றியோ நகைகளைப் பற்றியோ பேச வேண்டாம்.

நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளைப் பாதுகாப்புக்காக வளர்க்கலாம். பாசமாக இருக்கும் அவை மனதுக்கும் ஆறுதல் தரும்.

இரவில் சிறிய விளக்கு எரியுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வெளிச்சம் இருக்கும் இடத்துக்குத் திருடர்கள் பெரும்பாலும் செல்ல மாட்டார்கள்.

மேற்கண்ட வழிமுறைகளை முடிந்தளவுக்குக் கடைப்பிடியுங்கள். காலம் செல்லச் செல்ல நீங்கள் தனியாக இருப்பதை மறந்து பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை உணர்வீர்கள் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News