ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42வது வார்டு ஆர்.ஆர்.நகர் பகுதி சத்திரப்பட்டி சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தனியார் பைப் லைன் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பதிக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் குடிநீர் வீணாக சாலையில் சென்றன. மேலும் அந்த சாலை முழுவதும் குழி தோண்டி வைத்துள்ளனர். இதனால் கனரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதேபோல் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்வதால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கவும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் மாரியம்மன் கோயில் முன்பு தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது.ராஜபாளையம் புதுப்பாளையம்,கடம்பன்குளம், தெற்குவெங்கா நல்லுார், வடக்கு வெங்காநல்லுார், அலப்பசேரி, கருங்குளம், அப்பனேரி உட்பட பல்வேறு பகுதிகளில் தற்போது நெல் அறுவடை தொடங்க உள்ளது.வெளி மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்கும் நிலையை தவிர்ப்பதற்காக நேரடி விற்பனை நிலையம் துவக்கப் பட்டுள்ளது. ராஜபாளையம் தாசில்தார் ராஜிவ் காந்தி துவக்கி வைத்தார்.உதவி வேளாண் அலுவலர் சோமசுந்தரம், விவசாய சங்க தலைவர் ராமச்சந்திர ராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.நெல் கொள்முதல் நிலையத்தில் சன்னரக நெல் கிலோ 24.50, மோட்டா ரகம் 24.05 விலை நிர்ண யிக்கப்பட்டு தினமும் 800 மூடைகள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள புல்லுபத்தி காடு அருகே 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா மற்றும் வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.இந்தநிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து தென்னை, வாழை, மா என 100க்கும் மேற்பட்ட மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இத னால் தங்களுக்கு ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மாம்பழ சீசன் நேரத்தில் யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து மரங்களை சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். எனவே வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .
ராஜபாளையம் வணிகர்கள் ,வணிக நிறுவனங்கள் அதிக வாடகை வசூலிக்கப்படுவதை சமாளிக்க கடைகளின் திறப்பு நேரத்தை 24 மணி நேரமும் திறந்து வைக்க தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை கொடுத்துள்ளனர். அதிக சொத்து வரி விதிப்பிற்கு, மாநில அளவில் கீழ்வரும் முதல் மூன்று நகராட்சிகளில் ராஜபாளையம் முக்கிய இடம் பிடித்துள்ளது. கடை உரிமையாளர்கள், வணிகம் நடத்துபவர்களிடம் வாடகையை உயர்த்தி வசூலிப்பதால் தொழில் நடத்துவதில் சிரமம் எதிர்கொள்கின்றனர்.பாதுகாப்பை காரணம் காட்டி இரவு 11:00 மணிக்கு மேல் கடையை அடைக்க போலீசார் கெடு பிடி விதித்து வரும் நிலையில் தமிழக அரசு இம்மாதம் ஜூன் 4 முதல் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.போலீசார் பாதுகாப்பு பற்றாக்குறையை காரணம் கூறி ராஜபாளையத்தில் இரவு 11:00 மணிக்கு மேல் அனுமதிக்க மறுப்பதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.ஏற்கனவே மாநில அளவில் உயர் வரி விகிதம் விதிக்கப்பட்டும், தொடர்ந்து மின் கட்டண உயர்வு விதிப்பு போன்ற வற்றால் நிலையற்ற தன்மையை சந்தித்து வரும் சூழலில் 24 மணி நேரம் திறக்க விருப்பப்படும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு தடை ஏற்படுத்த கூடாது என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
தென்காசியின் போககுவரத்து நெரிசலை தவிர்க்க திட்டமிடப்பட் டுள்ள பைபாஸ் ரோடு,அரசு நிலங்களை கையகப்படுத்தி திட்டத்திற்கு நிதி வழங்கிய பிறகும்,ஒப்பந்ததாரர்களால் தாமதம் ஏற்படுத்துகின்றனர் எனபொதுமக்கள் புகார் கூறுகின்றனர். பணி மிகுந்த தாமதமாக நடக்கிறது.இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் ,திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்கள் ஊருக்குள் சென்று செங்கோட்டை செல்லவோ, மதுரை சாலையில் செல்லவோ மிகுந்த சிரமப்படுகின்றன. மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எனவேதென்காசி பைபாஸ் ரோடுபணியை விரைவு படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் .
வெம்பக்கோட்டை ரோட்டில் சத்திரப்பட்டி, கீழராஜகுலராமன், ஆலங்குளம் ராஜபாளையம் கிழக்கு பகுதி ரயில்வே மேம்பாலம் அடுத்து உள்ள பகுதிகளுக்கு இணைப்பு ரோடாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி வாகன போக்குவரத்து சாலையை ,மாநிலச்சாலையாகதரம்உயர்த்தினர்.ரயில்வேமேம்பாலம்முதல்பொன்னகரம்வரைஅதிககுடியிருப்புகளும், பள்ளி, கல்லுாரிகள், தொழிற்சாலைகள், உள்ள 1.5 கி.மீ தொலைவு போக்குவரத்தை கருத்தில் கொண்டு சாலையின் இரண்டு பக்கமும் இருந்த நிழல் தரும் மரங்களை அகற்றி வாகனங்கள் முந்துவதை தவிர்க்க சென்டர் மீடியன் அமைத்தனர். மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி சென்று வந்தனர்.இந்நிலையில் இப்பகுதியில் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்புகள் கடைகளின் தாழ்வாரங்கள், வாகன நிறுத்தம், மண்மேடிட்டு அடைப்பு, கடைகளின் விளம்பர பலகை என சாலையின் அகலமே சுருங்கிவிட்டது. இதனால் கனரக வாகனங்கள் வரும்போது ஒதுங்க வழியின்றி பாதசாரிகள், டூவீலரில் செல்வோர் இன்னலுக்கு உள்ளாவது டன் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். கண்டுகொள்ளாத அதிகாரிகளால் ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோடு தொடர் ஆக்கிரமிப்புகளால் அகலம் சுருங்கி வாகன ஓட் டிகள் தடுமாறும் நிலைக்கு மாறி உள்ளதுஆக்கிரமிப்புகளை அகற்றி அகலமான சாலையை மீட்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரூ.3.40 கோடி மதிப்பில் மே 29ல் திறக்கப்பட்டுள்ளது. தினமும் 50 டவுன் பஸ்களுடன் 300க்கும் அதிகமான டிரிப்கள் வந்து செல்லும்.ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா கண்டு ஒன்பது நாள் ஆகியும் இதுவரை புறகாவல் நிலையம் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது.சுற்றிலும் டாஸ்மார்க் கடைகளுடன் குடிமகன்கள் தொல்லை உள்ளதால் இரவு பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகி வருகிறது.தொடங்கி 9 நாட்கள் கடந்தும் பஸ் ஸ்டாண்ட் முன்பு அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையம் செயல்படாமல் பூட்டப் பட்டுள்ளது.இதனால் பெண் பயணிகள் குறிப்பாக இரவு நேரத்தில் அச்சத்திற்கு உள்ளாகின்றனர். விரைவில் செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரூ.3 கோடி40 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு மே29ல் திறக்கப்பட்டு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல் லாததால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.2 ஆண்டுகளைக் கடந்து மே29ல் திறக்கப்பட்டது. இதில்23 கடைகள்,2 ஓட்டல்கள், பயணிகள் காத்திருப்பு அறை, போலீஸ் அவுட்போஸ்ட், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற் படுத்தப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் கூறியது.இந்நிலையில் தினமும்50க்கும் அதிகமான டவுன் பஸ்கள், ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை, பயணிகள் அமர்வதற்கான இருக்கை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பாதுகாப்பிற்கு போலீஸ் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பயணிகள், பஸ் டிரைவர்கள் அலைக்கழிப்பிற்கு ஆளாகின்றனர்.பயணிகள் கூறுகை யில், இரண்டு ஆண்டுகள் காத்திருந்து விட்டோம். தற்போது எந்த வசதியும் செயல்படுத்தாமல் அவசர கதியில் திறந்திருப்பது யாரை திருப்திபடுத்த என தெரியவில்லை. தினமும் நுாற்றுக்கணக்கான பெண்கள், மாணவிகள் கழிப்பறை இல்லாமல் படும் சிரமத்தை அதிகாரிகள் எப்போது சரி செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம்ராஜபாளையம் தாலுகாவுக்கு உட் பட்ட சேத்தூர், தேவதானம், கோவிலூர், சாஸ்தாகோவில், அசையாமணி விளக்கு, சொக்கநாதன்புத்தூர்,சோலைசேரி, கிருஷ்ணாபுரம், மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தேவதானம், கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள10 ஆயிரம்ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு2 ஆயிரம் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். சில இடங்களில் விளைந்த நெற்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வருகிறது.ஒரு சில இடங்களில் அறுவடைப்பணிகள்நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் மனு அளித்து எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையத்தில் ரோட்டில் தெரியும் பராமரிப்பற்ற கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பதுடன் வாகன ஓட்டிகள் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.ராஜபாளையம் முடங்கி யார் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, தென்காசி ரோடு, டி.பி மில்ஸ் ரோடு, சத்தி ரப்பட்டி ரோடு என முக் கிய சாலைகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை நகர்ப்புற உட்புற சாலை கள் அனைத்திலும் மாடுகள் திரிந்து வருகின்றன. பகல் இரவு என எந்த நேரமும் ,ரோட்டின் ஒரு பகுதியை தங்குமிடமாக மாற்றி உறங்குகின்றன. இதை அறியாமல் வேகமாக வரும் வாகன ஓட்டி கள் மோதி ,விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர்.மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு வாகனங்களில், மோதுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. மாடுகளை முறையாக பராமரிக்காமல் சாலைகளில் அவிழ்த்துவிடும் ,உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டும், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் விட்டுள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர்.