25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மா மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மா மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள புல்லுபத்தி காடு அருகே 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா மற்றும் வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து தென்னை, வாழை, மா என 100க்கும் மேற்பட்ட மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இத னால் தங்களுக்கு ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். 

மாம்பழ சீசன் நேரத்தில் யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து மரங்களை சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். எனவே வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News