25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோடு தொடர் ஆக்கிரமிப்புகளால் அகலம் சுருங்கி வாகன ஓட் டிகள் தடுமாறும் நிலை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோடு தொடர் ஆக்கிரமிப்புகளால் அகலம் சுருங்கி வாகன ஓட் டிகள் தடுமாறும் நிலை

வெம்பக்கோட்டை ரோட்டில் சத்திரப்பட்டி, கீழராஜகுலராமன், ஆலங்குளம் ராஜபாளையம் கிழக்கு பகுதி ரயில்வே மேம்பாலம் அடுத்து உள்ள பகுதிகளுக்கு இணைப்பு ரோடாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி வாகன போக்குவரத்து சாலையை ,மாநிலச்சாலையாகதரம்உயர்த்தினர்.ரயில்வேமேம்பாலம்முதல்பொன்னகரம்வரைஅதிககுடியிருப்புகளும், பள்ளி, கல்லுாரிகள், தொழிற்சாலைகள், உள்ள 1.5 கி.மீ தொலைவு போக்குவரத்தை கருத்தில் கொண்டு சாலையின் இரண்டு பக்கமும் இருந்த நிழல் தரும் மரங்களை அகற்றி வாகனங்கள் முந்துவதை தவிர்க்க சென்டர் மீடியன் அமைத்தனர். மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி சென்று வந்தனர்.

இந்நிலையில் இப்பகுதியில் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்புகள் கடைகளின் தாழ்வாரங்கள், வாகன நிறுத்தம், மண்மேடிட்டு அடைப்பு, கடைகளின் விளம்பர பலகை என சாலையின் அகலமே சுருங்கிவிட்டது. இதனால் கனரக வாகனங்கள் வரும்போது ஒதுங்க வழியின்றி பாதசாரிகள், டூவீலரில் செல்வோர் இன்னலுக்கு உள்ளாவது டன் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். கண்டுகொள்ளாத அதிகாரிகளால் ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோடு தொடர் ஆக்கிரமிப்புகளால் அகலம் சுருங்கி வாகன ஓட் டிகள் தடுமாறும் நிலைக்கு மாறி உள்ளதுஆக்கிரமிப்புகளை அகற்றி அகலமான சாலையை மீட்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News