25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையம் பயணிகள் முழு பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட்டினால் அவதி  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் பயணிகள் முழு பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட்டினால் அவதி  .

ராஜபாளையம் நகர் பகுதி நடுவே தேசிய நெடுஞ்சாலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்த நிலையில், கட்டடங்கள் பலமிழந்ததால்,ரூ.3கோடி 40லட்சம்செலவில்புதுப்பிக்கப்பட்டுகலைஞர்நகர்புறமேம்பாட்டுதிட்டத்தின்கீழ் ,மே 29 இல் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது.

தினமும் 300க்கும் அதிகமான பஸ்களும் ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்லும் இதுவரை பயணிகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர், கழிப்பறைஉள்ளிட்ட அடிப்படை வசதிகள் ,கிராமங்களுக்கு செல்லும் நேர அட்டவணை வைக்காமல் ,  ஊர், பெயர் வழித்தடங்களும் எழுதப்படவில்லை . பணிக்கு செல்பவர்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் நுழைவுப் பகுதி ஓரங்களிலும் உள் பகுதியிலும் டூவீலர்பார்க்கிங்காக மாற்றி ஆக்கிரமித்துள்ளனர். 

இரவில் பயணிகள் இயற்கை உபாதைக்கு வழியில்லாத வகையில் 8:00 மணிக்கு மேல் கட்டண கழிப்பறைகள் பூட்டப்படுகிறது. வளாகத்தில்கடைகள் ஏலம் விடப்படாததால் புதிய கடைகள் திறக்காமலும் உணவகங்கள் செயல்படாமலும் உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட்திறக்கப்பட்டு  ஆறு மாதங்களை கடந்தும், செயல்பாட்டிற்கு வந்தும் , பயணிகளுக்கு வசதிகள் இல்லை. இதை யார் சரிசெய்வார்கள் ? மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News