25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சமையல்

Mar 14, 2026

ராகி முறுக்கு (கேழ்வரகு முறுக்கு)

தேவையான பொருட்கள்:ராகி மாவு (கேழ்வரகு மாவு) - 1 கப்,அரிசி மாவு (இடியாப்ப மாவு) - 1/4கப்,வறுத்த உளுந்தம் பருப்பு மாவு (அல்லது பொட்டுக்கடலை மாவு)- 1/4கப்,வெண்ணெய் அல்லது சூடான எண்ணெய் - 1-2 மேசைக்கரண்டி,மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,ஓமம் அல்லது சீரகம் - 1 தேக்கரண்டி,எள் (கருப்பு அல்லது வெள்ளை) - 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்),உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - பொரிப்பதற்கு, செய்முறை:ஒருபாத்திரத்தில் ராகிமாவு,அரிசிமாவு,வறுத்த உளுந்துமாவு,மிளகாய் தூள்,ஓமம்,எள்,உப்பு,மற்றும்வெண்ணெய் சேர்க்கவும்.அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து, முறுக்கு மாவு பதத்திற்கு(மென்மையாக) பிசைந்து கொள்ளவும்.முறுக்கு அச்சில் (Star அச்சில்) பிசைந்த மாவை நிரப்பவும்.எண்ணெயைக் சூடாக்கி, மாவை அச்சைப் பயன்படுத்தி நேரடியாக எண்ணெயில் முறுக்காகப் பிழிந்து,மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.மொறுமொறுப்பான ராகி முறுக்கு தயார். ஆறிய பின் காற்று புகாத டப்பாவில் சேமிக்கலாம். ராகி மாவை சற்று வறுத்து பயன்படுத்துவது இன்னும் மொறுமொறுப்பாக இருக்கும்.வெண்ணெய் சேர்ப்பது முறுக்கை மிருதுவாக மாற்றும்.சர்க்கரை நோயாளிகளுக்கு மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த சிற்றுண்டி.

Mar 14, 2026

அச்சு முறுக்கு.

தேவையான பொருட்கள்:அரிசி மாவு - 1 கப்,மைதா மாவு - 2 மேசைக்கரண்டி (விரும்பினால்),சர்க்கரை - 1/2 கப் (பொடித்தது),கெட்டியான தேங்காய் பால் - 1/2 முதல் 3/4 கப்,முட்டை - 1 (விரும்பினால், முட்டை இல்லாமலும் செய்யலாம்),ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி,எள் - 1 தேக்கரண்டி,உப்பு - ஒரு சிட்டிகை,எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. செய்முறை :ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா, சர்க்கரை, ஏலக்காய் தூள், எள் மற்றும் உப்பு ஆகியவற்றை கலக்கவும்.இதனுடன் தேங்காய் பால் மற்றும் முட்டை சேர்த்து, தோசை மாவை விட சற்று நீர்த்த பதத்தில் கரைத்து கொள்ளவும்.எண்ணெயை சூடாக்கி, அதில் அச்சு முறுக்கு அச்சை (Achu) 2-3 நிமிடங்கள் வைத்து நன்கு சூடாக்கவும்.சூடான அச்சை எடுத்து, மாவு கலவையில் முக்கால் பாகம் வரை முக்கி, மீண்டும் எண்ணெயில் போடவும்.சில நொடிகள் கழித்து, மெதுவாக அச்சை அசைத்தால் முறுக்கு தனியாக வந்துவிடும்.மிதமான தீயல் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து, மொறுமொறுப்பான அச்சு முறுக்கை பரிமாறவும்.அச்சு மாவில் முங்கும்போது, முழுமையாக முங்கக்கூடாது (மேல் பகுதி வெளியே தெரிய வேண்டும்).அச்சு எப்போதும் எண்ணெயிலேயே இருக்க வேண்டும்.

Mar 14, 2026

பீட்ரூட் முறுக்கு.

தேவையான பொருட்கள்:பீட்ரூட் - 2,கடலை மாவு–1 கப்,அரிசி மாவு- கால் கப்,ஓமம்- 1 தேக்கரண்டி,மிளகு துாள்,எண்ணெய், உப்பு- தேவையான அளவு.செய்முறை:பீட்ரூட்டை வேக வைத்து, துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.அதனுடன் மிளகு, ஓமம், அரிசி மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை அச்சில் போட்டு பிழிந்து, பொரித்து எடுக்கவும்.ஆரோக்கியமான, மொறுமொறுப்பான பீட்ரூட் முறுக்கு தயார். நொறுக்கு தீனியாக குழந்தைகள்மட்டுமின்றி, பெரியவர்களும் சுவைத்து சாப்பிடுவர்.

Mar 14, 2026

பூண்டு கார முறுக்கு.

தேவையான பொருட்கள்:அரிசி மாவு - 2 கப்,பொட்டுக்கடலை மாவு (வறுத்த பொட்டுக்கடலை) - 1/4 கப்,பூண்டு - 10-12 பற்கள்,தனி மிளகாய் தூள் - 1 முதல் 1.5 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப),வெண்ணெய் / சூடான எண்ணெய் - 1-2 மேசைக்கரண்டி,சீரகம் / எள் - 1 தேக்கரண்டி,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,செய்முறை:பூண்டு பற்களை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துஅந்த விழுதை வடிகட்டி பூண்டு சாறு எடுத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுபொட்டுக்கடலை மாவுமிளகாய் தூள்சீரகம்உப்புவெண்ணெய் மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துமுறுக்கு மாவு பதத்திற்கு (மென்மையாகஅதே சமயம் கையில் ஒட்டாமல்) பிசைந்து கொள்ளவும்.முறுக்கு அச்சில் (விருப்பமான அச்சு) மாவை போட்டுசூடான எண்ணெயில் வட்ட வடிவில் அல்லது சிறியபூண்டு முறுக்குகளாக பிழிந்து விடவும்.மிதமான தீயில் வைத்துமுறுக்கின் சலசலப்பு சத்தம் அடங்கும் வரை இருபுறமும் திருப்பி பொன்னிறமாகபொரித்து எடுக்கவும். பூண்டு விழுதை நேரடியாக சேர்த்தால் முறுக்கு பிழியும் அச்சு அடைத்துக் கொள்ளும்.எனவே சாறு பிழிந்து பயன்படுத்துவது சிறந்தது.

Mar 07, 2026

வெந்தயக் கீரை சாதம்.

தேவையான பொருட்கள் -அரிசி ஒரு கப், வெந்தயக்கீரை 3 கட்டு, வெங்காயம் 1. தக்காளி 2,இஞ்சி, பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் கால்டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 1 டேபிள் ஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், பட்டை 1 துண்டு,லவங்கம் 1 துண்டு, உப்பு தேவைக்கு.செய்முறை:அரிசியைச் சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு சிறிதளவு உப்பு சேர்த்துஉதிர் உதிராக வேக வைத்தெடுங்கள். கீரையைச் சுத்தம் செய்து நறுக்குங்கள். வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யை ஒன்றாகச் சேர்த்து சூடாக்கி பட்டை,லவங்கம், சீரகம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து ,பச்சை வாடைபோக வதக்குங்கள். பிறகு கீரை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, வெங்காயம், சிறிதளவு உப்பு,மஞ்சள் தூள், சேர்த்து வெங்காயம் வதங்கும்வரை வதக்கி, பிறகு தக்காளி, மிளகாய்தூள் சேர்த்துவதக்குங்கள். பிறகு சாதம், உப்பு சேர்த்து கிளறி ,குக்கரில் நேரடியாக கொட்டி, மிகமிகக் குறைந்ததீயில் பதினைந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். வெந்தயக் கீரை சாதம் தயார்.தயிர் பச்சடி, உருளைக் கிழங்கு பொரியல், அப்பளம் போன்றவற்றுடன் சாப்பிட அபாரமாகஇருக்கும்.

Mar 07, 2026

நச்சு கொட்டை கீரை பொரியல் .அரைக் கீரையிலும் செய்யலாம்.

 தேவையான பொருட்கள் நச்சு கொட்டை  கீரை 15 இலைகள்,பெரிய வெங்காயம் 1,பூண்டு 8 பல்,மிளகுத்தூள் 1 டீஸ்பூன்,எண்ணெய 1 டேபிள் ஸ்பூன்,உப்பு தேவைக்குசெய்முறை:கீரையைச் சுத்தம் செய்து, நடு நரம்பை நீக்கிவிட்டு, மிகவும் பொடியாக நறுக்குங்கள். பூண்டு,வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயம், பூண்டு,சிறிதளவு உப்பு சேர்த்து வதக்குங்கள். பின்னர் கீரை, உப்பு சேர்த்து, சிறு தீயில், மூடி போட்டுநன்கு வேகும்வரை வதக்குங்கள். கடைசியில் மிளகுத்தூள் தூவி கிளறி இறக்குங்கள்.சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இந்தப் பொரியலை, அரைக் கீரையிலும் செய்யலாம்.

Mar 07, 2026

சோம்பு கீரை போண்டா .

தேவையான பொருட்கள்- சோம்புக் கீரை 1 கட்டு, கடலைமாவு 2கப், பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கியது தலா 1டேபிள் ஸ்பூன், மல்லித்தழை சிறிதளவு, புதினா 1 கைப்பிடி, சமையல் சோடா கால் டீஸ்பூன்,உப்பு, எண்ணெய் தேவைக்கு.  செய்முறை:-கீரை மல்லி, புதினா ஆகியவற்றைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்குங்கள். அதனுடன் கடலைமாவு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சமையல் சோடா. ஒரு கரண்டி அளவுக்கு சூடான எண்ணெய்ஆகியவற்றைச் சேர்த்து தேவையான தண்ணீர் தெளித்து போண்டா மாவு பதத்திற்குபிசையுங்கள். சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள்.வித்தியாசமான வாசனையோடு,சுவையிலும் ஜமாய்க்கும்.

Mar 07, 2026

வல்லாரை கீரை துவையல்.

 தேவையான பொருட்கள் வல்லாரைக் கீரை 1 கப், சின்னவெங்காயம் 1 கப், பூண்டு 8 பல், தக்காளி 3, புளி நெல்லிக்காய்அளவு, உப்பு தேவைக்கு, கடுகு 1 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 6, எண்ணெய் 2டேபிள் ஸ்பூன். செய்முறை:கீரையைச் சுத்தம் செய்து ,வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து தாளித்து,மிளகாய் சேர்த்து, சிவக்க வறுத்தெடுங்கள். பிறகு வெங்காயம் ,பூண்டு சேர்த்து வதக்கி, பிறகுகீரை சேர்த்து வதக்குங்கள். கடைசியில் புளி, உப்பு சேர்த்து கிளறி இறக்கி, ஆறியதும் நைஸாகஅரைத்தெடுங்கள்.இட்லி, தோசை, சாதத்துக்கு சேர்த்துக் கொண்டால் சுவை கூட்டும்.

Mar 07, 2026

புளிச்ச கீரை உருளை மசாலா.

 தேவையான பொருட்கள்- புளிச்ச கீரை1 கட்டு, உருளைக்கிழங்கு 3, வெங்காயம் 1,தக்காளி 2, இஞ்சி பூண்டு விழுது 1டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 2, மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு,  பட்டை 1,எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன்.  செய்முறை:கீரையைச் சுத்தம் செய்து நறுக்குங்கள். கிழங்கை தோல் நீக்கி, சிறு சிறு சதுரத் துண்டுகளாகநறுக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக  நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கிவெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு கிழங்கை சேர்த்துக் கிளறி,ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றுங்கள். அதன் மேல் கீரையைப் பரவலாகத் தூவி, மூடி வையுங்கள்.தீ மிதமாக இருக்க வேண்டும். பத்து நிமிடத்திற்குப் பிறகு கீரையை மட்டும் மேலாக எடுத்துகடைந்து, மீண்டும் அதை கிழங்குக் கலவையில் சேருங்கள். எண்ணெயைக் காயவைத்துபட்டை, சீரகம் தாளித்து கீரைக் கலவையில் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். சாதம்சப்பாத்தியுடன் பரிமாறுங்கள். இதே மசாலாவை புளிச்ச கீரைக்குப் பதிலாக அரைக்கீரைசேர்த்தும் செய்யலாம்.

Mar 07, 2026

முள்ளங்கி கீரை உசிலி .

தேவையான பொருட்கள் -முள்ளங்கி கீரை 12 இலைகள், கடலைப் பருப்பு 1கப்,சோம்பு அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3,உப்பு தேவைக்கு, கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்..செய்முறை:-கீரையின் நடு நரம்பை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்குங்கள். கடலைப் பருப்பை ஒரு மணி நேரம்ஊறவைத்து சோம்பு, மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். எண்ணெயைச் சூடாக்கி,கடுகு, உளுந்து தாளித்து கீரை சேர்த்துக் கிளறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து மூடிவையுங்கள். வெந்ததும், பருப்புக் கலவையைச் சேர்த்து உதிர் உதிராக வரும் வரை கிளறிஇறக்குங்கள்.பொதுவாக முள்ளங்கி கீரை சிறிது கசப்பாக இருக்கும். ஆனால், இந்த முறையில்செய்யும்போது சிறிது கூட கசப்பு இருக்காது என்பது ஸ்பெஷல்.சாதத்துக்கு பெஸ்ட் சைடு டிஷ்.இதே உசிலியை பொன்னாங்கண்ணி கீரை, அரைக்கீரையிலும்செய்யலாம். 

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 66 67

AD's



More News