தேவையான பொருட்கள்சர்க்கரைவள்ளிக்கிழங்கு (துருவியது) – ஒன்றரை கப்இட்லி அரிசி அல்லது பச்சரிசி - 1 கப்கடலைப்பருப்பு - 3/4 கப்துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 2 டேபிள் ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 6 முதல் 8சோம்பு அல்லது சீரகம் - 1 டீஸ்பூன்பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)முருங்கைக்கீரை – சிறிதளவு (தேவைப்பட்டால்)பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - அடை சுடத் தேவையான அளவுசெய்முறைஅரிசி மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம்தண்ணீரில் ஊற வைக்கவும்.ஊறிய பருப்புடன் காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்துகொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்த மாவில் துருவிய சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நறுக்கியவெங்காயம் மற்றும் முருங்கைக்கீரை சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.தோசைக் கல்லை சூடானதும், மாவை ஊற்றி அடைகளாக வார்த்துஎடுக்கவும்.நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாகபொரிந்து வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை தயார்.இது மிகவும் சத்தான மற்றும்சுவையான ஒரு சிற்றுண்டி.
தேவையான பொருட்கள்சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 250 கிராம் (வேகவைத்து மசித்தது)வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)பச்சை மிளகாய் - 1 அல்லது 2 (பொடியாக நறுக்கியது)இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)மல்லித்தழை - சிறிதளவுமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்கார்ன்ஃப்ளார் அல்லது பிரெட் தூள் - 2 டேபிள் ஸ்பூன் (கட்லெட்உடையாமல் இருக்க)உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - கட்லெட் பொரிக்க தேவையான அளவுசெய்முறைஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கைஎடுங்கள்.அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும்மல்லித்தழை சேர்க்கவும்.மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப்பிசையவும்.மாவு பதத்திற்கு வந்ததும், கார்ன்ஃப்ளார் அல்லது பிரெட் தூள் சேர்த்துப்பிசைந்து கொள்ளவும்.கலந்த கலவையைச் சிறிய உருண்டைகளாக எடுத்து கட்லெட் போலத்தட்டையாகத் தட்டவும்.அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளைக் கல்லில் வைத்து மிதமான தீயில்இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமானசர்க்கரைவள்ளிக்கிழங்கு கட்லெட் தயார்
தேவையான பொருட்கள்தோசை மாவு: 2 கப்முடக்கத்தான் கீரை: 1 கைப்பிடிசின்ன வெங்காயம்: 4சீரகம்: 1 ஸ்பூன்மிளகு: 1/2 ஸ்பூன்எண்ணெய் அல்லது நெய்: தேவையான அளவுஉப்பு: தேவையான அளவுசெய்முறைகீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.மிக்ஸியில் கீரை, சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் மிளகு சேர்த்துசிறிதளவு தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.அரைத்த கீரை விழுதை தோசை மாவில் சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், மாவை ஊற்றிமெல்லிய தோசையாக வார்க்கவும்.சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, இரண்டு பக்கமும்பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.முடக்கத்தான் கீரை தோசைதயார்.
தேவையான பொருட்கள்-கடலை மாவு - 1 கப்அரிசி மாவு - 2 ஸ்பூன் (மொறுமொறுப்புக்கு)பொடியாக நறுக்கிய அரைக்கீரை - 1 கப்பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)சோம்பு - 1 சிறிய ஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவுசெய்முறை-கீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம்,கீரை, பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக்கலக்கவும்.லேசாக தண்ணீர் தெளித்து, போண்டா சுடும் பதத்திற்கு மாவைப்கெட்டியாகப் பிசையவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவைச் சிறியஉருண்டைகளாக கிள்ளிப் போடவும்.மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக மாறும் வரை பொரித்துஎடுக்கவும்மொறுமொறுப்பான மற்றும் சுவையான அரைக் கீரை போண்டா தயார்.
தேவையான பொருட்கள்:வல்லாரை கீரை: 1 கப்சின்ன வெங்காயம்: 15உளுத்தம்பருப்பு: 2 ஸ்பூன்கடலைப்பருப்பு: 2 ஸ்பூன்பச்சை மிளகாய் (அல்லது வரமிளகாய்): 2தேங்காய் துருவல்: 2 ஸ்பூன்புளி: சிறிய நெல்லிக்காய் அளவுஉப்பு: தேவையான அளவுஎண்ணெய் மற்றும் கடுகு: தாளிக்கசெய்முறை :கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.பின் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.சுத்தமாக கழுவிய வல்லாரை கீரை மற்றும் புளி சேர்த்து கீரைசுருங்கும் வரை வதக்கவும்.தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து இறக்கி ஆறவிடவும்.மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்துசட்னியில் கொட்டவும்.ஞாபக சக்தியைப் பெருக்கும் சத்தான வல்லாரை கீரை சட்னி தயார்.
தேவையான பொருட்கள்முள்ளங்கி கீரை - 2 கட்டு (பொடியாக நறுக்கியது),சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது),காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4,பூண்டு - 4 பல் (தட்டியது),தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்,எண்ணெய் - 2 ஸ்பூன்,கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு,உப்பு - தேவையான அளவு.செய்முறை கீரையை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம்பருப்புதாளிக்கவும்.அதனுடன் தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம்சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய முள்ளங்கி கீரையை சேர்த்துமிதமான தீயில் வதக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து கீரையில் உள்ள நீர் வற்றும் வரைநன்றாக வேக வைக்கவும்.இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையானமுள்ளங்கி கீரை பொரியல் தயார்.சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி கீரையை சாதத்துடன் சேர்த்தும், சைடு டிஷ்ஆகவும் வைத்துக்கொண்டு சுவைக்கலாம்.
தேவையான பொருட்கள்:1கட்டு பாலக் கீரை,பன்னீர் துண்டுகள்: 200 கிராம்,2பச்சை மிளகாய்,1வெங்காயம்,1தக்காளி,2பல் பூண்டு,ஒரு சிறிய துண்டு இஞ்சி,1/4டீஸ்பூன் சீரகம்,பிரிஞ்ஜி இலை,1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்,1டீஸ்பூன் மிளகாய் தூள்,1/4டீஸ்பூன்ஸ்பூன் கஸ்தூரி மேத்தி,1டேபிள் ஸ்பூன் ப்ரஷ் கிரீம்,உப்பு தேவையான அளவு,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை அல்லது பட்டர்.செய்முறை நான்கு கப் தண்ணீர், கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி,பாலக் கீரையை சேர்த்து கழுவி சுத்தம் செய்துஒரு நிமிடத்தில் வெளியில்எடுக்கவும்.எடுத்த கீரையை பத்து ஐஸ் கூப்ஸ் சேர்த்த தண்ணீரில் போட்டு, ஒரு நிமிடம்விட்டு எடுத்து, தண்ணீரை வடித்து விடவும்.மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தயாராக வைத்துள்ள பாலக் சேர்த்துவிழுதாக அரைக்கவும்.பின்னர் கடாயில் எண்ணை ஊற்றி சூடுசெய்து,பிரிஞ்சி இலை, பொடியாகநறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, அரைத்து வைத்துள்ள பாலக்விழுது, உப்பு அரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேகவிடவும்.பின்னர் அரை டீஸ்பூன் காரம் மசாலாத்தூள், பன்னீர் சேர்த்து, ஒரு நிமிடம்கொதித்ததும் இறக்கி, கஸ்தூரி மேத்தி, பிரஷ் கிரீம் சேர்த்தால், சுவையான பாலக்பன்னீர் சுவைக்கத்தயார். பாலக் கீரையில் இரும்பு சத்து, விட்டமின் சிநிறைந்துள்ளது.பன்னீர், சப்பாத்தி, ரோட்டி, நான், குல்ச்சாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி - 1 கப்வெந்தயக் கீரை - 1 கட்டு (சுத்தம் செய்தது)பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)பச்சை மிளகாய் - 2இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டிமசாலா பொருட்கள்: பிரிஞ்சி இலை 1, பட்டை 1, கிராம்பு 2, ஏலக்காய் 1நெய் அல்லது எண்ணெய் - 2 மேஜை கரண்டிஉப்பு - தேவையான அளவுசெய்முறைபாசுமதி அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.குக்கரில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.மசாலா பொருட்கள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்து மசிய வதக்கிய பின் வெந்தயக் கீரை சேர்க்கவும்.கீரை சுருங்கியதும் ஊறவைத்த அரிசி மற்றும் தேவையான அளவுதண்ணீர் (1கப்புக்கு 1.5 கப்) ஊற்றவும்.உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால் மணமானவெந்தயக் கீரை புலாவ் தயார்.
தேவையான பொருட்கள்:வாழைத்தண்டு - 2 கப் (பொடியாக நறுக்கியது),வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது),பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது),இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது),மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,பால் -1/4 கப் (விருப்பப்பட்டால்),வெண்ணெய் அல்லது எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,உப்பு -தேவையான அளவு,தண்ணீர் அல்லது காய்கறி ஸ்டாக் - 3 கப்,கொத்தமல்லித்தழை - சிறிதளவு ,செய்முறை: வாழைத்தண்டின் நாரை நீக்கி, பொடியாக நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் 10 நிமிடங்கள்ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து, பூண்டு, இஞ்சி, வெங்காயத்தைநன்றாக வதக்கவும்.அதனுடன் நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.தண்ணீர் அல்லது காய்கறி ஸ்டாக் சேர்த்து, வாழைத்தண்டு மென்மையாகும் வரை 10-12நிமிடங்கள் வேகவிடவும்.ஆறியதும் மிக்ஸியில் அரைத்து, மீண்டும் பாத்திரத்தில் ஊற்றவும். மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து 2-3 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.விருப்பப்பட்டால் பால் சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் சூடாக்கி இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.டிப்ஸ்:வாழைத்தண்டை நறுக்கியவுடன் மோர் கலந்த தண்ணீரில் போடுவதால் நிறம் மாறாமல் இருக்கும்.மிளகுத்தூளை இறுதியில் சேர்த்தால் நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.இந்த சூப் இலகுவான , சத்தான இரவு உணவாகவும் ஏற்றது.
தேவையான பொருட்கள்:1 வாழைத் தண்டு,11/2 டம்ளர் மோர்,1 வெங்காயம்,2 காய்ந்த மிளகாய்,ஒரு கொத்து கறிவேப்பிலை,1/2கப் தேங்காய் துருவல்,1ஸ்பூன் கடுகு,1/2ஸ்பூன் சீரகம்,1/2ஸ்பூன் உளுத்தம்பருப்பு,தேவையான அளவு உப்பு.செய்முறை : வாழைத் தண்டை சிறிதாக நறுக்கி எடுத்து மோரில் போட்டு நன்றாக கழுவிஎடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் வாணலியில் ,வாழைத்தண்டை சேர்த்து 1/4டம்ளர் தண்ணீர்ஊற்றி உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துவெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் வாழைத்தண்டை சேர்த்து கலந்துவிட்டு சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். தேங்காய் துருவி எடுத்து வைத்துகொள்ளவும்.வாழைத்தண்டு வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.வாழைத்தண்டு பொரியல் ரெடி.