தேவையான பொருட்கள்-1 கப் செம்பருத்தி ஜூஸ்,1 கப் ஆரஞ்சு ஜூஸ்,1டேபிஸ்பூன் இஞ்சி ஜூஸ்,தேவைக்கு தேன் அல்லது சர்க்கரை.செய்முறை -முதலில் 5-10 செம்பருத்தி பூவை அதோடு காம்பு மற்றும் மகரந்தம் நீக்கி, 1 கப் கொதிக்கிறகண்ணீரில் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு ஸ்டவ் ஆப் செய்து மூடி, ஆற விட்டு வடி கட்டி எடுத்துவைக்கவும். இயற்கையான சிவப்பு கலரில் ஜூஸ் கிடைக்கும்.அதே போல் 2 ஆரஞ்ச்சை எடுத்து ஜூஸ் பிழிந்து எடுத்துக்கவும், இஞ்சி சாறும் எடுத்து வைக்கவும்.ஒரு பெரிய பவுலில் ஆரஞ்சு ஜூஸ் + செம்பருத்தி ஜூஸ் + இஞ்சி ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இனிப்புக்கு தேவையான தேன் விட்டு நன்கு கலந்துவிடவும்.. அருமையான சுவையில் ஆரோக்கியமான செம்பருத்தி, ஆரஞ்சு இஞ்சி தேன் ஜூஸ் தயார்.. ஐஸ் க்யூப்ஸ்சேர்த்து ருசித்து பருகவும்..தேன்க்கு பதில் வெள்ளை சக்கரையும் சேர்த்து செய்யலாம்..மிக சுவையான, உடல் ஆரோக்கியத்துக்கேற்ற அருமையான ஜூஸ்.. எளிமையாக செய்ய கூடியது..
தேவையான பொருட்கள் -1வில்வ பழம், நாட்டு சர்க்கரை - 2 கப்,தேன் 2 ஸ்பூன்,தண்ணீர் தேவையான அளவு.செய்முறை -நன்கு பழுத்த வில்வ பழத்தினை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு ஸ்கூப் ஸ்பூனில் ,வில்வ பழ ஓட்டில் ஒட்டி இருக்கும் சதையை ,ஸ்கூப் செய்து எடுத்துக்கொள்ளலாம்.அதை அப்படியே தண்ணீரில் சில வினாடிகள் போட்டால், விதை மற்றும் சதை கசடு மிதக்கும்.அதனை வடி கட்டி,நாட்டு சர்க்கரை சேர்த்து, தேவையான அளவு நீர் சேர்த்து ,பரிமாறும் போது,தேன் கலந்து பரிமாறவும்.ஆரோக்கியம் தரும் மருத்துவ குணம் கொண்ட வில்வ பழம் ஜுஸ்.
தேவையான பொருட்கள்-எலுமிச்சைப்பழம்- 1,இஞ்சி -1 துண்டு, புதினாஇலை -6,நன்னாரிசர்பத்-4ஸ்பூன்கள்,உப்பு -1பின்ச்,எலுமிச்சைதோல்- சின்னதுண்டு.செய்முறை -முதலில்எலுமிச்சைசாறு,நன்னாரி சர்பத், இஞ்சி மட்டும் மிக்ஸியில் ஒரு சுத்து அரைக்கவும்.பின் புதினா இலை,1 பின்ச் உப்பு,சின்ன எலுமிச்சைதோல், சேர்த்து மீண்டும் ஒரு சுத்து அரைக்கவும்.பின் வடிகட்டி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.பிரிஜ்ஜில் வைத்து,பருகலாம்.இல்லை ஐஸ் cube சேர்த்தும் பருகலாம்..இஞ்சி, எலுமிச்சைதோல்,புதினா சேர்த்து அரைப்பதால் நல்ல ருசி , மணமும் உண்டு..உடம்புக்கும் நல்லது.புதினா, இஞ்சி,லெமன் ஜுஸ் ரெடி.
தேவையான பொருட்கள் -2 ஆப்பிள், 3 மாதுளை, 100ml பால் (விரும்பினால் சேர்க்க),100ml தண்ணீர், தேவையான அளவு சர்க்கரை.செய்முறை- .ஆப்பிள் தோல் நீக்கி, நறுக்கி, மாதுளை முத்துக்களை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.மாதுளையின் உட்புற தோல் வயிறு புண் நீக்கும். ஆதலால்,சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்..மிக்சி ஜாரில் ஆப்பிள் மாதுளை மற்றும் பால் சேர்க்கவும்.பின் மைய அரைக்கவும்.இதனுடன்,1/2கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும்.பின் சர்க்கரை/தேன் சேர்த்துபரிமாறலாம்.சுவையான ஆரோக்கியமான ஜுஸ் ரெடி.ஆப்பிள் மட்டும் சேர்த்து ஜுஸ் செய்வதை விட,மாதுளையும் சேர்த்து ஜுஸ் செய்யும் போதுசுவையாகவும்,மாதுளையின் துவர்ப்பும் தெரியது.குழந்தைகள் விரும்பி சுவைப்பர்.
தேவையான பொருட்கள்:வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்கடலை மாவு - 4 தேக்கரண்டிமிளகாய் துாள், அரிசி மாவு, கரம் மசாலாத்துாள் - தலா 1 மேஜைகரண்டிஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:கொண்டைக் கடலையை இரண்டு மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். பின், கடலையில் உள்ள தண்ணீரை வடிக்கவும்.அகலமான பாத்திரத்தில், வேக வைத்த கடலையுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், கரம்மசாலாத்துாள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக கடலையை போட்டு பொரித்து எடுக்கவும்.புரதம், இரும்பு சத்து, நார்சத்து நிறைந்த கொண்டைக்கடலை மசால் ப்ரை தயார். குழந்தைகள் விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள்:கத்தரிக்காய் - 1/4 கிலோ,புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,தனியா - 2 டீஸ்பூன்,காய்ந்த மிளகாய்- 2,கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்,தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்,துவரம்பருப்பு - ஒரு சிறிய கப்,மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,பெருங்காயத்தூள் - சிறிதளவு,கடுகு -1 டீஸ்பூன்,உளுந்தம்பருப்பு - ½ டீஸ்பூன்,எண்ணெய் -2 டீஸ்பூன்,உப்பு - தேவையான அளவு.செய்முறை:கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்து அரைக்கவும்.துவரம்பருப்பை வேகவைக்கவும். கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் தூள்,உப்பு,புளிக்கரைசல்சேர்த்துவேகவிடவும்.இதனுடன், அரைத்துவைத்த பொடி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு,உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.இந்த கத்தரிக்காய் ரசவாங்கியை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்:பூண்டு - 10 முதல் 12 பல்,துருவிய தேங்காய் -1கப்,காய்ந்த மிளகாய் - 5 முதல் 7,காய்ந்த மிளகாய் -1கப்,கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்,உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்,உளுத்தம்பருப்பு -1 ஸ்பூன்,சீரகம் - 1/2 ஸ்பூன்,உப்பு - தேவைக்கேற்ப,எண்ணெய் - 1 ஸ்பூன்,கருவேப்பிலை - சிறிதளவு,செய்முறை:கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.காய்ந்த மிளகாய், சீரகம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.பூண்டு சேர்த்து லேசா வறுக்கவும். (பச்சை வாசனை போகும் வரை).கடைசியாக தேங்காய் சேர்த்து நன்றாக காய வறுக்கவும்.. (தேங்காய்ல ஈரம் இருக்கக் கூடாது -இது முக்கியம்)முழுக்க குளிர்ந்ததும், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.டிப்ஸ்:தேங்காய் நன்றாக வறுத்தா 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.கொஞ்சம் புளி சேர்த்தா super taste. காரம் அதிகமா வேண்டும்னா மிளகாய் கூடச்சேர்க்கலாம்.
தேவையான பொருட்கள்:கேரட் - அரை கிலோ,சர்க்கரை - கால் கிலோ,பால் - அரை லிட்டர்,வறுத்த முந்திரி, கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - தலா 10,தேங்காய் துருவல்,கோதுமை மாவு - தலா 2 தேக்கரண்டி,நெய் - 2 ஸ்பூன்.செய்முறை:குக்கரில் பேரீச்சம் பழம், கேரட் துருவலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் மசிய அரைக்கவும்.பால்கோவா பதத்திற்கு பாலை சுண்ட காய்ச்சவும். நெய் விட்டு கோதுமை மாவை பொன்னிறமாக வறுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சிறிதுதண்ணீர் விட்டு, சர்க்கரை சேர்க்கவும். பாகு பதத்திற்கு வரும் போது கேரட் விழுது, பால்,கோதுமை மாவு சேர்த்து, அடிபிடிக்காமல் கெட்டியாக கேசரி பதம் வரும் வரை கிளறவும்.அதில், வறுத்த முந்திரியை துாவி இறக்கினால், சத்து நிறைந்த, கேரட் கேசரி தயார்.மாலை சிற்றுண்டியாக குழந்தைகள் விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள் -1 புடலங்காய்,1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்,ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்,1/4 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் ,உப்பு தேவையான அளவு.எண்ணெய் பொரிப்பதற்கு. செய்முறை -புடலங்காயை கழுவி வைத்துக்கொள்ளவும். பின்னர் காயின் ஓரங்களை வெட்டி விட்டு மையப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.அதை ரிங் ரிங் ஆக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.நறுக்கும் போது உதிரும் சதைப்பகுதியை விட்டுவிட்டு மற்ற புடலங்காய் ரிங்ஸ்களை எடுத்து வைக்கவும்.ஒரு பௌலில் அரிசிமாவு, கடலை மாவு, காஷ்மீர் +மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள், உப்பு,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும். அதில் நறுக்கிய ரிங்ஸ்சை சேர்த்து பிரட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தயாராக வைத்துள்ள ரிங்ஸ்சை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.இப்போது மிகவும் சுவையான ஒரு வித்தியாசமான புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி தயார். இந்த சுவையான புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜியை அனைவரும் ஈவ்னிங் பைட்ஸ் ஆக செய்து சுவைக்கவும்.
தேவையான பொருட்கள் - 1/4 கிலோ - கருணைக்கிழங்கு,3டேபிள் ஸ்பூன் ஆயில்,1/4ஸ்பூன் கடுகு,1/4ஸ்பூன் உளுந்து,1வெங்காயம் ,1கொத்து கருவேப்பிலை,1/4ஸ்பூன் மஞ்சள் தூள்,1ஸ்பூன் மிளகாய் தூள்,3டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்,உப்பு.செய்முறை - கருணைக்கிழங்கின் தோலை நீக்கி விட்டு மண் இல்லாமல் நன்றாக கழுவிக் கொள்ளவும்.பின்னர் கேரட் துருவதை போல் துருவிக் கொள்ளவும்.பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் துருவிய கருணைக்கிழங்கை சேர்த்து கை விடாமல் 2நிமிடம் வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிழங்கு முருவலாக வரும் வரை கிளறவும்.பின் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.கிழங்கை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.இல்லை எனில் அடி பிடிக்கும், மிகவும் குறைந்த தீயில் சமைக்கவும். தண்ணீர் சேர்க்க கூடாது.சுவை அருமையாக இருக்கும். கிழங்கு சற்று பழைய கிழங்காக இருக்க வேண்டும்.எண்ணெயில் வறுப்பதால் அரிப்பு இருக்காது.