25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சமையல்

May 09, 2026

பச்சை பட்டாணி பன்னீர் மசாலா

தேவையான பொருட்கள்:பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)பச்சை பட்டாணி - 1/2 கப்வெங்காயம் - 2 (நறுக்கியது)தக்காளி - 3 (நறுக்கியது)முந்திரி - 8-10 (ஊறவைத்தது)இஞ்சி - 1 அங்குலம்பூண்டு - 5-6 பற்கள்பச்சை மிளகாய் - 2சீரகம் - 1/2 தேக்கரண்டிமிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் - தேவைக்கேற்பஎண்ணெய்/வெண்ணெய் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுசெய்முறை:மிக்சியில் தக்காளி, இஞ்சி, பூண்டு, முந்திரி, பச்சை மிளகாய் சேர்த்து நைசாகஅரைத்துக்கொள்ளவும்.கடாயில் எண்ணெய்,வெண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைபொன்னிறமாக வதக்கவும்.அரைத்த தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்துஎண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பட்டாணி வேகும் வரைமூடி சமைக்கவும்.இறுதியாக பன்னீர் துண்டுகளைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைத்து, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.பன்னீரை கடைசியாக சேர்த்தால் மென்மையாக இருக்கும். விருப்பப்பட்டால் சிறிது பிரஷ்கிரீம் சேர்க்கலாம்.

May 09, 2026

.உருளைக்கிழங்கு பட்டாணி குருமா.

தேவையான பொருட்கள்:3டேபிள்ஸ்பூன்எண்ணெய் ,1ஸ்பூன் சோம்பு,2பிரிஞ்சி இலை,1 பெரிய வெங்காயம்,1கொத்து கறிவேப்பிலை,2தக்காளி, 1-1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,2டேபிள்ஸ்பூன் தயிர்,1-1/2ஸ்பூன் மிளகாய் தூள்,1ஸ்பூன் தனியா தூள்,1ஸ்பூன் சிக்கன் மசாலா தூள்,1/2ஸ்பூன் மஞ்சள் தூள்,1/4கப் உருளைக்கிழங்கு நறுக்கியது,3/4கப் நறுக்கிய கேரட், பீன்ஸ்,காலிபிளவர்,1/4கப்பட்டாணி,1/2கப்தேங்காய்,2துண்டுபட்டை,5கிராம்பு,3ஏலக்காய்,சிறிதளவுகடல்பாசி,10முந்திரி,தேவையான அளவு உப்பு, சிறிதளவுபுதினா.செய்முறை :ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் ,அதில் சோம்பு ,பிரிஞ்சி இலை ,கருவேப்பிலைதாளிக்கவும்.. அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..வெங்காயம் வதங்கியதும், அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டுவதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கி அதனுடன் பொடிகளையும் சேர்த்து நன்றாகவதக்கவும்.பொடிகள் எல்லாம் நன்றாக வதங்கியதும் ,அதனுடன் தயிரையும் சேர்த்து வதக்கிஅதனுடன் காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்..மிக்ஸி ஜாரில் தேங்காய் பட்டை, கிராம்பு, ஏலக்காய் கடல்பாசி, முந்திரி சேர்த்து சிறிதுதண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை நாம் வதக்கிவைத்திருக்கும் காய்கறி உடன் சேர்க்கவும்..அதனுடன் உப்பையும் சேர்த்து ,சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி இரண்டு விசில்வைக்கவும்..இறுதியாக குக்கரை திறந்த பிறகு அதில் சிறிது புதினா இலைகளை தூவி விடவும்..இப்போது சூடான சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா தயார். இது சப்பாத்திபரோட்டா இதற்கெல்லாம் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.குறிப்பு : இந்த குருமா ஹோட்டல் சுவையில் இருக்கும் மிகவும் அருமையாக இருக்கும்.இதில் கடல்பாசி கண்டிப்பாக சேர்க்க வேண்டும் அப்பொழுதுதான் ஓட்டல் சுவையில்இருக்கும்.இதில் முந்திரிக்கு பதிலாக பொட்டுக்கடலையும் சிறிது அளவு கசகசாவும் சேர்த்தும்அரைக்கலாம்.

May 09, 2026

க்ரீன் பீஸ் புலாவ்.

தேவையான பொருட்கள்:2 கப்வெண் புழுங்கலரிசி,11/2 கப்பபட்டாணி,2பெரியசைரஸ் வெங்காயம், சிறு துண்டுபட்டை,4கிராம்பு,1ஏலக்காய்,1/2 அன்னாசி பூ,2 பிரிஞ்சி இலை,1டீ ஸ்பூன்சோம்பு,அரைக்க:- 2பமிளகாய்,சிறிய துண்டுஇஞ்சி,6 பல்பூண்டு,2 ஸ்பூன்நெய்,3 ஸ்பூன்எண்ணெய்,ருசிக்குஉப்பு,3 1/2 கப் தண்ணீர்,அலங்கரிக்க:- வட்டமாக நறுக்கின வெங்காய துண்டுகள், பட்டாணிசெய்முறை :தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில்மெல்லியதாக நறுக்கவும். ப.மிளகாயை கீறிக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில்,ப.மிளகாய்,இஞ்சி,பூண்டை, அரைத்துக் கொள்ளவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும், பட்டை,சோம்பு, அன்னாசி பூ, கிராம்பு, பிரிஞ்சி இலை, அரைத்த விழுது, சேர்த்து நன்கு வதக்கவும்.வதக்கியதும், வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்கியதும்,ப.பட்டாணியை சேர்த்துக் கொள்ளவும்.சாதத்தை, உதிரியாக வடித்ததும், பட்டாணியுடன் சேர்த்து நன்கு சாதம் உடையாமல் கிளறிஇறக்கவும். பிறகு, மேலே 1ஸ்பூன் நெய் விடவும்.இப்போது, சுவையான, க்ரீன் பீஸ் புலாவ்* தயார். வட்டமாக நறுக்கின வெங்காயம்,பட்டாணியை அலங்கரிக்கவும்.

May 09, 2026

.பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல்.

தேவையான பொருட்கள்:1cupஃப்ரெஷ் பச்சை பட்டாணி,1பெரிய வெங்காயம்,1தக்காளி,1/2kg காலிஃப்ளவர்,தலா 1ஸ்பூன் கடுகு, உளுந்து,தலா 1ஸ்பூன் சீரகம், சோம்பு1/4spn மஞ்சள் தூள்,2spnமிளகாய்த்தூள்,1spnமல்லித்தூள்,10 பூண்டுபல்,சிறிதளவுபெருங்காயத்தூள்,தேவையான அளவு- எண்ணெய், உப்பு ,தண்ணீர்.செய்முறை :அடி கனமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு உளுந்து,சீரகம் சோம்பு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.நன்கு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயத்தைசேர்த்து மிதமான தீயில் சிறிது வதக்கி விடவும்.பிறகு தக்காளி சேர்த்து, நன்கு மசிய வதங்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.பிறகுமல்லித்தூள் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வரை நன்கு பச்சை வாடை போகவதக்கவும். பிறகு நறுக்கிய காலிஃப்ளவர், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி ,சிறிது தண்ணீர்ஊற்றி, தட்டு கொண்டு மூடி மிதமான தீயில் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வேகவிடவும்.சுவையான பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல் தயார்.

May 09, 2026

பச்சை பட்டாணி வடை.

தேவையான பொருட்கள்:1/4 கிலோ பச்சை பட்டாணி,1 பெரிய வெங்காயம்,3 பச்சை மிளகாய்,1 துண்டு இஞ்சி,6 பல் பூண்டு,1 வரமிளகாய்,1ஸ்பூன் கடலை மாவு,1ஸ்பூன் அரிசி மாவு,1ஸ்பூன் சோம்பு,1/2 லிட்டர் எண்ணெய்,தேவையான அளவுஉப்பு,சிறிதளவு கொத்தமல்லி,1 கொத்துகருவேப்பிலை.செய்முறை :முதலில் பச்சை பட்டாணியை 4 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு ஊறவைத்ததும் ,அதைமிக்சியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்.பிறகு அதில் சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாயை, இஞ்சி, கடலை மாவு, அரிசி மாவு,வரமிளகாய், பூண்டு,கொத்தமல்லி, கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்துபிசைந்து கொள்ளவும்.பிறகு அதை வடை போல் தட்டவும்.பிறகு வாணலியில் எண்ணெய்சேர்த்து, அதில் வடையை போட்டு எடுக்கவும்.இப்பொழுது சுவையான பச்சை பட்டாணிவடை தயார்.

May 09, 2026

பச்சை பட்டாணி சேமியா உப்புமா.

தேவையான பொருட்கள்:சேமியா (வறுத்தது) - 1 கப்,பச்சை பட்டாணி - 1/4 கப்,வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1,தக்காளி (நறுக்கியது) - 1 (விருப்பப்பட்டால்)கேரட், பீன்ஸ் - சிறிதளவு (நறுக்கியது),பச்சை மிளகாய் – 2,இஞ்சி - 1 சிறிய துண்டு,தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை.,எண்ணெய்/நெய் - 2டேபிள் ஸ்பூன்.தண்ணீர் - 1.5 முதல் 2 கப் வரை (1 கப் சேமியாவிற்கு),உப்பு - தேவையான அளவு.செய்முறை:சேமியா வறுக்கப்படாவிட்டால், சிறிது நெய் அல்லது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாகும்வரை வறுத்து தனியே வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு,கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து தாளிக்கவும்.வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் நறுக்கிய காய்கறிகள்(கேரட், பீன்ஸ்) மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.1 கப் வறுத்த சேமியாவிற்கு, 1.5 முதல் 2 கப் வரை தண்ணீர் ஊற்றி, தேவையான அளவுஉப்பு சேர்த்து கொதிக்க விடவும்.தண்ணீர் நன்கு கொதித்ததும், வறுத்த சேமியாவைச் சேர்த்து கிளறவும்.மிதமான தீயில் வைத்து, வாணலியை மூடி 5-7 நிமிடங்கள் வேகவைக்கவும் .(தண்ணீர்வற்றும் வரை).தண்ணீர் வற்றி சேமியா வெந்ததும், அடுப்பை அனைத்து, சிறிது நெய் மற்றும்கொத்தமல்லி இலைகள் தூவி சூடாகப் பரிமாறவும்.உதிரியான உப்புமா கிடைக்க, சரியான அளவு தண்ணீர் (1:1.5 விகிதம்) பயன்படுத்துவதுஅவசியம்.

May 02, 2026

ராகி சாக்லேட் பணியாரம்.

தேவையான பொருட்கள்:ராகி மாவு - 1 கப்கோகோ பவுடர் - கால் கப்நாட்டு சர்க்கரை - அரை கப்பால் - 1 கப்எண்ணெய்,நெய்,பேக்கிங் பவுடர்,வெண்ணிலா எசன்ஸ் சிறிதளவு.செய்முறை:ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோகோ பவுடர், நாட்டு சர்க்கரை, பால், எண்ணெய், பேக்கிங்பவுடர் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலக்கவும்.பணியாரக் கல்லை சூடாக்கி, அதில் நெய் தடவி, மாவு கலவையை ஊற்றி, மூடி வைக்கவும்.ஒரு பக்கம் வெந்ததும், திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும். சூடான, 'ராகி சாக்லேட்பணியாரம்' தயார். குழந்தைகள் விரும்பி  உண்பர். ஆரோக்கியத்திற்கும் உகந்தது.

May 02, 2026

ராகி மால்ட் கேக்.

தேவையான பொருட்கள்:3முட்டை,1டேபிள்ஸ்பூன் கேக் ஜெல்,1ஸ்பூன் வெனிலா எசென்ஸ்,150 கிராம் சர்க்கரை,1/4 கப் சன்ப்ளவர் ஆயில்,100 கிராம் ராகி மால்ட்,50 கிராம் மைதா,1ஸ்பூன்பேக்கிங் பவுடர்.செய்முறை :ராகி மால்ட் உடன் மைதா பேக்கிங் பவுடர் சேர்த்து ஜலித்து கொள்ளவும் ராகி மால்ட் மணமே மிகவும் நன்றாக இருக்கும்.ஒரு மிக்ஸியில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் கேக் ஜெல் வெனிலா எசென்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.பின் இதனுடன் ஆயில் சேர்த்து நன்கு ஸ்மூத்தாக அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் ஜலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக தூவி நன்கு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.மிகவும் கெட்டியாக இருந்தால் மட்டுமே 2 ஸ்பூன் அளவில் பால் சேர்க்கவும் .இட்லி மாவு பதத்தில் இருந்தால் போதும் கட்டியில்லாமல் ஸ்மூத்தாக கலந்து கொள்ளவும். பின் பட்டர் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் மாவை ஊற்றவும்.ஓவனை 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சூடாக்கவும் பின் சூடான ஓவனில் வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 35_40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். வெந்ததும் ஒரு டூத் பிக் வைத்து நடுவில் குத்தி பார்த்து வெந்ததும் எடுக்கவும்.5 நிமிடங்கள் கழித்து ட்ரேயில் இருந்து கவிழ்த்து பட்டர் பேப்பர் ஐ மெதுவாக நீக்கவும்.  ஒரு மணி நேரம் வரை நன்கு ஆறவிட்டு கட்செய்யவும். சுவையான ஆரோக்கியமான மணமான ராகி மால்ட் கேக் ரெடி.

May 02, 2026

மில்லட், ரவா குளோப் ஜாமூன்.

 தேவையான பொருட்கள்: 1/2 கப்கம்பு மாவு,1/2 கப்கோதுமை மாவு,1/2 கப் மெல்லிய ரவை,3 கப்நாட்டுச் சர்க்கரை,1ஸ்பூன்கஸ்டர்டு பவுடர்,2 ஸ்பூன்பால் பவுடர்,1 பெரிய டம்ளர் காய்ச்சி ஆறின பால்,1ஸ்பூன்ஏலத் தூள்,1 சிட்டிகை சமையல் சோடா,1 சிட்டிகை உப்பு (ருசிக்கு),1 டேபிள் ஸ்பூன் பசு நெய்,3 டம்ளர் தண்ணீர்,எண்ணெய் பொரிப்பதற்கு,1டேபிள்ஸ்பூன்அலங்கரிக்க: சீவின பாதாம்.செய்முறை -கம்பு மாவையும், கோதுமை மாவையும் சலித்துக் கொள்ளவும்.பாதாமை சீவிக் கொள்ளவும்.கஸ்டர்டு பவுடரை பாலில் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் நெய் விட்டு உருகியதும் ரவையை போட்டு, பாதிவறுபட்டதும், கம்பு மாவு, கோதுமை மாவு கருகாமல் வறுக்கவும்.வறுபட்டதும், சிறிது சிறிதாக பாலை விட்டு நன்கு வேக வைத்ததும், அடுப்பை நிறுத்திவிடவும். பிறகு தட்டில் எடுக்கவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் தண்ணீர் விட்டு, கொதித்ததும், நாட்டுச் சர்க்கரையைபோட்டு, கொதித்து கரைந்ததும், வடிகட்டிக் கொள்ளவும். ஆறி வெந்த ரவையில்,கரைத்த கஸ்டர்டு பவுடர், பால் பவுடர், சமையல் சோடா,சேர்த்து,தேவை என்றால் சிறிது பால் சேர்த்து, மிருதுவாக பிசைந்துக் கொள்ளவும்.பிசைந்ததை கையில் நெய் தடவி, விருப்பமான வடிவில் தட்டிக் கொள்ளவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து, வெல்லக் கரைசல், உப்பு, ஏலத்தூள் சேர்த்து, கொதிக்க விட்டுஅடுப்பை நிறுத்தி விடவும். வெல்லம் கரைந்து கொதித்தால் போதும்.பாகு பதம்தேவையில்லை.அடுப்பை ஹையில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மீடியத்தில் வைத்து,தட்டினதை போட்டு, இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.பிறகு அதன் மேல் வெல்லக் கரைசலை ஊற்றி, 15 நிமிடம் ஊற விடவும்.மேலே சீவின பாதாமை போடவும். இப்போது சுவையான, சுலபமான,ஆரோக்கியமான,மில்லட், ரவா குலோப் ஜாமூன் தயார்.நாட்டுச் சர்க்கரை சேர்த்திருப்பதால்,கூடுதல் பலன் கிடைக்கும்.குலோப் ஜாமூன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

May 02, 2026

சாமை பாயாசம்.

தேவையான பொருட்கள்-100 gm சாமை,125 - 150 கிராம் வெல்லம் பொடித்தது,1/2 டம்ளர் பால்,2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்,1டேபிள்ஸ்பூன் நெய்,10 முந்திரி பருப்பு,1/2டீ ஸ்பூன் ஏலக்காய் சுக்கு பொடி,செய்முறை-  சாமையை நன்கு வறுத்துக் கொள்ளவும் பிறகு தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறைகழுவி விட்டு வேறு தண்ணீரில் அரை மணி நேரம் வரை ஊற விடவும். பிறகு மூன்று டம்ளர்அளவு தண்ணீர்விட்டு நன்கு வேகவிடவும். 15நிமிடத்தில் வெந்துவிடும். கெட்டியாகஇருந்தால் தேவைப்பட்டால் பாயாசம் வைக்கும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் சுக்குபொடி எடுத்து வைத்துக் கொள்ளவும். நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.ஏலக்காய் சுக்கு பொடி சேர்ப்பதால் பாயாசம் வாசமாக சுவையாக இருக்கும்..சாமை வெந்த பிறகு வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து விட்டு கொதிக்கவிடவும் வெல்லம்கரைந்ததும் தேங்காய் துருவல் ஏலக்காய் சுக்கு பொடி சேர்த்து கலந்து விடவும். கடைசியாகநெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.சுவையான சாமை பாயசம் தயார். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 66 67

AD's



More News