25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


.பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல்.

தேவையான பொருட்கள்:
1cupஃப்ரெஷ் பச்சை பட்டாணி,1பெரிய வெங்காயம்,1தக்காளி,
1/2kg காலிஃப்ளவர்,தலா 1ஸ்பூன் கடுகு, உளுந்து,தலா 1ஸ்பூன் சீரகம், சோம்பு
1/4spn மஞ்சள் தூள்,2spnமிளகாய்த்தூள்,1spnமல்லித்தூள்,10 பூண்டுபல்,சிறிதளவுபெருங்காயத்தூள்,
தேவையான அளவு- எண்ணெய், உப்பு ,தண்ணீர்.
செய்முறை :
அடி கனமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு உளுந்து
,சீரகம் சோம்பு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
நன்கு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயத்தை
சேர்த்து மிதமான தீயில் சிறிது வதக்கி விடவும்.
பிறகு தக்காளி சேர்த்து, நன்கு மசிய வதங்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.
பிறகுமல்லித்தூள் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வரை நன்கு பச்சை வாடை போக
வதக்கவும். பிறகு நறுக்கிய காலிஃப்ளவர், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி ,சிறிது தண்ணீர்
ஊற்றி, தட்டு கொண்டு மூடி மிதமான தீயில் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வேக
விடவும்.சுவையான பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News