தேவையான பொருட்கள்:கோவக்காய் - 250g (நன்கு கழுவி, நீளவாக்கில் நறுக்கியது)வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)கடுகு, உளுத்தம் பருப்பு - தலா -1/2 தேக்கரண்டிகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டிதனி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப)தனியா தூள் - 1/2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டிஎண்ணெய், உப்பு - தேவையான அளவுசெய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துதாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.நறுக்கிய கோவக்காயை சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்.மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.தண்ணீரை தெளிக்காமல், மூடி போட்டு குறைவான தீயில் 10-15 நிமிடம் வேகவைக்கவும்.அடிக்கடி கிளறி விடவும், இல்லையெனில் அடிப்பிடித்துவிடும்.காய் நன்றாக வெந்து, மொறுமொறுப்பாக வந்ததும், தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.கோவக்காயை மிகவும் மெலிதாக நறுக்கினால் பொரியல் சீக்கிரம் வெந்து, வறுவல் போலமொறு மொறுப்பாக இருக்கும். தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு இது சிறந்த காம்பினேஷன்.
தேவையான பொருட்கள்சுரைக்காய்: 1 (சிறியது, தோல் சீவி, பொடியாக நறுக்கியது - சுமார் 2-3 கோப்பை)பெரிய வெங்காயம்: 1 (பொடியாக நறுக்கியது)பச்சை மிளகாய்: 2-3 (இரண்டாக கீறியது)துருவிய தேங்காய்: 2-3 டேபிள் ஸ்பூன்வறுத்த வேர்க்கடலை:1/4 கோப்பை (கொரகொரப்பாக அரைத்தது அல்லது முழுதாக)கடுகு: 1/2 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு: 1 டீஸ்பூன்சீரகம்: 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை: ஒரு கொத்துமஞ்சள் தூள்: 1/4 டீஸ்பூன்எண்ணெய்: 2-3 டேபிள் ஸ்பூன்உப்பு: தேவையான அளவுசெய்முறைவாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துதாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி போல் ஆகும் வரைவதக்கவும்.நறுக்கிய சுரைக்காய், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்றாகக் கிளறவும்.சுரைக்காயில் நீர் சத்து அதிகமாக இருக்கும், எனவே சிறிதளவு தண்ணீர் தெளித்து, மூடி வைத்து மிதமானதீயில் 5-7 நிமிடம் வேகவைக்கவும்.சுரைக்காய் நன்கு வெந்ததும், துருவிய தேங்காய் மற்றும் வறுத்த வேர்க்கடலை தூவி கிளறி, 1 நிமிடம்கழித்து அடுப்பை அணைக்கவும்.சுரைக்காயில் தண்ணீர் இருப்பதால், அதிகமாக தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டாம்.வறுத்த வேர்க்கடலை பொரியலுக்கு நல்ல சுவை மற்றும் மொறுமொறுப்பைத் தரும்.
தேவையான பொருட்கள்:பேபி கார்ன் - 200 கிராம் (சிறியதாக நறுக்கியது)பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)கடுகு - 1/2 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன் (அல்லது காரத்திற்கு ஏற்ப)கரம் மசாலா - 1/4 ஸ்பூன் (விருப்பப்பட்டால்)எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்உப்பு - தேவையான அளவுசெய்முறை-பேபி கார்னை கழுவி, சிறிய வட்ட துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெந்நீரில் 2-3 நிமிடங்கள் போட்டுஎடுத்து வடிகட்டவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்துபொன்னிறமாகும் வரை வதக்கவும்.நறுக்கிய பேபி கார்ன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.மிதமான தீயில், மூடி போட்டு 5 நிமிடம் வேகவைக்கவும் .(தண்ணீர் ஊற்ற தேவையில்லை, வதக்கமென்மையாகும்.கார்ன் நன்கு வெந்து, மசாலா வாடை போனதும், மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.இது சாம்பார் சாதம், ரசம் சாதம் அல்லது தயிர் சாதத்திற்கு சிறந்த பக்க உணவாகும்.
தேவையான பொருட்கள்:பச்சை பப்பாளி (Raw Papaya) - 1 (சிறியது)தேங்காய் துருவல் - 2-3 மேசைக்கரண்டிபச்சை மிளகாய் - 2கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்சீரகம் - 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவுஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை:பப்பாளி காயின் தோலை சீவி, விதைகளை நீக்கிவிட்டு, துருவிக்கொள்ளவும் அல்லது பொடியாகநறுக்கிக்கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய்தாளிக்கவும்.துருவிய பப்பாளி, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். சிறிதளவு தண்ணீர்தெளித்து, மூடி வைத்து 5-7 நிமிடம் மிதமான தீயல் வேகவைக்கவும்.பப்பாளி வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.இது சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு சிறந்த துணை உணவாகும்.
தேவையான பொருட்கள்:மஞ்சள் பரங்கிக்காய் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது)தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டிகடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3கறிவேப்பிலை - சிறிதளவுவெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது - விருப்பப்பட்டால்)மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - 1 மேஜைக்கரண்டிசெய்முறை--ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துதாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.நறுக்கிய பரங்கிக்காய், மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். மிகக் குறைந்த அளவு தண்ணீர்(3-4 ஸ்பூன்) தெளித்து, மூடி வைத்து 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைக்கவும். காய் மென்மையாக வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.பரங்கிக்காய் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால், அதிக தண்ணீர் ஊற்ற வேண்டாம்.விருப்பப்பட்டால், சிறிதளவு வெல்லம் சேர்த்து இனிப்பு சுவையை கூட்டலாம்.இது சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு சிறந்த பக்க உணவாகும்.
தேவையான பொருட்கள்-1கப் ப்ரோக்கோலி (150கி),1/2 கப்பெ.வெங்காயம் நறுக்கினது,1/4 கப்தக்காளி நறுக்கினது,1/4 கப்துருவின தேங்காய்,1டீ ஸ்பூன்கடுகு,1/2 ஸ்பூன் உ.பருப்பு,1/2 ஸ்பூன்க. பருப்பு,1 டீ ஸ்பூன் ம. தூள்,1ஸ்பூன்காஷ்மீரி மி.தூள்,1 கொத்து கறிவேப்பிலை, 1 டீஸ்பூன்சர்க்கரை,ருசிக்கு உப்பு, 1டேபிள்ஸ்பூன் ந.எண்ணெய், 2ஸ்பூன் ப.மிளகாய் நறுக்கினது,2சி.மிளகாய்,தண்ணீர் தேவைக்குசெய்முறை -வெங்காயம்,தக்காளியை நறுக்கிக் கொண்டு, தேங்காயை துருவிக் கொள்ளவும்.ப.மிளகாயை நறுக்கிக்கொள்ளவும்.ப்ரோக்கோலியில், உப்பு போடவும்.வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி ப்ரோக்கோலியை 5 நிமிடம் ஊறவிடவும்.தண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த தண்ணீரில் 2 முறை சுத்தம் செய்து பின்பு நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், உ.பருப்பு,க.பருப்பு, தாளிக்கவும்.பிறகு, ப.மிளகாய், சி.மிளகாய் போடவும்.அடுத்து, வெங்காயம், ம.தூள், உப்பு போட்டு நன்கு வதங்கியதும், தக்காளி, மி.தூள் போடவும். ஒன்று சேர நன்குகலக்கவும்.கலந்து வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து,நறுக்கின, ப்ரோக்லி, சர்க்கரை போட்டு வதக்கவும்.வதங்கியதும், துருவின தேங்காயை போட்டு நன்கு கிளறி,கறிவேப்பிலையை போட்டதும் அடுப்பை நிறுத்திவிடவும். பிறகு, ஒன்று சேர கிளறி, பௌலுக்கு மாற்றவும்.இப்போது, மிகவும், சுவையான,*ப்ரோக்கோலி பொரியல்* தயார்.இது சுடுசாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம்,அனைத்திற்கும்,சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் -1/2கப் பட்டாணி,1/2கப் கேரட்,1/2கப்பீன்ஸ்,1/2கப் கேப்சிங்கம், 1வெங்காயம்,2தக்காளி,1/2ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், 1கொத்து கறிவேப்பிலை ,சிறிது கொத்தமல்லி,1/2ஸ்பூன் மஞ்சள் பொடி,1/2ஸ்பூன் மிளகாய் பொடி,1/2 ஸ்பூன் மல்லி பொடி ,1/2 ஸ்பூன் சோம்பு ,50 கிராம் பட்டர், ஆயில்,உப்பு - தேவையான அளவு.செய்முறை ஒரு வாணலியில் ஆயில், பட்டர் விட்டு, சோம்பு போட்டு தாளிக்கவும்.பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, போட்டு வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டுபேஸ்ட் போட்டு ,அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சிறிது வதங்கியதும்,நறுக்கிய காய்கள், உப்பு சேர்த்து வதக்கவும்.ஸ்டவ்வை சிம்மில் வைத்து, ஒரு மூடி போட்டு வைக்கவும். ஒரு பத்து நிமிடத்தில் காய்வெந்துவிடும். காய் கொஞ்சம் கிரன்ச்சியாக இருந்தால் நல்லது.பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு பச்சைவாசனை போகும் வரை வதக்கி. கடைசியாக கொத்தமல்லி இலை தூவவும்.பிறகு சப்பாத்தி செய்யவும். பட்டர் சேர்த்தால் சுவையாக இருக்கும்.இப்பொழுது சப்பாத்தியின் நடுவில் மசாலாவை வைத்து, முதலில் வலது புறமும், பிறகு இடதுபுறமும் மடிக்கவும். இப்போ சூப்பரான சப்பாத்தி வெஜ் ரோல் ரெடி,
தேவையான பொருட்கள் -100 கிராம் மீல் மேக்கர்,கால் கப் பொரிகடலை,சிறியதுண்டு இஞ்சி,3 பச்சை மிளகாய்,பட்டை, கிராம்பு,லவங்கம் – சிறிதளவு,ஒரு டீஸ்பூன்சோம்பு,ஒன்றுபெரிய வெங்காயம்,கருவேப்பிலை, கொத்தமல்லி,தேவைக்கேற்ப உப்பு,பொறிப்பதற்கு கடலை எண்ணெய்,ஐந்து பல்பூண்டு, ஒரு டீஸ்பூன்கான்பிளவர் மாவு.செய்முறை - மீல் மேக்கரை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் மீல் மேக்கரை வெதுவெதுப்பான தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்ஸி ஜாரில் மீல்மேக்கரை போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.பின்னர் இக்கலவையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து வைத்துக் கொண்டு, சிறு சிறுஉருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இக்கலவையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து வைத்துக் கொண்டு, சிறு சிறுஉருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன்பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு உருண்டைகளை போட்டு மிதமானதீயில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.சுவையான வெஜ் கோலா ரெடி. டொமேட்டோ சாஸ் கெட்சப் போன்றவற்றுடன் சாப்பிட்டால்மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் -2 கரண்டி தோசை மாவு, 3 ஸ்பூன் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது,2 ஸ்பூன் குடை மிளகாய் பொடியாக நறுக்கியது,4 ஸ்பூன் துருவிய சீஸ்,3 ஸ்பூன் துருவிய கேரட்,சில்லி ப்ளேக்ஸ் கால்ஸ்பூன்,3 ஸ்பூன் தக்காளி சாஸ்.செய்முறை -தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக காய்ந்ததும் இரண்டு கரண்டி மாவு ஊற்றி சற்றுமொத்தமான தோசையாக வார்த்து கொள்ளவும். ஒருபுறம் நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டுமற்றொருபுறம் நன்றாக வேகவிடவும்.ஒரு ஸ்பூன் ஆயில் ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்து விடவும்.இருபுறமும் வெந்தவுடன் தோசையின் உள்பகுதியில் தக்காளி சாஸ் தடவவும் .பின்பு வெங்காயம்,கேரட், குடை மிளகாய் ,ஆகியவற்றை ஒவ்வொன்றாக தூவவும். அதன்பின் இறுதியாக சீஸைதூவி அடுப்பை அணைத்து விடவும்.இளம் சூட்டிலேயே தோசையை ரோல் செய்து குறுக்கில்வெட்டி பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:மைதா - 2 தேக்கரண்டிகுடைமிளகாய்,கோஸ். கேரட்,வெங்காயம்,பீன்ஸ்- தலா, 100 கிராம்எண்ணெய், உப்பு,மிளகுத் துாள் - தேவையான அளவு.செய்முறை:கேரட், குடைமிளகாய், கோஸ்,வெங்காயம் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை, மெல்லியதாகநீளவாக்கில் நறுக்கவும் . வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், காய்கறி கலவையைபோட்டு வதக்கி உப்பு, மிளகு துாள் சேர்த்து இறக்கவும். ஆறியதும், சிறிய சிறிய ரோல்களாகஉருட்டி வைக்கவும்.மைதாவில் தண்ணீர் சேர்த்து, கெட்டியாக கரைக்கவும். உருட்டிய ரோல்களை மைதாகலவையில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மினிவெஜ்ரோல், தயார்.சாஸுடன் சேர்த்து சாப்பிட, அருமையாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும்விரும்பி உண்பர்.