தேவையானவை: முருங்கைக்காய்- 2 (சதைப் பற்றுள்ளது), மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - ஒன்று, பாசிப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: முருங்கைக்காய், உருளைக்கிழங்கை, நறுக்கி, நீர் விட்டு,குக்கரில் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைக்கவும். முருங்கையின் சதையை சுரண்டி எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்துக்கொள்ளவும். பாசிப்பருப்பில் ஒன்றரை கப் நீர் ஊற்றி, குக்கரில் வேகவிட்டு மசித்து, தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். பருப்பு நீரில் மசித்த உருளைக்கிழங்கு, முருங்கை சதைப்பகுதியை போட்டு கரைக்கவும். இந்தக் கரைசலை வதங்கிய வெங்காயத்தில் ஊற்றி, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். உப்பு, தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.குறிப்பு: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், வெண்ணெய், நெய்க்குப் பதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். சூப் செய்யும்போது, எப்போதும் மிதமான தீயிலேயே செய்யவும். நடுநடுவே கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
தேவையானவை: துளசி இலை அரை கப், வெற்றிலை 4, கற்பூரவல்லி இலை - 2, புதினா இலை - கால் கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டுப் பல் - 2, சர்க்கரை - அரை டீஸ்பூன், உப்பு -தேவைக்கேற்ப.செய்முறை: கடாயில் நெய் விட்டு பூண்டு, நறுக்கிய வெங்காயத்தைவதக்கவும். எல்லா இலைகளையும் சுத்தமாகக் கழுவி இதனுடன் சேர்த்து வதக்கவும். இதில் நீர் விட்டு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு, அடுப்பை நிறுத்தி, இலைகளை தனியே எடுத்து மையாக அரைத்து, வேகவைத்த நீரில் மீண்டும் சேர்த்து, ஒரே ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். பரிமாறும்போது சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
தேவையானவை: பீன்ஸ் 50 கிராம், கேரட் - ஒன்று, முட்டைகோஸ் 100 கிராம், - வெங்காயத்தாள் - ஒன்று, அஜினமோட்டோ - அரை டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக் கேற்ப.செய்முறை: அனைத்து காய்கறிகளையும் மெலிதாக ஒரே அளவாக நீட்டமாக (தீக்குச்சி போன்ற துண்டுகளாக) நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து.அஜினமோட்டோ, உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். காய்கறி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சோயா சாஸ் சேர்த்து குறைந்த தீயில் வேகவிடவும். கொதிவரும்போது, சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து சூப்பில் சேர்க்கவும். இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.
தேவையானவை: மாம்பழக்கூழ் ஒரு கப், சர்க்கரை ஒன்றரை கப், நெய் - கால் கப். பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி, பாதாம் (தேவைப் பட்டால்) - சிறிதளவு.செய்முறை: அடி கனமான கடாயை சூடாக்கி, மாம்பழக்கூழ். சர்க்கரையைப் போட்டுக் கலந்து கிளறவும். நன்றாக இறுகி வரும்போது மாவுகளை கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி, நெய்யை அடிக்கடி விட்டுக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் இறக்கி முந்திரி, பாதாமை வறுத்துப் போடவும்.
தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பால், சர்க்கரை தலா அரை கப், கோவா, நெய் - தலா கால் கப், பாதாம், முந்திரி துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை தேங்காய் துருவலை பால் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில் தேங்காய் பால் விழுதைக் கொட்டி மிதமான தீயில் கிளறவும், சர்க்கரை சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். கெட்டியாகும் பதத்தில் நெய் சேர்த்துக் கிளறி பாதாம், முந்திரி துண்டுகளை நெய்யில் வறுத்து தூவவும்.
தேவையானவை: மைதா, நெய் - தலா இரண்டு கப், சர்க்கரை - 4 கப். ஜாதிக்காய் பொடி - கால் டீஸ்பூன், முந்திரிப்பருப்பு, பிஸ்தா தலா ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.செய்முறை: சர்க்கரையை அடிகனமான கடாயில் கொட்டி, மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும்வரை காய்ச்சவும். மைதாவை தண்ணீரில் கரைத்து சர்க்கரை பாகில் விட்டு. கட்டி தட்டாமல் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும், முந்திரி, பிஸ்தாவை நெய்யில் வறுத்து, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய் பொடியை போட்டு இறக்கவும். இதை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
தேவையானவை: பால் 2 லிட்டர், நெய் ஒரு டேபிள்ஸ்பூன், - பொடித்த முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - இரண்டரை கப், சிட்ரிக் ஆசிட் (அ) லெமன் சால்ட் - கால் டீஸ்பூன்.செய்முறை: அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, பாலை விட்டு சுண்டக் காய்ச்சவும். இதில் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட்டை விட்டு சிறிது நேரம் காய்ச்சவும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும். பால் திரிந்து அல்வா பதத்தில் வந்ததும் இறக்கவும்.
தேவையானவை: கொட்டை இல்லாத பேரீச்சம்பழம், சர்க்கரை, நெய் தலா ஒரு கப், பால் அரை கப், பாதாம், முந்திரி, குங்குமப்பூ தேவையான அளவு.செய்முறை: பேரீச்சம்பழத்தை வெந்நீரில் ஊற வைத்து, பால் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். கடாயை சூடாக்கி, அதில் சக்கரையைப் போட்டு இளம் பாகு பதம் வந்ததும், அரைத்த பேரீச்சம்பழ விழுதைக் சேர்த்து நெய் விட்டுக் கிளறவும். இதில் பாதாம், முந்திரி, குங்குமப்பூ சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும்.
தேவையான பொருட்கள் -பால் 2 லிட்டர்,ஜல்டின் பவுடர் ஒரு ஸ்பூன், கஸ்டர்டு பவுடர் 7 ஸ்பூன், சீனி 400 கிராம், வெண்ணிலா எசன்ஸ், அன்னாச்சி பழ எசன்ஸ் ஒரு ஸ்பூன்.செய்முறை- பாலை நன்றாக காய்ச்சவும் 2லிட்டர் பால் 1 லிட்டர் ஆகும் வரை வத்தவைக்கவும், பின்பு ஜல்டின் பவுடரை வற்றிய பாலில் சேர்த்து நன்றாக கலக்கவும். கஸ்டர்டு பவுடரை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கி அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து, அதை பாலில் சேர்க்கவும். கடைசியில் சீனியை நன்கு கரைத்தபின்பு வெண்ணிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். பால் ஆறிய பின்பு ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.
பேரி ஜெல்லி தோலோடு வெட்டி உள்ளேயிருக்கும் கடினமான பாகத்தை நீக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டுத் துண்டுகளை மூடும் அளவுக்குத் தண்ணீரை ஊற்றி, நன்றாக வேக வைத்து தண்ணீரை வடித்துவிடவும். பிறகு அந்தச் சாற்றில் அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு சர்க்கரை சேர்த்து, இரண்டு எலுமிச்சம் பழ ரஸத்தையும் பிழிந்து விடவும். பின்பு அதை அடுப்பிலேற்றி மெதுவாக எரிய விடவும். ஜெல்லி தயாரானதும் இறக்கவும்.பின்பு ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.