பன்னீர் மிளகு வறுவல் (Paneer Pepper Fry) என்பது 15-20 நிமிடங்களில் செய்யக்கூடிய, பொரித்த பன்னீர்துண்டுகளை வெங்காயம், குடைமிளகாய் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வறுக்கப்படும் சுவையான ஒரு Sidedish ஆகும். இது சப்பாத்தி, புலாவ், மற்றும் தயிர் சாதத்திற்கு மிகச்சிறந்த இணையாகும். தேவையான பொருட்கள்:பன்னீர் - 200 கிராம் (சதுர வடிவில் நறுக்கியது)மிளகுத்தூள் - 1-2 டீஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)குடைமிளகாய் - 1/4 (பொடியாக நறுக்கியது)இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுகார்ன் பிளவர்/மைதா - தலா 1-2 மேசைக்கரண்டி (விருப்பப்பட்டால் - பன்னீரை கோட்டிங் செய்து பொரிக்க)எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை:பன்னீர் துண்டுகளை அப்படியே வறுக்கலாம் அல்லது கார்ன் பிளவர், மிளகுத்தூள், உப்பு கலந்த கலவையில்முக்கி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து தனியே வைக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம்மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும்.வறுத்து வைத்த பன்னீர் துண்டுகளைச் சேர்த்து, மசாலா பன்னீரில் ஒட்டும் வரை நன்கு கிளறி, கடைசியாககொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும். பன்னீர் மிகவும் மென்மையாக இருக்க, வறுத்த பின் சிறிது நேரம் வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்துபின்னர் மசாலாவில் சேர்க்கலாம்.
தேவையான பொருட்கள்:பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து, தோல் உரித்து, துண்டுகளாக்கப்பட்டது)வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)தக்காளி - 2 (அரைத்தது)இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்தயிர் - 2 டேபிள் ஸ்பூன் (தேவைப்பட்டால்)மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்தனியா தூள் - 1 டீஸ்பூன்கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்சீரகம் - 1/2 டீஸ்பூன்எண்ணெய்/வெண்ணெய் - தேவையான அளவுஉப்பு, கஸ்தூரி மேத்தி, கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு செய்முறைபன்னீர் துண்டுகளை சிறிது எண்ணெய் அல்லது வெண்ணெயில் லேசாக பொன்னிறமாகும் வரை வறுத்து,பின் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊறவைக்கவும் (இது பன்னீரை மென்மையாக வைத்திருக்கும்).கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம் தாளித்து, பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதுசேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும்வரை நன்கு வதக்கவும்.வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம்கொதிக்கவிடவும். தேவைப்பட்டால் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து, கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தி தூவி, மிதமான தீயில் 2-3நிமிடம் மூடி வைத்து சமைக்கவும்.கொத்தமல்லி இலைகள் தூவி, சூடான சப்பாத்தியுடன் பரிமாறவும்.கிரேவி இன்னும் ரிச் ஆக இருக்க, முந்திரி விழுது அல்லது கிரீம் சேர்த்துக்கொள்ளலாம்.பன்னீரை நேரடியாகவும் பயன்படுத்தலாம், ஆனால் வறுத்து சேர்ப்பது கூடுதல் சுவை தரும்.சப்பாத்தி, பரோட்டா, அல்லது சாதத்திற்கு ஏற்ற, தக்காளி-வெங்காய அடிப்படையிலான ஒரு சுவையான வடஇந்திய உணவாகும். 20-30 நிமிடங்களில் எளிதாகச் செய்யக்கூடிய, கிரீமியான இந்த கிரேவி சத்துமிக்கது.வறுத்த பன்னீர் துண்டுகள், வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் மசாலாக்களை சேர்த்து, தயிர் அல்லதுமுந்திரி விழுதுடன் சமைத்து பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்:சிவப்பு அவல் - ஒரு கப்பெரிய சிவப்பு கேரட் -1 (பொடியாக நறுக்கியது)பெரிய வெங்காயம்- 1 (பொடியாக நறுக்கியது)காய்ந்தமிளகாய் - 1வேர்க்கடலை - ஒரு கைப்பிடிமல்லித்தழை, கறிவேப்பிலை(பொடியாக அரிந்தது)- ஒரு கைப்பிடி அளவுஎலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்கடுகு,உளுந்தம்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவுஉப்பு, எண்ணெய் - தேவைக்கேற்பசெய்முறை :சிவப்பு அவலை சுத்தம் செய்து நன்றாகக் கழுவி ஊற வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணொய் விட்டு காய்ந்த தும், கடுகு, கடலைப்பருப்பு,வேர்க்கடலை தாளித்து, மிளகாயை கிள்ளிப் போடவும்.பின்னர் வெங்காயம், கேரட்டை நன்றாக வதக்கி, மல்லித் தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கிவிட்டு, ஊறவைத்த அவலைக் கொட்டி உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.பின்னர் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி, வெள்ளரி விதை தூவி இறக்கவும்.சிவப்பு அவல் கேரட் போகா தயார்.இது தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்து சாப்பிட, ருசி அள்ளும்,
தேவையான பொருட்கள்:ஆப்பிள் - 2பச்சரிசி – 2 கப்பொடித்த வெல்லம் - 1 கப்ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்நெய் - தேவையான அளவுசெய்முறை:.ஆப்பிளை தோல் சீவி, சிறிதுசிறிதாக நறுக்கிவைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து,நறுக்கிய ஆப்பிள் துண்டுகளைப் போட்டு பத்துநிமிடம் வேகவிட்டு மசித்து வைக்கவும்.பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து பிறகு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.அதோடு, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக அரைக்கவும்.அரைத்த மாவில் வேக வைத்து மசித்த ஆப்பிளை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.இப்பொழுது பணியாரக் கல்லில் நெய் விட்டு, மாவை ஊற்றி அப்பமாக சுட்டுஎடுக்கவும்.சுவையான ஆப்பிள் அப்பம் தயார்.
தேவையான பொருட்கள்:சிவப்பு புட்டரிசி - 1 கப்சர்க்கரை - ஒன்றரை கப்தேங்காய் பால் - ஒன்றரை கப்பால் - 2 கப்நெய், முந்திரி - தேவையான அளவுஏலக்காய் துாள் - சிறிதளவு.செய்முறை:சிவப்பு புட்டரிசியை வாணலியில் நன்கு சிவக்க வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து அரைத்த புட்டரிசி, பால், தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து கிளறவும்.வாணலியில் ஒட்ட ஆரம்பிக்கும் போது, பாதி நெய் சேர்த்து கிளறவும். வெந்ததும், முந்திரி, ஏலக்காய்துாள்,மீதமுள்ள நெய் சேர்த்து, அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.பி-காம்ப்ளக்ஸ், இரும்பு சத்து, நார்சத்து அதிகமுள்ள, சிவப்பு புட்டரிசி அல்வா தயார். ருசியாக இருப்பதுடன்,ஆரோக்கியமும் நிறைந்தது.
தேவையான பொருட்கள்மீல் மேக்கர்-1கப்சோள மாவு- 4 டேபிள் ஸ்பூன்குடைமிளகாய்- பாதிபெரிய வெங்காயம்-பாதிவெங்காயத்தாள் - 2 கொத்துஇஞ்சி- 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)பூண்டு - 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)சோயா சாஸ்- 1 டேபிள்ஸ்பூன்சில்லி சாஸ்- 1 டேபிள்ஸ்பூன்சிவப்பு மிளகாய்த் தூள்- 1 டீஸ்பூன்மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்எலுமிச்சைச் சாறு-1 டேபிள்ஸ்பூன்எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்செய்முறை:மீல் மேக்கரை உப்பு கலந்த வெந்நீரில் 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதைப் பிழிந்து,மென்மையாகும் வரை உப்பு கலந்த நீரில் வேக வைக்கவும்.அதன்பின் நீரை வடித்து, கழுவி பிழிந்து, தனியாக வைக்கவும். அடுத்து, தயார் செய்து வைத்துள்ள மீல்மேக்கருடன். ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவு, சிறிது உப்பு, அரை ஸ்பூன் மிளகுத் தூள், அரை ஸ்பூன்மிளகாய்த் தூள் சேர்த்துப் பிசைந்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி, வெங்காயம் மற்றும் வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி,தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி, முதலில் ஊறவைத்த சோயா துண்டுகளை மொறுமொறுப்பாக வறுத்துக் கொள்ளவும்.மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, முதலில் இஞ்சி, பூண்டை அதன் நிறம் மாறாமல் ஒரு நிமிடம் வதக்கவும்,பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் வெங் காயத் தாளின் வெள்ளைப் பகுதியைச் சேர்க்கவும்.கண்ணாடி பதத்துக்கு மாறும் வரை வதக்கவும். பின் னர் குடைமிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.அதன்பின் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறவும். சுவையான, சத்தான சோயா மஞ்சூரியனை ருசிக்கலாம்.
தேவையான பொருட்கள்:தக்காளி -500 கிராம்சர்க்கரை - 350 கிராம்எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டிபட்டை, கிராம்பு - சிறிதளவுசெய்முறை:கொதிக்கும் வெந்நீரில், தக்காளியை கீறி போட்டு, மூடி வைக்கவும். ஆறியதும், தோல் உரித்து, விதையைநீக்கி, சதைப்பகுதியை மட்டும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து, இந்த கலவையை போட்டு, நீர் சுண்டும் வரை கிளறவும். பின், சர்க்கரையைசேர்க்கவும். கலவை கொதித்து கெட்டியானதும்,எலுமிச்சை சாறு சேர்க்கவும். பட்டை மற்றும் கிராம்பைபொடி செய்து போட்டு,கிளறிஇறக்கவும்.சுவையான தக்காளி ஜாம் தயார். இட்லி, தோசை,ரொட்டியில் தடவி கொடுத்தால். குழந்தைகள் விரும்பிஉண்பர். கண்ணாடி பாட்டில்களில் வைத்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:தினை - 1 கப்கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 தேக்கரண்டிவெங்காயம் - 1 (நறுக்கியது)கேரட், பீன்ஸ், பட்டாணி - 1/2 கப் (நறுக்கியது)பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டுகறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவுஎண்ணெய்/நெய் - தேவையான அளவுதண்ணீர் - 3 கப் (1 கப் தினைக்கு)செய்முறை:தினையை நன்கு கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் தாளிக்கவும்.வெங்காயம், காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.3 கப் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.ஊறவைத்த தினையைச் சேர்த்து, மூடி வைத்து மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை சமைக்கவும். இதனை தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்:அரிசி மாவு - 1 கப்,பொட்டுக்கடலை மாவு (வறுத்து அரைத்தது) - 1/4 கப்,கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,பச்சை மிளகாய் - 2,இஞ்சி - சிறிய துண்டு,வெண்ணெய் அல்லது சூடான எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,ஓமம் - 1/2 தேக்கரண்டி,எள் - 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்),பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு ,செய்முறை:கறிவேப்பிலை,பச்சை மிளகாய்,இஞ்சி, ஆகியவற்றை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வடிகட்டி கொள்ளவும். (திப்பிகள் இல்லாமல் இருந்தால் முறுக்கு அச்சில் அடைக்காது).ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுபொட்டுக்கடலை மாவுவெண்ணெய்ஓமம்பெருங்காயத்தூள்உப்பு மற்றும் அரைத்த கறிவேப்பிலை விழுது ஆகியவற்றை சேர்க்கவும்.சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துமுறுக்கு மாவு பதத்திற்கு (சப்பாத்தி மாவை விட மென்மையாக ஒட்டாத பதம்) பிசைந்து கொள்ளவும்.முறுக்கு அச்சில் (முள் அச்சு) மாவை நிரப்பிசூடான எண்ணெயில் வட்டமாக பிழிந்து விடவும்.மிதமான சூட்டில் வைத்துஇரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். நுரை அடங்கியதும் முறுக்கு தயாராகிவிட்டது. கறிவேப்பிலையை நன்றாக அரைத்து வடிகட்டுவது முக்கியம்.அதிக கறிவேப்பிலை சேர்த்தால் முறுக்கு கசக்க வாய்ப்புள்ளது.
தேவையான பொருட்கள்:பசலைக்கீரை - 1 கட்டு (சுத்தம் செய்தது),அரிசி மாவு - 1 கப்,கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்,வெண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன்,எள்/சீரகம் - 1 டீஸ்பூன்,மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (தேவைக்கேற்ப),பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்,உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்கு. செய்முறை:கீரையை கழுவிசிறிது தண்ணீரில் 2 நிமிடம் வேகவைத்து அல்லது பச்சையாக அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,கடலை மாவு,கீரை விழுது,வெண்ணெய்,எள்,மிளகாய் தூள்,பெருங்காயம்,மற்றும் உப்பு சேர்த்து,தேவையான அளவு தண்ணீர் தெளித்து மென்மையான முறுக்கு மாவு பதத்திற்குபிசையவும்.முறுக்கு அச்சில் (ஸ்டார் வடிவம்) மாவை போட்டுசூடான எண்ணெயில் முறுக்காக பிழிந்து விடவும்.மிதமான தீயில் வைத்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால் சுவையான கீரை முறுக்கு தயார். கீரையை விரும்பாத குழந்தைகளுக்கு இது சிறந்தது .