தேவையான பொருட்கள்2கப் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு,1/2கப் பாசி பருப்பு,1/2மூடி தேங்காய்,1ஸ்பூன் சீரகம்,7,8சாம்பார் வெங்காயம்,2 பச்சை மிளகாய்,தேவையான அளவு உப்பு,1ஸ்பூன் எண்ணெய்,1ஸ்பூன் கடுகு,1கொத்து கறிவேப்பிலை.செய்முறை: முதலில் வாழைத்தண்டை வட்டமாக நறுக்கி அதில் இருந்து நாரை விரலில்சுற்றி எடுத்து விட்டு பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்...இல்லை என்றால் நிறம் மாறி விடும்..பருப்பை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி அரை பதம் வெந்ததும் தண்டை சேர்த்து வேக விடவும்..மிக்ஸியில் தேங்காய், மிளகாய், வெங்காயம், சீரகம் சிறிது தண்ணீர் விட்டுஅரைத்து வெந்த வாழை தண்டுடன் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க வைக்கவும்...எல்லாம் வெந்ததும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கூட்டுடன் சேர்க்கவும்...இப்போது வாழைத்தண்டு கூட்டு தயார். இது வத்த குழம்புடன் சாப்பிடஅருமையாக இருக்கும்...
தேவையான பொருட்கள்:1/4கிலோ வடைப் பருப்பு,1வாழைத்தண்டு,2பெரிய வெங்காயம்,2 துண்டு இஞ்சி,6 வரமிளகாய்,1துண்டு பட்டை,2டீஸ்பூன் சோம்பு,கறிவேப்பிலை மல்லித்தழை,தேவையான அளவு உப்பு எண்ணெய்,செய்முறை:வடை பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துவடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.ஊறிய வடை பருப்பு மிளகாய் சோம்பு பட்டை இஞ்சி கொஞ்சம் கருவேப்பிலைஉப்பு இதை அனைத்தையும் அரைத்து வைத்துக்கொள்ளவும் .கொஞ்சம்கொரகொரப்பாக. தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.வாழைத்தண்டை பொடிப் பொடியாக நறுக்கி எண்ணெய் இல்லாமல்வாணலியில் நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.அரைத்து வைத்த கலவையில் மல்லித்தழை வெங்காயம் கறிவேப்பிலைவாழைத்தண்டு இதை அனைத்தையும் போட்டு நன்றாக கலக்கி எண்ணெயில்வடை போல் தட்டி போட்டு பொரித்தெடுக்கவும்.வாழைத்தண்டு வடை சத்தானது ,சுலபமானது.
தேவையான பொருட்கள்:2 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார்,1டேபிள்ஸ்பூன் மைதா,1கப் வாழைத்தண்டு,1டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு,1 கொத்து கறிவேப்பிலை,தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்.செய்முறைஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார், ஒரு டேபிள்ஸ்பூன் மைதா,ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் ,சேர்த்து பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்,தேவையான உப்பு, சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.பிறகு நீள நீளமாக நறுக்கி வைத்த வாழைத்தண்டை, தண்ணீர் இல்லாமல்பிழிந்து கலந்த மாவில் சேர்த்து பிசறி வைக்கவும்.கலந்து வைத்த வாழைத்தண்டு மசாலாவை பத்து நிமிடங்கள் ஊற வைத்துபின்பு, ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து,எண்ணெய் சூடானதும் ஊற வைத்த வாழைத்தண்டு சேர்த்து பொரிக்கவும்.நன்றாக பொன்னிறமாக வரும் வரை நன்றாக பொரித்தெடுக்கவும் .அதேஎண்ணெயில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொரித்து எடுக்கவும்.இரண்டையும் கலந்து பரிமாறவும்.சுவையான வாழைத்தண்டு சிப்ஸ் தயார்.வாழைத்தண்டு சாப்பிடாத குழந்தைகளுக்கு சிப்ஸ் மாதிரி செய்து கொடுத்தால்,குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:1 கப்வாழைத்தண்டு,3 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு,1 துண்டு பட்டை,2கிராம்பு,2 ஏலக்காய்,2 வரமிளகாய்,2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்,1 டேபிள்ஸ்பூன் சோம்பு,5 பல் பூண்டு,1 கொத்து கருவேப்பிலை,1 பெரிய வெங்காயம்,தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்,தேவையான அளவு உப்பு. செய்முறை முதலில் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை ஒரு குக்கரில் சேர்த்து 2 விசில்விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து பொன்நிறம் வரும்வரை வறுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி பண்ணி எடுத்துக் கொள்ளவும்..பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு,ஏலக்காய் ,சோம்பு, சேர்த்து ,பிறகு பூண்டு ,கருவேப்பிலை ,வெங்காயம் ,சேர்த்து,வர மிளகாய் ,தேங்காய் துருவல் ,சேர்த்து நன்றாக இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.வதக்கி வைத்த மசாலாவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்துஅதனுடன் வேக வைத்த வாழைத்தண்டு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.பிறகு அரைத்த கலவையில் பொடி செய்த கடலைப்பருப்பை சேர்த்து, பிசைந்துக்கொள்ளவும். பிறகு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.பிறகு ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி,எண்ணெய் சூடானதும் உருட்டி வைத்த கோலா உருண்டைகளை சேர்த்துபொன்னிறம் வரும் வரை பொரித்தெடுக்கவும்.சுவையான வாழைத்தண்டு கோலா உருண்டை தயார்.
தேவையான பொருட்கள்:-ஸ்வீட் கார்ன் (மக்காச்சோளம்) - 1 கப்,பொடியாக நறுக்கிய கேரட் - 2 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 2 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய பூண்டு - 1 ஸ்பூன்,வெண்ணெய் அல்லது எண்ணெய் - 1 ஸ்பூன்,சோள மாவு (Cornflour) - 1 ஸ்பூன் (அரை கப் தண்ணீரில் கரைத்தது),மிளகுத்தூள் - அரை ஸ்பூன்,உப்பு - தேவையான அளவு,தண்ணீர் - 2 முதல் 3 கப் .செய்முறை :-எடுத்துக்கொண்ட 1 கப் சோளத்தில், பாதியை மட்டும் தனியாக எடுத்துமிக்சியில் போட்டு மையாக அரைத்துக்கொள்ளவும்.மீதமுள்ள முழு சோளத்தை தனியாக வைக்கவும்.பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு,கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து லேசாக வதக்கவும்.அதனுடன் முழு சோளம் மற்றும் அரைத்த சோள விழுதைச் சேர்த்து,தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து மிதமான தீயில் 10நிமிடங்கள் கொதிக்க விடவும்.சோள மாவு தண்ணீரை அதனுடன் ஊற்றி கிளறவும். சூப் லேசாககெட்டியானதும் அடுப்பை அணைத்துவிடலாம். சூடான சுவையான ஸ்வீட்கார்ன் சூப் தயார்.
தேவையான பொருட்கள் -2 கப் பாசுமதி அரிசி,ஒன்றரை கப் ஸ்வீட் கார்ன் கர்னல்கள்,பட்டை, கிராம்பு ஏலக்காய்,1 வெங்காயம்,1தக்காளி,1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1 டேபிள் ஸ்பூன் பிரியாணி மசாலாத்தூள்,1டீஸ்பூன் தனியாத்தூள்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1/4 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்,தேவையான அளவு - உப்பு, தேங்காய் பால்1டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு,4டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய்,மல்லி இலை,புதினா இலை.செய்முறை :ஸ்வீட் கார்ன் மேல் உள்ள சருகை உரித்து,பின் சோளத்தை பிரித்து தயாராகவைத்துக்கொள்ளவும்.வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி, புதினா இலைகளை நறுக்கிவைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து, சூடானதும் நெய் சேர்த்து, சூடானதும்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை,ஸ்டார், முந்திரி பருப்பு சேர்த்துவறுத்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்குவதக்கவும்.பச்சை வாசம் போனதும், நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாயை சேர்த்துவதக்கவும்.பின்னர் மேலே கொடுத்துள்ள மசாலா தூள் எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.அத்துடன் பிரித்து வைத்துள்ள சோளத்தை சேர்த்து கலந்து விடவும்.பின்னர் தயாராக வைத்துள்ள தேங்காய் பால், தேவையான அளவு தண்ணீர்சேர்த்து கலந்து விடவும்.தேவையான அளவு கல் உப்பு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துமிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.தண்ணீர் வற்றி சாதம் தயாரானதும் கொஞ்சம் நெய் சேர்த்து கலந்து இறக்கினால்ஸ்வீட் கார்ன் பிரியாணி தயார்.கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து ஒரு பரிமாறும் தட்டில்சேர்க்கவும். ஆனியன் தக்காளி ரைதாவுடன் சேர்த்து பரிமாறவும்.இப்போதுமிகவும் சுவையான சத்தான ஸ்வீட் கார்ன் பிரியாணி சுவைக்கத் தயார்.
தேவையான பொருட்கள்-1கப் ஸ்வீட் கார்ன்,1/4 கப் வடை பருப்பு,5 வற்றல் மிளகாய்,1/2 டீஸ்பூன் சோம்பு,கறிவேப்பிலை,சிறிய துண்டுஇஞ்சி,தேவையான அளவுஉப்பு,1/2 லிட்டர் எண்ணெய் பொரிப்பதற்கு.செய்முறை -ஸ்வீட் கானில் உள்ள சோளத்தை தனியாக பிரித்து எடுக்கவும்.பிரித்து எடுத்த சோளத்துடன், ஒரு மணி நேரம் ஊற வைத்த, வடை பருப்புகலந்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.பின்னர் வற்றல் மிளகாய், சோம்பு, இஞ்சி,கறிவேப்பிலை சேர்த்து அரைத்து,கான் வடை மாவில் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவைத்துக்கொள்ளவும்.பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும்,வடையை தட்டி போடவும்.நன்கு வெந்து பொன்னிறமானதும் எடுத்தால் ஸ்வீட் கான் வடை தயார்.சுவையான, சத்தான, கிரிஸ்பியான ஸ்வீட் கான் வடை சுவைக்கத்தயார்.ஸ்வீட்கான் வடை ஒரு நல்ல மாலை நேர ஸ்நாக்ஸ்.
தேவையான பொருட்கள் -10பேபிகார்ன்,1பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்,ஒரு டீஸ்பூன்சோயாசாஸ்,இரண்டு டீஸ்பூன்தக்காளி சாஸ்,தேவையான அளவுஉப்பு,ஒரு டீஸ்பூன்மிளகாய்தூள்,ஒரு டீஸ்பூன் இஞ்சிபூண்டு,இரண்டு டீஸ்பூன்வெங்காய தாள்,ஒரு டீஸ்பூன்மைதா மாவு ,இரண்டு டீஸ்பூன்சோளமாவு,அரை டீஸ்பூன்கரம் மசாலா.செய்முறை -பேபிகார்னை நீளவாக்கில் நான்காக நறுக்கி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் மைதா சோளமாவு உப்பு சேர்க்கவும்.மிளகாய்தூள் கரம்மசாலா சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.பேபிகார்ன் சேர்த்து கலந்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டுசேர்த்து வெங்காயம் வெங்காய தாள் சேர்த்து வதக்கவும்.பின்னர் அதில் அரை டீஸ்பூன் மிளகாய்தூள் உப்பு சோயா சாஸ் தக்காளி சாஸ்சேர்த்து நன்றாக வதக்கவும்.பேபிகார்ன் மஞ்சூரியன் .READY.
தேவையான பொருட்கள்-10பேபி கார்ன்,ஒரு டீஸ்பூன்மைதா மாவு ,ஒன்றரை டீஸ்பூன்சோளமாவு,அரை டீஸ்பூன்மிளகாய்தூள்,தேவையான அளவுஉப்பு,கால் டீஸ்பூன்கரம் மசாலா,செய்முறை- பேபி கார்ன் நீளவாக்கில் வெட்டி ஒரு கப் தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம்கொதிக்கவிடவும்.பாத்திரத்தில் மைதா உப்பை சோளமாவு மிளகாய்தூள் கரம் மசாலாஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.வேகவைத்த கார்ன் மாவில் நனைத்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.
தேவையான பொருட்கள்-1கப் ஸ்வீட் கார்ன்,1கப் உருளைக்கிழங்கு வேகவைத்தது,1டேபிள்ஸ்பூன் கடலை மாவு,1கப் நறுக்கிய வெங்காயம்,3பச்சை மிளகாய்,1கப் சோளமாவு,1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,சிறிதுகொத்தமல்லி இலை,சிறிதுகறிவேப்பிலை,1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,1டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்,1/2டீஸ்பூன் கரம்மசாலா தூள்,1டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு.1 கப் பிரெட் தூள்.தேவையான அளவுஉப்பு, எண்ணெய்.செய்முறை - ஸ்வீட் கார்ன் முத்துகளை உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவை,வாணலியில் லேசாக வறுத்து கொள்ளவும்.வேகவைத்த சோளத்தில், ஒரு ஸ்பூன் அளவு மட்டும் தனியே வைக்கவும். மீதிஇருக்கும் சோளத்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.ஒரு பவுளில் அரைச்சு ஸ்வீட் கார்ன் பேஸ்ட் எடுத்து, அதில் வேக வைத்து மசித்தஉருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது,கொத்தமல்லி, கறிவேப்பிலை, வறுத்த கடலை மாவு, சோளமாவு சேர்த்துபிசைந்து கொள்ளவும்.மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா, எலுமிச்சை சாறு (1ஸ்பூன்), உப்பு,ஏற்கனவே தனியாக வைத்துள்ள கார்ன், என எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகமசித்து கொள்ளவும். பின் தேவையான வடிவில் உருட்டி கொள்ளவும்.உருண்டைகளை பிரெட் தூளில், இரண்டு பக்கமும் பிரட்டி, எண்ணெயில்,மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.