25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சத்தான சுவையான வெஜிடபிள் சூப்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சத்தான சுவையான வெஜிடபிள் சூப்.

தேவையான பொருட்கள்:
1கேரட் ,5 பீன்ஸ்,2 தட்டை மக்காசோளம்,2இலை முட்டைக்கோஸ்,
100 கிராம் காலிஃப்ளவர்,20 பச்சை பட்டாணி,2டீஸ்பூன் மிளகுத்தூள்,
4பல் பூண்டு,தேவையான அளவு உப்பு,
செய்முறை :
கேரட் ,பீன்ஸ், முட்டைக்கோஸ் ,காலிஃப்ளவர் இவற்றை நீளவாக்கில் அல்லது பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதனுடன் பச்சை பட்டாணி ஒரு தட்டைமக்காச்சோளத்தையும்சேர்த்துக்கொள்ளவும்.

ஒரு தட்டை மக்காச்சோளத்தை பொடியாகஉதிர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாகநறுக்கிய நான்கு பல் பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்.

பூண்டின் பச்சை வாசனைபோனபின் வெஜிடபிள் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்ஊற்றி மிதமான தீயில் 10நிமிடங்கள் வேக விடவும். 

வெஜிடபிள் வெந்தவுடன் மேலும் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றிஅதனுடன் அரைத்து வைத்த மக்காச் சோளத்தையும் ஊற்றி உப்பு சரிபார்த்து கொதிக்கவிடவும்..
சூப் நன்றாக கொதித்தவுடன் உப்பு சரிபார்த்து இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கிவிடவும். சூப் தயார்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News