25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மிளகு ரசம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மிளகு ரசம்

தேவையான பொருட்கள்:

1டீஸ்பூன் மிளகு

 1டீஸ்பூன் சீரகம்

1டீஸ்பூன் துவரம் பருப்பு

2தக்காளி

ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி

1/4 கப் சாம்பார் வெங்காயம்

 5 பல் பூண்டு

2 மிளகாய் வற்றல் 

ஒரு சிறிய துண்டு வெல்லம்

.உப்பு 

பெருங்காயத்தூள்

 தாளிக்க :

1டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

1/4 டீஸ்பூன் கடுகு

 2/4டீஸ்பூன் சீரகம்,கறிவேப்பிலை,மல்லி இலை

செய்முறை 

மிளகு ரசம் வைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.

.தாளிக்க வெங்காயம் பூண்டு இரண்டையும் தட்டி வைத்துக்கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் துவரம் பருப்பு, மிளகு, சீரகம், தக்காளி, சாம்பார் வெங்காயம், பூண்டு,வற்றல், கருவேப்பிலை எல்லாம் சேர்த்து அத்துடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வற்றல், தட்டி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்த மிளகு மசாலா விழுதை சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கலந்து, வெல்லம், பெருங்காயத் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதி வந்து பச்சை வாசம் போனதும் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் ரசம் தயார்.தயாரான ரசத்தை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான மிளகு ரசம் சுவைக்கத் தயார்.

இந்த மிளகு ரசம் சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சூப் போல் பருக மிக மிக சுவையாக இருக்கும்.

மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் 

சுவையாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News