25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


சமையல்

Jan 19, 2024

பரங்கிக்காய் பொரியல்

தேவையான பொருட்கள் -பரங்கிக்காய் கால் கிலோ, வேகவைத்த வேர்க் கடலை அரை கப், வெல்லம் 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 2, கறிவேப்பிலை சிறிதளவு.செய்முறை:-பரங்கிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்குங்கள். வேர்க் கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, மிளகாய் வற்றலை (முழுதாக) சேர்த்து வறுத்து அதனுடன் பரங்கிக்காயை சேருங்கள். அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கிளறுங்கள். காய் வெந்ததும் வேர்க்கடலை, வெல்லம், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

Jan 19, 2024

பனங்கிழங்குப் பொரியல்

தேவையான பொருட்கள் -பனங்கிழங்கு 4, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு,கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சைச் சாறு 1 டேபிள் ஸ்பூன்.பொடிக்க:-மிளகாய் வற்றல் 10, தனியா, கடலைப் பருப்பு, தேங்காய்த்துருவல் தலா 1 டேபிள் ஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன்.செய்முறை:-பனங்கிழங்கின் தோலை நீக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வையுங்கள். ஆறியதும் தோல், நடு நரம்பை நீக்கிவிட்டு பொடியாக நறுக்குங்கள். ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி, கடுகு உளுந்து தாளித்து நறுக்கிய பனங்கிழங்கு, அரைத்து வைத்துள்ள பொடி, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.  

Jan 12, 2024

சேமியா பொங்கல்

தேவையானவை: சேமியா - 2 கப், பாசிப்பருப்பு - அரை கப். பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கு, கறிவேப்பிலை சிறிது. நெய் - 2 டேபிள்ஸ்பூன்.தாளிக்க: மிளகு ஒரு டீஸ்பூன். சீரகம் ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன். நெய் ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை: ஒரு டீஸ்பூன் நெய்யில் சேமியாவை சிறிது வறுத்தெடுங்கள். பருப்பை தண்ணீர் சேர்த்து குழைய வேகவையுங்கள். வெந்தவுடன் அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கும்போது உப்பு. ஒரு டீஸ்பூன் நெய் ஆகியவை சேர்த்து பெரிய தீயில் 2 நிமிடம் வேசுவிட்டு, தீயை குறைத்து நன்கு வேகவிடுங்கள். அதில் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள். எண்ணெய். நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து. ஒரு நிமிடம் வதக்கி பொங்கலில் சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்

Jan 12, 2024

சேமியா சர்க்கரை பொங்கல்

தேவையானவை : சேமியா - ஒரு கப், பாசிப்பருப்பு -அரை கப். வெல்லம்- ஒன்றரை கப், நெய் - அரை கப், முந்திரிப்பருப்பு -10. திராட்சை - 12, எலக்காய்தூள் - ஒரு டீஸ்பூன்.செய்முறை: பாசிப்பருப்பை மலர வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.நெய்யில் பாதியை காயவைத்து முந்திரி, திராட்சை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து 2 கப் தண்ணீர் சேருங்கள். தண்ணீர் கொதித்ததும் சேமியாவை சேர்த்து நன்கு வேகவிடுங்கள். வெல்லத்தை பொடித்து. அரை கப் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு வடிகட்டி வெந்த சேமியாவில் சேருங்கள். அத்துடன் பாசிப்பருப்பையும் போட்டு, நன்கு சேர்ந்து வரும் வரை கிளறுங்கள். கடைசியில் ஏலக்காய்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். 

Jan 12, 2024

பாசிப்பருப்பு மாவுருண்டை

தேவையானவை: பாசிப்பருப்பு ஒரு கப், சர்க்கரை ஒரு கப், நெய் - தேவையான அளவு.செய்முறை: பாசிப்பருப்பை நன்கு பொன்னிறமாக வறுத்தெடுங்கள். பருப்பையும் சர்க்கரையையும் மாவு மிஷினில் கொடுத்து தனித்தனியே அரைத்துக்கொள்ளுங்கள். நெய்யை சூடாக்கி, மாவில் ஊற்றி, உருண்டைகளாக உருட்டுங்கள். உருட்ட வராமல் உதிர்ந்தால், இன்னும் சிறிது நெய்யை சூடாக்கி ஊற்றிக்கொள்ளுங்கள். நன்கு பிடிக்க வரும்.மிஷினில் குறைந்தபட்சம் 2 கப் அளவிலிருந்து அரைப்பார்கள். அதற்கும் குறைந்த அளவென்றால் மிக்ஸியிலேயே பருப்பையும் சர்க்கரையையும் தனித்தனியே நைஸாக அரைக்கலாம். 

1 2 ... 42 43 44 45 46 47 48 49 50 51

AD's



More News