25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


சமையல்

Aug 23, 2024

கோவைக்காய்சாதம் .

தேவையானபொருட்கள் ;உதிராக வடித்த சாதம் 2 கப், பெரிய வெங்காயம் 1, கோவைக் காய் 100 கிராம், தேங்காய்த் துருவல், மிளகாய்த் தூள் தலா 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை சிறிதளவு.செய்முறை:வெங்காயம், கோவைக்காயை மெல்லியதாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளித்து, வெங்காயம், தேங்காயை வதக்குங்கள். பச்சை வாடை போனதும், கோவைக் காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கி, கறிவேப்பிலை, எலுமிச்சம் சாறு சேர்த்து இறக்குங்கள்.இந்தக் கலவையோடு சாதத்தைக் கலந்து பரிமாறுங்கள்.

Aug 23, 2024

சோயாசாதம்

தேவையானபொருட்கள் : பச்சரிசி -2 கப், சோயாஉருண்டைகள்அரைகப், பெரியவெங்காயம்- 2, இஞ்சி,பூண்டுவிழுது -2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 4 டீஸ்பூன், தயிர்-அரைகப், கரம்மசாலாத்தூள் -1 டீஸ்பூன், சீரகம்-அரைடீஸ்பூன், எண்ணெய், நெய்-தலா 2டேபிள்ஸ்பூன்,உப்புதேவைக்கு.செய்முறை: சோயாவை கொதி நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து பிறகு பச்சைத் தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாகக் கழுவுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில், சன்னமாக நறுக்குங்கள்.குக்கரில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, சீரகத்தை தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு உப்பு, தயிர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சோயா ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். பிறகு அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வையுங்கள்.ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

Aug 23, 2024

தக்காளி தயிர் பச்சடி (தென்னிந்திய பாணி)

தேவையானபொருட்கள் ;தக்காளி - 4வெங்காயம் - 1பச்சை மிளகாய் - 1 துண்டுகொத்தமல்லி இலைகள் அலங்கரிக்கதயிர் / சாதாரண தயிர் - 1 கப் (குளிர்ந்தது)மசாலாவிற்கு: எண்ணெய் -1 டீஸ்பூன், கடுகு – 3/4 டீஸ்பூன்செய்முறை ;தக்காளியை சூடான நீரில் 10 நிமிடங்கள் வைக்கவும்.தோலை உரித்து நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கவும்.ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு போட்டு, அது வதங்கியதும், பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை சில நிமிடங்கள் வதக்கவும். அதை குளிர்விக்க விடவும்.மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். தயிர் கலந்து ஏதேனும் புலாவோடு பரிமாறவும்.

Aug 16, 2024

பச்சைப்பயறு குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள் -  பச்சைப்பயறு - ஒரு கப், பச்சரிசி கால் கப், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்). பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: பச்சைப்பயறு, பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு. உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை. பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதை மாவில் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லில் மாவை ஊற்றி, பணியாரங்களாக சுட்டு எடுக்கவும். 

Aug 16, 2024

பச்சைப்பயறு குருமா

தேவையான பொருட்கள் - பச்சைப்பயறு ஒரு கப், தக்காளி, வெங்காயம் தலா 1 (பொடியாக நறுக்கவும்). இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், சோம்பு -தலா ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, ஏலக் காய், கிராம்பு -தலா 1. மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: பச்சைப்பயறை 6 மணி நேரம் ஊற வைக்கவும். முளை கட்டிய பயறு எனில் ஊற வைக்க வேண்டாம். தக்காளி, வெங்காயம். சோம்பு . பட்டை, கிராம்பு, ஏலக்காயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் தனியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தக்காளி, வெங்காய மசாலா விழுது, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். சிறிது வதங்கியதும் பயறைச் சேர்த்துக் கிளறி, தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். பாதி வெந்ததும் அரைத்த தேங்காய், உப்பு சேர்த்துக் கிளறவும், நன்றாகக் கொதித்து வரும்போது கொத்தமல்லி தூவி, இறக்கி பரிமாறவும். 

Aug 16, 2024

பச்சைப்பயறு வடை

தேவையானவை பொருட்கள் -  முளைகட்டிய பயறு. பொடியாக நறுக்கிய வெங்காயம் -தலா ஒரு கப், மிளகு, சோம்பு - கால் டீஸ்பூன், உப்பு. எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: பயறுடன் மிளகு, உப்பு, சோம்பு சேர்த்து கரகரப்பாக. கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவில் வெங்காயத்தை சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை வடைகளாகத் தட்டி பொரித்தெடுக்கவும்.முளைகட்டிய பயறு இல்லாவிட்டால், பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, அரைத்தும் செய்யலாம். 

Aug 16, 2024

பச்சைப்பயறு பக்கோடா

தேவையானவை பொருட்கள் - ஊற வைத்த பச்சைப்பயறு (அ) முளைக்கட்டிய பயறு - ஒரு கப், சீரகம், சோம்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி -சிறிய துண்டு, வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: பயறுடன் சீரகம். சோம்பு, மிளகு. இஞ்சி, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவில் வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயை விட்டு சூடாக்கி, மாவைக் கிள்ளிப் போட்டு. பக்கோடாக்களாகப் பொரித்தெடுக்கவும். 

Aug 16, 2024

பச்சைப்பயறு சப்பாத்தி

தேவையான பொருட்கள் - பச்சைப்பயறு ஒரு கப் ,கோதுமை மாவு - 3 கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் தலா அரை டீஸ்பூன், உப்பு, நெய் - தேவையான அளவு.செய்முறை: பச்சைப்பயறை 5 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். இதில் கோதுமை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு சுட்டு எடுத்து, நெய் தடவி பரிமாறவும். 

Aug 09, 2024

வெஜிடேபிள் சால்னா

தேவையான பொருட்கள்:  காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு) - 3/4 கப்  பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)புதினா - 10 இலைகள் ,எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வதக்கி அரைப்பதற்கு - துருவிய தேங்காய் - 1/4 கப் , பெரிய வெங்காயம் - 1 , தக்காளி - 1 , இஞ்சி - 1/4 இன்ச் , பூண்டு - 4 ,சோம்பு - 1/2 டீஸ்பூன்  , கசகசா - 1/2 டீஸ்பூன் , மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் , மல்லித் தூள் - 2 டீஸ்பூன் , பட்டை - 1/4 இன்ச் ,கிராம்பு - 2 *,அன்னாசிப் பூ - 1 , ஏலக்காய் - 1 செய்முறை:  ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய் மற்றும் மசாலாப் பொடியைத் தவிர அனைத்தையும் போட்டு, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.  பின் அதில் மசாலா பொடிகளை சேர்த்து கிளறி, தேங்காயையும் போட்டு 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.  கலவை குளிர்வதற்குள், மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். மீல் மேக்கர் பெரிதான பின்னர், அந்த மீல் மேக்கரை குளிர்ந்த நீரில் ஒருமுறை போட்டு எடுத்து பிழிந்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  பிறகு வதக்கி வைத்துள்ள வெங்காய கலவையை மிக்ஸியில் போட்டு, சிறிது நீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.  அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, புதினா சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, அரைத்து வைத்துள்ள மசாலா, மீல் மேக்கர் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 1-2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து கொத்தமல்லியை மேலேத் தூவினால், சுவையான வெஜிடேபிள் சால்னா ரெடி.

Aug 09, 2024

ஒயிட் குஸ்கா

குஸ்கா தென்னிந்தியாவில் பிரபலமான உணவு வகையாகும். இதை குருமாவுடன் சேர்த்து சாப்பிடவே மக்கள் விரும்புவார்கள். உருது மொழியில்‘குசுக்’ என்றால்‘உலர்ந்த’ என்று பொருள். இந்த உணவும் உலர்ந்து இருப்பதால் குஸ்கா என்று பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தேவையானபொருட்கள்: பாஸ்மதி அரிசி-1½ கிலோ.நெய்-1 குழிக்கரண்டி,எண்ணெய்-1 குழிக்கரண்டி.கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை- தேவையான அளவு.முந்திரி-10,பாதாம்-20,நறுக்கிய வெங்காயம்-2,பச்சை மிளகாய்-6,இஞ்சி பூண்டு விழுது-1½ தேக்கரண்டி.கொத்தமல்லி, புதினா- தேவையான அளவு,தயிர்-200கிராம்.தக்காளி-1 ½,உப்பு - தேவையான அளவு.செய்முறை-:  ½ கிலோபாஸ்மதி அரிசியை கழுவி ஊற வைத்துக்கொள்ளவும். பிறகு நன்றாக அகண்ட பாத்திரத்தில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய், ஒரு குழிக்கரண்டி நெய் சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் மசாலா பொருட்களான பட்டை,கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்த2 பெரிய வெங்காயம், பச்சை மிளகாய்6 சேர்த்து அத்துடன்10 முந்திரி பருப்பை சேர்க்கவும். நன்றாக கோல்டன் பிரவுன் ஆன பிறகு அதோடு1½ தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது அத்துடன் கொத்தமல்லி, புதினா ஒரு கைப்பிடி சேர்த்து வதக்கவும். ஒயிட் குஸ்காவிற்கு தயிர் மிகவும் முக்கியமானது அதுவே புளிப்பு சுவையை தரும். அதனால்200 கிராம் தயிரை சேர்த்து நன்றாக வதக்கவும்.இப்போது20 பாதாமை ஊற வைத்து தோலூரித்து அரைத்து செய்த கலவையை அத்துடன் சேர்க்கவும். மேலும்,1½ தக்காளியை கடைசியாக சேர்த்துவிட்டு குஸ்காவிற்கு தேவையான உப்பை சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.தண்ணீர் கொதித்ததும் வடிகட்டி வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து10 நிமிடம் சிம்மில் வைத்து வேகவிடவும்.10 நிமிடத்திற்கு பிறகு திறந்து புதினா, கொத்தமல்லி, நெய் சேர்த்து மூடிப்போட்டு குஸ்காவை தம்மில் வைத்துடுங்க. அரைமணி நேரம் குஸ்காவை நன்றாக வேகவைத்த பிறகு இறக்கிவிடவும்.ஒயிட் குஸ்கா தயார்.

1 2 ... 39 40 41 42 43 44 45 ... 50 51

AD's



More News