தேவையானப்பொருட்கள்:கேரட் - 1, பீன்ஸ் 6, நடுத்தர அளவு கத்தரிக்காய் 3, கோஸ் 1 துண்டு, சௌசௌ 1 துண்டு. சிறிய முள்ளங்கி 1, பிஞ்சான பச்சை மொச்சைக்கொட்டை கால் கப், அவரை5, பெரிய வெங்காயம்2, தக்காளி3, இஞ்சி1 துண்டு, புளி சிறு எலுமிச்சை அளவு, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் 6. கடுகு 1 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், எண்ணெய் 3 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு.செய்முறை:வெங்காயம், தக்காளி, காய்கறிகளைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறுங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, மிளகாய் வற்றலைத் தாளித்துப் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் காய்கறிகள், இஞ்சி, தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மிதமான தீயில் காய்கள் வேகும்வரை வதக்குங்கள். வதங்கியதும் தேங்காய். பெருங்காயம், புளி, உப்பு. கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்குங்கள். ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள்.சத்துக்கள் நிறைந்த இந்த காய்கறி சட்னியை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
தேவையானப்பொருட்கள்: வாழைத்தண்டு –சிறியது, உளுத்தம் பருப்பு- 2 ஸ்பூன், மிளகாய் வற்றல்- 2, பூண்டு- 5 பல், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய்- 2 ஸ்பூன்செய்முறைஒரு வாழைத்தண்டை நார் இல்லாமல் நறுக்கி லேசாக எண்ணெய்யில் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, இரண்டு மிளகாய் வற்றலை எண்ணெய்யில் வறுத்து அதனுடன் வதக்கிய வாழைத்தண்டு ,தேவைக்கேற்ப உப்பு, ஐந்து பூண்டு பல் சேர்த்து சட்னியாக அரைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையானவை: பொடியாக நறுக்கிய தர்பூசணி - 2 கப், நறுக்கிய கேரட் - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, விருப்பப்பட்டால் மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு வடிகட்டி குளிர வைத்து பரிமாறவும்.
தேவையானவை: நன்கு பழுத்த பப்பாளி பழ துண்டுகள் ஒரு கப், ஆரஞ்சு-1, எலுமிச்சைச் சாறு-2 டேபிள்ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, சர்க்கரை - தேவையான அளவு, புதினா (அ) துளசி - சிறிதளவு, மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை.செய்முறை: ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து ஜூஸ் எடுக்கவும். அதில் எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரை, பப்பாளி பழ துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மிளகுத்தூள், புதினா தூவி, குளிர வைத்து பரிமாறவும்.
தேவையானவை: ஆரஞ்சு ஜூஸ், தர்பூசணி ஜூஸ், கேரட் ஜூஸ், பப்பாளி ஜூஸ் - தலா ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் - கால் கப், சர்க்கரை - தேவைக்கேற்ப, உப்பு - ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: எல்லா ஜூஸையும் ஒன்றாக ஊற்றி சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்து கொள்ளவும். விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய ஆப்பிள், புதினாவை மேலே தூவி குளிர வைத்து பரிமாறவும்.
தேவையானவை: நெல்லிக்காய்-5(கொட்டை நீக்கி துண்டுகளாக்கவும்), கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு, தண்ணீர் தேவையான அளவு.செய்முறை:நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து வடிகட்டவும் ஃப்ரிட்ஜில் குளிரவைத்து கண்ணாடிக் கோப்பைகளில் பரிமாறவும்.குறிப்பு: வைட்டமின் சி நிறைந்தது; தாகத்தை தணிக்கும்.
தேவையானவை: கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தலா ஒரு கைப்பிடியளவு. எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, தண்ணீர்-தேவையான அளவு.செய்முறை: கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டவும். இதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.குறிப்பு: உடல் எடையைக் குறைக்க உதவும்; கோடையில் வரும் கண் சம்பந்தமான கோளாறுகளைத் தடுக்கும்.
தேவையானவை : பீட்ரூட் துருவல் - கால் கப், கெட்டித் தயிர் - ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை தேவையான அளவு.செய்முறை:பீட்ரூட் துருவலுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். தயிருடன் சர்க்கரை, பீட்ரூட் விழுது சேர்த்துக் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.குறிப்பு: கால்சியம் நிறைந்தது; ரத்தச் சோகையை சரிசெய்ய உதவுகிறது.
தேவையானவை : வெள்ளரித் துருவல், மாங்காய்த் துருவல் - தலா 4 டீஸ்பூன், மோர் ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள், உப்பு தேவையான அளவு.செய்முறை:வெள்ளரித் துருவலுடன் மாங்காய்த் துருவல் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் மோர், உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து நுரை வரும் வரை அரைத்து எடுக்கவும். கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றிப் பரிமாறவும்.
தேவையானவை: கிவி பழம் ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை தேவையான அளவு.செய்முறை: கிவி பழத்தின் தோலை நீக்கி துண்டுகளாக்கவும். இதனுடன் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும்.