முட்டை சுக்கா
தேவையான பொருட்கள்.
6 முட்டை
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
1டீஸ்பூன் தனியா தூள்
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
விழுது அரைக்க:
1டீஸ்பூன் சோம்பு,பட்டை2 கிராம்பு,2 பல் பூண்டு, சிறிய துண்டு இஞ்சி,2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்,தேவையான அளவு உப்பு,3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்,கறிவேப்பிலை
செய்முறை :
முட்டையை வேக வைத்து,மேல் உள்ள ஓட்டை எடுத்து விட்டு தயாராக வைத்துக் கொள்ளவும்.மேலே கொடுத்துள்ள மசாலாவை அரைத்து, உப்பு, எண்ணெய், மசாலா பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.பின்னர் ஒரு பௌலில் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.அதன்பின் முட்டையை இரண்டாக நறுக்கி,கலந்து வைத்துள்ள மசாலா விழுதை தேய்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தயாராக உள்ள மசாலா தடவிய முட்டைகளை அடுக்கவும்.
ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து,பின்னர் திருப்பி போட்டு, கறிவேப்பிலை சேர்த்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.மேலும் ஐந்து நிமிடங்கள் கலந்து, நன்கு முட்டை மசாலா வற்றி வந்ததும் இறக்கினால் முட்டை சுக்கா தயார். தயாரான சுக்காவை எடுத்து ஒருதட்டில் வைக்கவும். இப்போது மிகவும் சுவையான, சத்தான முட்டை சுக்கா தயார். இந்த முட்டை சுக்கா சாதம், சப்பாத் தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
0
Leave a Reply