25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

Jun 28, 2025

ஸ்வீட் கார்ன் தோசை

தேவையான பொருட்கள்3 தக்காளி,6 வரமிளகாய்,7 முந்திரி,1 வெங்காயம் பொடியாக,1 குட மிளகாய் பொடியாக, சிறிதுமல்லித்தழை,தேவையானஅளவு எண்ணெய், 1 கப் வேக வைத்த ஸ்வீட் கார்ன்,2 கப் இட்லி மாவு,.தேவையான அளவு உப்பு,1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1/2 வெங்காயம்செய்முறை மிக்ஸியில் தக்காளி முந்திரி வர மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைத்ததை ஊற்றி உப்பு சேர்த்து வதக்கவும்.தோசைக்கல்லில் மாவை ஊற்றி அதில் வதக்கிய மசாலா வைத்து தேய்க்கவும்.பின் வெங்காயம், குட மிளகாய், ஸ்வீட் கார்ன், மல்லித்தழை பரப்பி விட்டு நெய் விட்டு மூன்றாக மடித்து எடுத்து பரிமாறவும்.

Jun 28, 2025

மரவள்ளி கிழங்கு தோசை

தேவையான பொருட்கள்1கப் இட்லி அரிசி,1கப் துருவிய மரவள்ளிக்கிழங்கு,1/2ஸ்பூன் மிளகு,1/2 ஸ்பூன் சீரகம்,8 காய்ந்தமிளகாய், தேவைக்கு உப்பு,தேவைக்கு எண்ணெய், 1/2ஸ்பூன் கடுகு.,ஒரு கொத்து குறிவேப்பிலை.,தேவைக்கு தண்ணீர்.செய்முறை ஒரு கப் இட்லி அரிசியை2 மணி நேரம் ஊறவைக்கவும்.பின்பு துருவிய மரவள்ளிக்கிழங்கு அதனுடன் சேர்த்து மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.மரவள்ளிக்கிழங்கை அரைத்தவுடன் அதனுடன் ஊற வைத்த அரிசியை அரைக்கவும்.பின்பு சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். மூன்று மணி நேரம் புளிக்க விடவேண்டும். தோசைக்கல்லை சூடு செய்து தோசை வார்க்கவும்.இப்பொழுது சூடான மரவள்ளிக்கிழங்கு தோசை ரெடி.சுவைக்கு தேங்காய் சட்னி சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஈஸியான சத்தான கிழங்கு தோசை ரெடி.

Jun 28, 2025

காளான் தோசை.

தேவையான பொருட்கள்200 கிராம்காளான்,2டீஸ்பூன் எண்ணெய், 1 பெரிய வெங்காயம்,1/2 டீஸ்பூன்மிளகாய் தூள்,1/4 டீஸ்பூன்கரம் மசாலா,தேவையான அளவு உப்பு,தேவையான அளவுதோசை மாவு,செய்முறைஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும். அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.பின்பு தோசை வார்த்து அதன் மேல் காளானை பரப்பி வேக வைக்கவும்.சுவையான காளான் தோசை தயார்.

Jun 28, 2025

ராகி தோசை.

தேவையான பொருட்கள் ஒரு கப் ராகி மாவு,மூன்று டேபிள் ஸ்பூன் வறுத்த ரவை,1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது,ஒரு கொத்து கறிவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய்,தேவையான அளவு உப்பு, இரண்டு ஸ்பூன் எண்ணெய்செய்முறை ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, ரவை, உப்பு ,தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளுங்கள். 15 நிமிடம் அப்படியே மூடி வைக்கவும்.அதன் பிறகு கரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை ,சேர்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கெட்டியாகும். தோசை மாவு ஊற்றும்போது கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுப்பைப் பற்றவைத்து தோசைக் கல் சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து சுற்றி தோசை ஊற்றவும்.ஊத்திய பின்பு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு தோசை நன்றாக சுட்டு எடுக்கவும்.இப்போது சுவையான மொறுமொறு தோசை தயார் சூடாக சாப்பிடலாம்.

Jun 28, 2025

பாலக் கீரை அடை தோசை.

தேவையான பொருட்கள் 1கப் இட்லி அரிசி,1/2 கப் பச்சரிசி,1/2 கப் துவரம்பருப்பு,1/4 கப் கடலை பருப்பு,1டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு,பச்சை மிளகாய் அல்லது வத்தல் மிளகாய் தேவைக்கு,10-15 பாலக்இலைகள்,1/2 ஸ்பூன் பெருங்காய தூள்உப்பு தேங்காய் எண்ணெய் தேவைக்கு,ஒரு துண்டு இஞ்சிசெய்முறைமுதலில் அரிசி, பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக்கவும்.அதை மிக்ஸியில் இஞ்சி ,பச்சை மிளகாய், பெருங்காயம், சேர்த்து அரைத்த பிறகு கடைசியா பாலக் கீரை சேர்த்து அரைத்து எடுத்துக்கவும்.அத்துடன் தேவையான உப்பு சேர்த்து கலந்து ஸ்டவ்வில் தோசை தவா வைத்து சூடானதும்.மெல்லிசா அடை வார்க்கவும். சுத்தி தேங்காய் எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு சுட்டெடுக்கவும்அழகான பச்சை நிறத்தில் அருமையான சுவையில் பாலக் அடை தோசை தயார்... வெங்காயம், பூண்டு எதுவும் நான் சேர்க்க வில்லை.... விரும்பினால் சேர்த்தும் செய்யலாம்.... தக்காளி மற்றும் தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.

Jun 28, 2025

சுரைக்காய் அடை தோசை .

தேவையான பொருட்கள்1 கப் இட்லி அரிசி,2 டேபிள்ஸ்பூன் உளுந்தம் பருப்பு, 2டேபிள்ஸ்பூன் கடலைப் பருப்பு, 2 டேபிள்ஸ்பூன் துவரம் பருப்பு, 2 மிளகாய் வற்றல், 1 சிறிய துண்டு இஞ்சி,1கப் நறுக்கிய சுரைக்காய்,1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகம்,1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்,தேவையான அளவு உப்பு, தேவையான அளவு எண்ணெய் செய்முறை ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுந்து, துவரம் பருப்பு சேர்க்கவும்.பின்பு கடலைப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.அரிசி பருப்பு வகைகளை கழுவி இதனுடன் மிளகாய் வற்றல், இஞ்சி துண்டு மற்றும் சுரைக்காய் சேர்க்கவும்.இதனுடன் சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.பின்பு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் வைக்கவும்.தோசைக்கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.தேவையான அளவு எண்ணெய் தெளித்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.

Jun 21, 2025

பீட்ரூட் சட்னி

தேவையான பொருட்கள்:பீட்ரூட் - 1 கப் ( துருவியது),தேங்காய் - 1/2 கப்,எண்ணெய் - 1 1/2 tbs,உளுந்தம் பருப்பு - 1 1/2 tbs,கடலை பருப்பு - 2 tbs, சிவப்பு மிளகாய் - 3,பெருங்காயம் - ஒரு சிட்டிகை,இஞ்சி - 1/2 துண்டு,புளி - சின்ன நெல்லிக்காய் சைஸ், கறிவேப்பிலை - ரெண்டு கீற்று, உப்பு, எண்ணெய் - 1/2 டேபிள்ஸ், கடுகு - 1 tbsதாளிக்க:எண்ணெய் – ½ டேபிள்ஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், பெருங்காயம் – சிறிது, கறிவேப்பிலை – சிறிதுசெய்முறை :ஒரு கடாயில் எண்ணெய சூடாக்கி, கடலை பருப்பு, உளுந்த பருப்பு, பெருங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவும். பருப்பு பொன்னிரமா மாறியதும் புளி, இஞ்சி சேர்த்து சில நொடிகள் வதக்கி, அடுப்பை அணைக்கவும்.வாணலியில் இருந்து இறக்கி ஆற விடவும். அதே வாணலியில் துருவிய பீட்ரூட் கறிவேப்பிலை சேத்து மிதமான தீயில், பீட்ரூட்டின் பச்சைத்தன்மை போகும் வரை அவ்வப்போது கிளறி விட்டுட்டே இருங்க.நல்லா வதங்கியது அதை ஒரு தட்டிற்கு மாத்தி சூடு ஆற விடுங்க.சூடு ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாத்தி நல்லா கொரகொரப்பாக சட்னி பதத்துக்கு அரச்சு எடுத்துக்கோங்க. அதை ஒரு கிண்ணதுக்கு மாத்தி தனியாக வைத்து கொள்ளவும்.இப்போது தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊத்தி கடுகு கறிவேப்பிலை பெருங்காயம் எல்லாம் போட்டு சட்னியின் மேல் போடவும்.இந்த பீட்ரூட் சட்னி சூடான இட்லி, தோசை, பணியாரம், வெண் பொங்கல், சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது.ரொட்டி, சப்பாத்தி, புல்கா போன்றவற்றுடன் சைடு டிஷாகவும் பரிமாறலாம்.மாலை நேர ஸ்நாக்ஸ்க்கு  இந்த சட்னி வித்தியாசமான சுவையை தரும்.

Jun 21, 2025

மாங்காய் மிளகாய் சட்னி

தேவையான பொருட்கள்:மாங்காய் - 1 (நடுத்தர அளவு), தக்காளி - 3, பச்சை மிளகாய் - 3, வெங்காயம் (நறுக்கியது) - 1 (நடுத்தர அளவு),கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள் தூள் - 1/2 மேசைக்கரண்டி, மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி,உப்பு - 1/2 மேசைக்கரண்டி, எண்ணெய் - 1 மேசைக்கரண்டிசெய்முறைமுதலில் மாங்காயையும் தக்காளியையும் பாதியாக நறுக்கி வச்சுக்கோங்கஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதை சூடாக விடுங்கள்,அதில் எண்ணெய் ஊற்றி மாங்காய், தக்காளியையும்,பச்சை மிளகாவையும் போட்டு நல்லா வதக்கவும்.நல்லா எண்ணெய்யில் முன்னும் பின்னும் வேகும் வரை வதக்கிகோங்க.பொன்னிறமாக மாறியதும் அதை ஒரு தட்டில் எடுத்து சூடு ஆற விடுங்கள்.சூடு ஆறியதும் மாங்காவின் தோலை ஈஸியாக நீக்கிவிடலாம்.ஒரு மிக்ஸி ஜாரில் நாம் வதக்கிய மாங்காய் தக்காளி பச்சை மிளகாயை சேர்த்துகோங்க.அது கூடவே நறுக்கியா வெங்காயம், ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி, உப்பு சேத்து நல்லா அரச்சுகோங்க.தேவைப்பட்டா தண்ணீ சேர்த்து கொஞ்சம் கொர கொறப்ப அரச்சு எடுத்துக்கோங்க.சூப்பரான "சுவையான மாங்காய் மிளகாய் சட்னி ரெடி" .இந்த மாங்கா சட்னி, வழக்கமான சட்னிகளுக்கு ஒரு இனிமையான மாற்றாக இருக்கும்.இந்த சட்னி, காரமும் புளிப்பும் கலந்த ஒரு தனிச்சுவை கொண்டது. வீட்டில் எளிதாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய இந்த மாங்கா சட்னி, அதில் உள்ள புளிப்பு சுவை, வயிற்றை கலக்காமல், வாந்தி போன்ற உணர்வுகளை குறைக்க உதவுகிறது.இப்போது பருவத்தில் கிடைக்கும் மாங்காய்களை பயன்படுத்தி இந்த சட்னியை வீட்டிலேயே செய்து பாருங்கள். சாதம், நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இது ஒரு அட்டகாசமான சுவை அனுபவமாக மாறும்.

Jun 21, 2025

கேரட் சட்னி.

தேவையானப்பொருட்கள்:கேரட் – 4,பச்சை மிளகாய்.,பூண்டு – 3 பற்கள்,புளி – நெல்லிக்காய் அளவு,எள்– 1 தே. கரண்டி,சீரகம்– 1 தே. கரண்டி,தேங்காய் துருவல் – 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்),உப்பு– தேவையான அளவு,கடுகு, உளுந்து, பெருங்காயம்– தாளிக்க,நல்லெண்ணெய்– சிறிதளவுசெய்முறை:கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.ஒரு வாணலியில் எள், சீரகம் இவற்றை எண்ணை விடாமல் வறுத்து எடுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.வாணலியில் சிறிது எண்ணை விட்டு பூண்டு, பச்சைமிளகாய், கேரட், தேங்காய் துருவல் ஆகியவற்றை முறையே போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.கேரட் கலவையுடன் எள், சீரகப் பொடி, உப்பு, புளி இவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கலக்கவும்.கேரட் சட்னி தயார். இது ரவா உப்புமா, இட்லி உப்புமாவுக்கு அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் நன்றாகவே இருக்கும்.

Jun 21, 2025

பீர்க்கங்காய் சட்னி

தேவையானப்பொருட்கள்:பீர்க்கங்காய் –1/4கிலோ( தோலை மேலோட்டமாக சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்)காயந்த மிளகாய் – 3 நம்பர்,உளுந்தம் பருப்பு – 1/2 கை அளவு,சின்ன வெங்காயம் – 1கப்,தக்காளி – 3,கொத்தமல்லி தழை – 1/4கப்,கறிவேப்பிலை – 1/4கப்,நல்லெண்ணெய் – தாளிப்பதற்கு ஏற்ப,உப்பு – தேவையான அளவுசெய்முறை:வாணலியில்1தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, ஆகியவற்றை சேர்த்து சிவக்க வறுத்தெடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.மறுபடியும் வாணலியில் எண்ணெய் ஊற்றி பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து சிறு நேரம் வதக்கவும்.பின்பு அதனுடன் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து சுருங்கி வரும் வரை வதக்கவும்.வதக்கியவுடன் அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும்.மிக்ஸியில் சிவக்க வறுத்தெடுத்த உளுந்தம் பருப்பு கலவையும், ஆற வைத்த பீர்க்கங்காய் கலவையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.இக்கலவை ஆட்டுகல்லிலும் அரைக்கலாம். மிக்ஸியை விட இது மிகவும் சுவையாக இருக்கும்.சுவையான பீர்க்கங்காய் சட்னி தயார்.இச்சட்னி மிகவும் சுவையாக இருக்கும். பீர்க்கங்காய் பிடிக்காதவர்கள் கூட இதை செய்து வைத்தால் சாப்பிடுவார்கள். பீர்க்கங்காய்க்கு பதிலாக காரட், பீட்ரூட், புடலங்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.

1 2 ... 35 36 37 38 39 40 41 ... 72 73

AD's



More News