பலாப்பழ பாயாசம்.
தேவையான பொருட்கள்-
ஜவ்வரிசி 1கப், நல்ல பலாப்பழம்- 5 சுளைகள்,வெல்ல பாகு அரை கப், ஏலக்காய்தூள் அரைஸ்பூன் ,தேங்காய்- அரைமூடி,முந்திரிபருப்பு- 8,கிஸ்மிஸ்பழம் 15,நெய்-6 ஸ்பூன்
செய்முறை -
முதலில் தேவையானவற்றை ரெடி பண்ணிக் கொள்ளவும்..பலா சுளைகளைக் கட்பண்ணிக் கொள்ளுங்கள்.
வெல்லப்பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளுங்கள்..
ஜவ்வரிசியை குக்கரில் தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளுங்கள். தேங்காய்பால் மூன்றுபால் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். முதல் பாலைவிடவும்.பலா பழத்தைச்சேர்க்கவும்.பின் இரண்டாம்பால் சேர்க்கவும்.வெல்லப்பாகு சேர்த்து மூன்றாம்பால் சேர்க்கவும்.தேங்காய் சிறிதளவு கட் பண்ணிக்கொள்ளவும்.
வாணலியில்2ஸ்பூன்நெய்விட்டு, முந்திரி,திராட்சை, கட் பண்ணிய தேங்காய் சேர்த்து வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.மீதி நெய்யை பாயாசத்தில் சேர்க்கவும்.சுவையான மணமான பலாப்பழப் பாயாசம் ரெடி.
0
Leave a Reply