தேவையான பொருட்கள்பனீர் ஊற வைக்க :200கி பனீர் 1/2ஸ்பூன் மஞ்சள் தூள் 1ஸ்பூன் மிளகாய் தூள்1ஸ்பூன் சீரகத் தூள்1ஸ்பூன் கரம் மசாலா தூள்1ஸ்பூன் தனியா தூள் 1/2ஸ்பூன் உப்பு1ஸ்பூன் வெண்ணை பனீர் வறுப்பதற்குவதக்கி அரைக்க:2ஸ்பூன் வெண்ணை,பெரிய வெங்காயம்-2,தக்காளி-4,1துண்டு பட்டை,4கிராம்பு,2ஏலக்காய்,4,5பல் பூண்டு ,1துண்டு இஞ்சி,6.7 முந்திரிகிரேவி செய்வதற்கு:2டேபிள் ஸ்பூன் வெண்ணை2பிரிஞ்சி இலை, 1ஸ்பூன் மிளகாய் தூள் 1ஸ்பூன் தனியா தூள் 1ஸ்பூன் சீரகத் தூள்1ஸ்பூன் கரம் மசாலா தூள்1ஸ்பூன் கஸ்தூரி மேத்திசிறிதளவுபிரெஷ் கிரீம்தேவையான அளவு உப்புசெய்முறை முதலில் ஒரு ஒரு பாத்திரத்தில் பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து அத்துடன் பொடிகளையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.ஊறவைத்த பன்னீரை கடாயில் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் வெண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய் வதக்கியத்துடன் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் லேசாக வதங்கினதும் அதனுடன் இஞ்சி பூண்டு தக்காளி சேர்த்து வதக்கவும் அதுவும் லேசாக வதங்கியதும் அதனுடன் முந்திரி பருப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.பனீர் வறுத்த கடாயிலேயே மீண்டும் வெண்ணெய் சேர்த்து அதில் பிரிஞ்சி இலை தாளித்து பொடிகளை சேர்த்து லேசாக வருத்தவுடன் நாம் வதக்கிய வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் அரைத்து அதனுடன் சேர்த்து கலக்கவும்.வெங்காய தக்காளி விழுதுடன் சிறிது தண்ணீரும் ஊற்றி கொதிக்க விடவும்.குழம்பு நன்றாக கொதித்ததும் அதனுடன் நாம் வறுத்து வைத்துள்ள பனீரையும் சேர்த்து கொதிக்க விடவும்.. பன்னீர் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் கொதித்ததும் இறுதியாக கஸ்தூரி மேதியையும் பிரஸ் கிரீமையும் சேர்த்து இறக்கவும்.இப்போது சூடான சுவையான பனீர் பட்டர் மசாலா தயார்.
தேவையான பொருட்கள் - 200 கி பனீர்,11/2கப்வெண் புழுங்கலரிசி,3/4 கப் ப.பட்டாணி,1 பெரிய வெங்காயம்,2 பிரிஞ்சி இலை,1 ஸ்பூன்சீரகம்,1டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது,2 ப.மிளகாய், ருசிக்குஉப்பு, 1/2 கப் பால், 2 1/4 கப் தண்ணீர், 2 டேபிள் ஸ்பூன்நெய்,1 டேபிள்ஸ்பூன் நறுக்கின கொத்தமல்லி தழை,அலங்கரிக்க: கட் செய்த வறுத்த பனீர் துண்டுகள்செய்முறை தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும். ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.அரிசியை சுத்தம் செய்து தேவையான தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு தண்ணீரை வடித்து விட்டு, 2 1/4 கப் தண்ணீர்,1/2 கப் பால்,1 சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில்1 விசில் விட்டு குழையாமல் உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும்.பனீரை சதுர வடிவில் கட் செய்யவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், நெய் விட்டு காய்ந்ததும், பனீரை கருகாமல் பொன்னிறமாக வறுத்து, தட்டில் எடுத்துக் கொள்ளவும்.அதே நெய்யில், சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்ததும், வெங்காயம், ப.மிளகாய்,உப்பு சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.அடுத்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியதும், பட்டாணியை சேர்த்து,2 நிமிடம் வெந்ததும், வறுத்த பனீரை சேர்க்கவும்.பிறகு, சாதத்தை போட்டு, பனீர் உடையாமல், ஒன்று சேர மெதுவாக கிளறி, அடுப்பை நிறுத்தி விடவும்.மேலே கொத்தமல்லி தழையை போட்டு இறக்கவும்.இறக்கினதும்,பிறகு பிளேட்டிற்கு மாற்றவும்.பிளேட்டை சுற்றி பனீர் துண்டுகளை வைத்து, மேலே வறுத்த பனீரை வைத்து அலங்கரிக்கவும். இப்போது, சுவையான பனீர், க்ரீன் பீஸ் புலாவ் தயார்.
தேவையான பொருட்கள் - 1கப் பன்னீர், 1 வெங்காயம்,1 தக்காளி2 பச்சை மிளகாய்,1 பச்சை குடைமிளகாய்,1 டீஸ்பூன் மிளகாய் தூள்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்,1/2 கப் கிரீம்,1 டேபிள் ஸ்பூன் பட்டர்,1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1டீஸ்பூன் சீரகம், 1|பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை ஏலக்காய்,தேவையான அளவு உப்புசெய்முறை ஒரு கப் பன்னீரை எடுத்து கழுவி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,கரம் மசாலாத்தூள்,உப்பு சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.வெங்காயம், தக்காளியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் பட்டர் சேர்த்து உறுகியதும்,சீரகம்,பட்டை, பிரிஞ்சி இலை,இஞ்சி பூண்டு விழுது வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.அத்துடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்,மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.கொஞ்சமாக தண்ணீர் தெளித்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.கெட்டியானதும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கலந்து, பின்னர் பன்னீர் கேப்ஸிகம் இரண்டையும் சேர்த்து கலக்கவும்.கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.ஓரளவு கெட்டியானதும், கலந்து இறக்கினால் பன்னீர் கேப்ஸிகம் மசாலா தயார்.தயாரான பன்னீர் கேப்ஸிகம் மசாலா சப்ஜியை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.இப்போது மிகவும் சுவையான பன்னீர் கேப்ஸிகம் மசாலா சப்ஜி சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: நாவல்பழம் 2 டம்ளர், நல்லெண்ணெய் 3 ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, சாம்பார் பொடி 1 ஸ்பூன், உப்பு அரை ஸ்பூன், சர்க்கரை 5 ஸ்பூன், தயிர் அரை டம்ளர், செய்முறை: நாவல்பழங்களை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை தாளிதம் செய்து, நாவல்பழங்களைப் போட்டு வேகவைக்கவும்.அதில் உப்பு,சாம்பார் பொடி, சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுக் கலக்கி, அத்துடன் தயிர் ஊற்றிக் கலக்கி, லேசாகக் கிளறி விடவும்.நாவல்பழங்கள்10 நிமிடங்கள் கொட்டை தனியாக பிரியுமாறு வெந்தவுடன் இறக்கி வைக்க வும். கோப்பைகளில் ஊற்றி ஸ்பூன் போட்டு பரிமாறவும்.குறிப்பு:நாவல்பழ கொட்டைகளை அலசி வெயிலில் காயவைத்து, இடித்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.
தேவையான பொருட்கள் - பச்சைப்பட்டாணி (தோல் உரித்தது) - 500 கிராம் கிரீம் - 50 கிராம் சூடான பால் - 100மி.லி ,உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்பசெய்முறை -பச்சைப் பட்டாணியை மூன்று கோப்பை தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்த பச்சைப் பட்டாணியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.பால் சேர்த்து மீண்டும் சூடாக்கிக் கொள்ள வேண்டும். பரிமாறும் முன் கிரீம் சேர்த்துக் கொள்ளவும். சூடாகப் பரிமாறவும்.
தேவையான பொருட்கள் -வெங்காயம் (பொடியாக நறுக்கியது) -1 வெள்ளரிக்காய் (துருவியது) -1மைதா மாவு - 1 மேசைக்கரண்டி வெண்ணெய் - 25 கிராம்காய்கறி வேக வைத்த தண்ணீர் - 100 மி.லிபாலேடு (அ) கிரீம் – 2 மேசைக்கரண்டிஉப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்பசெய்முறை - வெங்காயத்தை 2 நிமிடம் வரை வெண்ணெயில்வதக்கவும்.பிறகு வெள்ளரிக்காயைப் போட்டு 2 நிமிடம் வரை வதக்கவும். மாவையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள், பாலேட்டையும் சேர்த்து சூடாகப்பரிமாறவும்.
உடல் ஆரோக்கியத்துடன் தேவையான குளுக்கோஸ், சோடியம் பொட்டாசியம், அயோடின் போன்ற தாது உப்புக்கள் தேங்காயில் தாராளமாக உள்ளன. இது வாயுவையும், பித்தத்தையும் போக்கி உடலுக்கு வலிமையை சேர்க்கிறது.தேங்காயுடன் காரப்பொருள்கள் சேர்த்து சூப் செய்தால் இதன் சத்துக்கள் குறைவுபடும். ஆதலால், இனிப்புச் சுவையுடன் கூடிய சூப்பாகத் தயாரித்துக் கொள்வதே நல்லது.தேவையான பொருட்கள்- முற்றிய தேங்காய் - 2,முந்திரிப் பருப்பு 10,எலக்காய் 3,பச்சை அரிசி - 50,கிஸ்மிஸ் பழம் - 10,தண்ணீர் - தேவையான அளவு செய்முறை-நன்றாக முற்றிய தேங்காய் இரண்டை உடைத்து.துருவி150 மி.லி வெந்நீர் விட்டு சிறிது நேரம் கழித்து நன்றாகக் கசக்கிப் பிழிந்து, கெட்டியாகப் பால் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு தேங்காய்த் துருவலை அம்மியில் வைத்து அரைத்து100 மி.லி நீர்விட்டு, நன்றாகக் கசக்கிப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.மீண்டும் ஒருமுறை200 மி.லி நீர்விட்டு அந்தப் பாலை அடுப்பில் வைத்து பச்சை அரிசி50 நெய்யாக உடைத்து பாலில் போட்டு கொதிக்க விட வேண்டும்.அரிசி வெந்து பதமானதும், இரண்டாவது பாலைவிட்டுக் கொதிக்கவிட வேண்டும் பாயாசம் போல ஆனதும்10 முந்திரிப் பருப்பையும்10 கிஸ்மிஸ் பழத்தையும் வறுத்துப் போட வேண்டும்.3 ஏலக்காய்களை தோல் போக்கி, விதைகளை மட்டும் பொடி செய்து போட வேண்டும். இனிப்பு சூப்பை கீழே இறக்கி சூடு சிறிது ஆறியதும், முதல் பாலை விட்டுச் சூடு ஆறும் வரை கரண்டியால் கிளறவும் இளஞ்சூடாக இந்த இனிப்பு தேங்காய் சூப்பை பரிமாறவும்.
பூசணிக்காய் உடலுக்கும் உரமூட்டும் சக்தி பெற்றது உடல் வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சிறுநீரில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.தேவையான பொருட்கள் -பூசணிக்காய்- முக்கால் கிலோ, பால் - 3 கப்,வெண்ணெய் - 1மேசைக்கரண்டி ,மைதா மாவு -1 மேசைக்கரண்டி,மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்பசெய்முறை - பூசணிக்காயின் தோலைச் சீவி சிறுசிறு துண்டுகளாக்கி வேக வைத்துக் கொள்ளவும். பூசணிக்காயை மிதமாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பிலேற்றி வெண்ணெய் விட்டு மாவைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். சூடான பால், பூசணிக்காய் விழுது, மிளகுத்தூள், உப்புத்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கி வைத்து இறக்கவும்.சூடாகப் பரிமாறவும்.
சித்த மருத்துவத்தில் மிளகு சிறப்பான இடம் வகிக்கிறது. மிளகு சேராத சித்த மருந்தே இல்லையெனலாம். காமாலை, இருதய நோய் இருமல், தொண்டை தொடர்பான நோய்கள், அஜீரணம், குளிர் காய்ச்சல் போன்ற நோய்களை குணமாக்குவதுடன் அன்றாட உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் மேற்சொன்ன நோய்கள் வராமலும் தடுக்கும். தேவையான பொருட்கள் -துவரம் பருப்பு - 50கிராம்,உப்பு - 2தேக்கரண்டி,மிளகு - 11/2 தேக்கரண்டி,துவரம் பருப்பு -1தேக்கரண்டி,நெய் -1/4 தேக்கரண்டி,கறிவேப்பிலை ஈர்க்கு,புளி - சிறு எலுமிச்சையளவு,மிளகாய் வற்றல் - 4 ,சீரகம் - 1/2 தேக்கரண்டி,தனியா - 1 தேக்கரண்டி,கடுகு - அரைக்கால் தேக்கரண்டி, தண்ணீர் - தேவையான அளவுசெய்முறை - ஒரு பாத்திரத்தில் ஐம்பது கிராம் துவரம் பருப்பைப் போட்டு தண்ணர் விட்டுக் குழைய வேக வைத்து எடுத்துதெளிவாக இறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு நீரில் புளியும், உப்பும் சேர்த்துக் கரைத்துக் கொதிக்க விட வேண்டும். புளிநீர் பாதியளவு சுண்டியதும், இறுத்து எடுத்து வைத்துள்ள துவரம் பருப்பு நீரைப் புளி நீரில் கொட்டவும்.'மிளகாய்வற்றல், மிளகு, சீரகம், துவரம் பருப்பு1 தேக்கரண்டி தனியா ஆகிய அனைத்தையும் அம்மியில் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து சூப்பில் கொட்டவும்.நூரை கூடி வாசம் வரும்போது நெய்யில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி இறக்கி கொஞ்சம் நீர் தெளித்துக் கலக்கிப் பரிமாறவும்.
தேவையான பொருட்கள்: வாழைப்பழம் -8,சர்க்கரை -1 கப்,சோள மாவு-50 கிராம், பாதாம், முந்திரி,நெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை: வாழைப்பழத்தை தோல் நீக்கி அரைக்கவும். கடாயில் நெய் சூடானதும் அரைத்த வாழைப்பழத்தை போட்டு கிளறவும். பின், சோள மாவை தண்ணீருடன் சேர்த்து கரைசலாக்கி ஊற்றவும். அதனுடன் சிறிது நெய் ஊற்றி, அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும். நெய்யில் வறுத்த பாதாம் முந்திரியை பொடியாக நறுக்கி அதில் போடவும்.சுவைமிக்க,'வாழைப்பழ அல்வா!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.