வாரிசு சான்றிதழ் எடுக்காமல் சொத்தை விற்றால் என்ன ஆகும்?
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் !
உங்கள் உரிமையை உறுதிப்படுத்துங்கள், எதிர்கால சிக்கல்களைத் தவிர்த்திடுங்கள்!
வாரிசு சான்றிதழ் ஏன் முக்கியம்?
தந்தை இறந்துவிட்டால், சட்டப்படி அனைத்து வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு.
வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate)இல்லாமல் சொத்தை விற்றால், விற்பனை சட்டப்பூர்வ சவால்களுக்கு உள்ளாகலாம்.
மற்ற வாரிசுகள் தங்களுக்கும் உரிமை இருப்பதாகக் கூறி வழக்கு தொடாலாம்.
அனைத்து வாரிசுகளின் சம்மதம் இல்லாமல் செய்யப்பட்ட விற்பனை. பங்குதாரர்களுக்கு எதிராக செல்லுபடியாகாது.
சொத்தின் உரிமையை நிரூபிக்க இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ்.
சட்டப்பிரிவுகள் (LAWS).
1.இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 - பிரிவுகள் 8, 9, 10, 14, 15, 16 இந்திய வாரிசுரிமைச் சட்டம், 1925 பிரிவுகள் 272, 373
2. சொத்துரிமை மாற்றுச் சட்டம், 1882 - பிரிவு 6 (சொத்து விற்பனை) பதிவுச் சட்டம், 1908 பிரிவு 17
3.இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 101, 102
எதிர்கால ஆபத்துகள்
சொத்து மீது வழக்கு
விற்பனை ரத்து செய்யப்பட வாய்ப்பு
வாங்குபவருக்கு உரிமை சிக்கல்கள்
நீதிமன்ற செலவுகள் மற்றும் நேர இழப்பு
தேவையான ஆவணங்கள்.
இறப்புச் சான்றிதழ்( Death Certificate ).
வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate).
அனைத்து வாரிசுகளின் அடையாள ஆவணங்கள்.
சொத்து தொடர்பான ஆவணங்கள்.
ஆதார் /வாக்காளர் அடையாள அட்டை
சட்டப்பூர்வமாக செயல்படுங்கள்.
உங்கள் உரிமையை பாதுகாப்பாக நிலைநிறுத்துங்கள்
இன்று பாதுகாப்பு, நாளை நிம்மதி!
0
Leave a Reply