25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


மதுவை கட்டுப்படுத்த கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மதுவை கட்டுப்படுத்த கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு!

நாகப்பட்டினம் விழுந்தமாவடி.

மது மற்றும் போதைப் பழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி மீனவக் கிராம மக்கள் ஊர்க் கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளனர்.

இதன்படி, திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்துவது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருமணமானவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சினை ஏற்படுத்தினாலும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிமீறல் குறித்து ஆதாரத்துடன் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது அரசு விதித்த சட்டம் அல்ல. கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் சமூக நலனைப் பாதுகாக்க மக்கள் தாங்களாக முன்வந்து மேற்கொண்டுள்ள சமூகக் கட்டுப்பாட்டு முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நலனுக்காக ஒன்றிணைந்த விழுந்தமாவடி கிராம மக்களின் முயற்சி பாராட்டுக்குரியது!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News