ஹாக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர், மொகாலி ஆகிய இடங்களில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் 9வது சீசன் நடைபெற்று வருகிறது.
நேற்று மொகாலியில் உள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, தென்கொரியாவை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் இந்திய வீரர் ஷிலானந்த் லக்ரா, பீல்டு கோல் அடித்து அணியின் கோல் கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து 9வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி, கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி, 6-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்ட நேர முடிவில் 8-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.
0
Leave a Reply