நிலக்கடலை அடை தோசை.
தேவையான பொருட்கள் -
நிலக்கடலை - 1கப்,கோதுமை மாவு -1/2 கப்,
அரிசி மாவு - 1/2 கப்,பெரிய வெங்காயம் -2,
பச்சை மிளகாய் – 4,இஞ்சி - சிறிய துண்டு
ஜீரகம் - 1/2 ஸ்பூன்,மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
தேவையான அளவு உப்பு,நல்லெண்ணெய் தேவையான அளவு.
செய்முறை -
1 கப் காய்ந்த நிலக்கடலையை 8 மணிநேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த நிலக்கடலையை குக்கரில் போட்டு
3 கப் தண்ணீர் ஊற்றி 6 விசில் விட்டு வேக வைத்து தண்ணீர் வடித்து விட்டு எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்த நிலக்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் தெளித்து கொர கொரப்பாக அரைக்கவும்.
பிறகு அதில் 1/2 கப் கோதுமை மாவு, 1/2 கப் பச்சரிசி மாவை அதில் போட்டு ஒரு துண்டு இஞ்சி, 1/2 ஸ்பூன் ஜீரகம்
போட்டு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,
பொடியாக நறுக்கிய வெங்காயம்,கால் ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு
தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்திற்கு மாவை கலந்து கொள்ளவும்.
பிறகு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைப் போட்டு கிளறி விடவும்.
அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை அதில் அடைதோசையாக
ஊற்றி சுற்றி 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும்.
அடைதோசை ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான
நிலக்கடலை அடைதோசை தயார்..
0
Leave a Reply