வேர்க்கடலை பர்ஃபி.
தேவையான பொருட்கள் -
11/2கப்வறுத்த வேர்க்கடலை,
1கப் வெல்லம்,
தண்ணீர் தேவையான அளவு,
செய்முறை -
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு அத்துடன் கரைய 1/2 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரைந்ததும்,
அதனை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். தற்போது அதில் உள்ள தூசு நீங்கிவிடும்.
வடிகட்டிய வெல்லத்தை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் நன்கு கொதிக்க வைக்கவும்.
ஒரு தட்டில் நீரை ஊற்றி வைத்து கொள்ள வேண்டும், நன்கு வெல்லம் கொதித்ததும், அதில் சிறிதளவு எடுத்து
நீரில் நீட்டா ஊற்றி அதனை எடுத்து உடைத்தால் உடைய வேண்டும், அந்த பக்குவத்தில் பாகு வரும் வரை
கைவிடாமல் கிளறவும்,.
அதிரச பதத்திற்கு பிறகு தான் இந்த பதம் வரும், அந்த பதம் வந்ததும் அத்துடன் வேர்க்கடலை கலந்து இறக்கி,
அகலமான பாத்திரத்தில் அதனை கொட்டி பரப்பி விட்டு மிதமான சூட்டில் கத்தியால் வெட்டி விடவும்.
ஆரோக்கியமான வேர்க்கடலை பர்ஃபி தயார்.நன்கு ஆறியவுடன் எடுத்து சுவைக்கலாம்.
0
Leave a Reply