தனியார் துறை விற்பனையாளர் மேம்பாட்டுக் கண்காட்சியில் பங்குபெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறு, சிறு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் புதிய ஒப்பந்தப்பணிகளை பெற்றிடும் வகையில் நடத்தப்பட்ட தனியார் துறை விற்பனையாளர் மேம்பாட்டுக் கண்காட்சியில் பங்குபெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் (27.08.2026) நினைவு பரிசுகளை வழங்கினார்.
பாரத பிரதமர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் உள்ள குறு, சிறு நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் 27.08.2026 மற்றும் 28.08.2026 ஆகிய இரண்டு நாட்கள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் கண்காட்சி அரங்குகளை அமைத்து, தங்களது உற்பத்திப் பொருட்கள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை காட்சிப்படுத்தினர்.மேலும், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள், கொள்முதல் நடைமுறைகள், ஒப்பந்தப்பணிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதன் மூலம், உள்ளூர் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திறனை அதிகரித்து, புதிய சந்தை வாய்ப்புகளைப் பெறுவதுடன், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதல் நடவடிக்கைகளில் பங்கேற்று வளர்ச்சியடைய வழிவகை ஏற்படுத்தப்பட்டது.இக்கண்காட்சியில் அரசு மற்றும் பொதுத்துறையைச் சேர்ந்த 40 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க திட்டம், டான்சி மத்திய காலனி பயிற்சி மையம், தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகம், காதி கிராம தொழில் வாரியம், உணவுப் பாதுகாப்பு கழகம், ஒருங்கிணைந்த ஜவுளி மேம்பாட்டு மையம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், மத்திய இரயில்வே, இந்திய அஞ்சல் துறை, அரசு இ-வணிக (GEM), கல்பாக்கம் அனல் மின்நிலையம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்திய கனரக வாகன உற்பத்தி தொழிற்சலை போன்ற நிறுவனங்கள் பங்கேற்றனர்.
இந்த வாய்ப்புகளை மாவட்டத்தில் உள்ள குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்காக ஏற்படுத்தி தந்தமைக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் குறு, சிறு தொழில் நிறுவனம் இணை இயக்குநர் திரு.தயாளன், தமிழ்நாடு தொழில் மையம் பொது மேலாளர் திரு.கண்ணன், உதவி இயக்குநர் திரு.கிரண் தேவ் சடுலூரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply