டைமண்ட் லீக் பைனலுக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா.
பிரசல்ஸ்: டைமண்ட் லீக் தடகள தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
டைமண்ட் லீக் தடகள தொடரின் 17வது சீசன் நடைபெற்று வருகிறது. 2026ம் ஆண்டில் உலகின் 14 நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட ‘டாப்-6’ வீரர்கள், செப்டம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடைபெறும் டைமண்ட் லீக் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா, மொத்தம் 12 புள்ளிகளுடன் பட்டியலில் 6வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இதற்கு முன் 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் நடைபெற்ற டைமண்ட் லீக் பைனல்களில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
0
Leave a Reply