ராகி நிலக்கடலை லட்டு.
தேவையான பொருட்கள் -
200கிராம் ராகி மாவு,
100கிராம் வறுத்த நிலக்கடலை,
50கிராம் வெல்லம்/நாட்டு சக்கரை/சக்கரை,
உப்பு, நெய் – தேவையான அளவு.
செய்முறை -
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை சேர்த்து அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து
நன்கு கலந்து ஒரு அடை பக்குவத்தில் நாம் கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தோசைக்கல்லை வைத்து தோசைக்கல் நன்கு சூடான பிறகு நாம் தோசை பதத்தில் அடைபோல்
தட்டி வைக்க வேண்டும் பிறகு இதைப் போல் மீதமுள்ள மாவையும் நாம் அடை போல் தட்டி நன்கு ஆற
வைக்கவேண்டும் ஆறிய பிறகு அதைச் சின்ன சின்னதாக ஒரு மிக்ஸி ஜாரில் அதை போட்டு கொரகொரப்பாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு நாம் அரைத்து வைத்த ராகி மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் நாம் அரைத்து வைத்த
நிலக்கடலையும் சேர்த்து தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து நன்கு கையால்
பிசைய வேண்டும்.
பிறகு தேவையான அளவில் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவேண்டும் சுவையான
சத்தான ராகி உருண்டை லட்டு ரெடி ஆகிவிட்டது மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும்
விரும்பி சாப்பிடுவார்கள்.
கேழ்வரகில் செய்யக்கூடிய இந்த லட்டு குழந்தைகளுக்கு மிக சத்தான ஒரு சிற்றுண்டியாக இருக்கும்.
0
Leave a Reply