தேவையானவை :பெரிய வெங்காயம் 1/2 கிலோ (பொடித்தது)பூண்டு - 10 பல் (நசுக்கியது)வினிகர் 1/4 கப்சோம்பு 1/2டீஸ்பூன்கடுகு 1 டீஸ்பூன்எண்ணெய் 1/2 கப்கருவேப்பிலை சிறிதுமிளகாய்த்தூள் 1டேபிள் ஸ்பூன்உப்பு 1 டேபிள் ஸ்பூன்வெந்தயம் 1 டீஸ்பூன்சீரகம் - 1 டீஸ்பூன்பெருங்காயம் - 1 டீஸ்பூன்செய்முறை :ஒரு வெறும் வாணலியில் ஊற்றி சீரகம், பெருங்காயம் வெந்தயம் சோம்பு ஆகியவற்றை வறுத்து மிக்ஸ்சியில் பொடி செய்து கொள்ளவும்அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கி நிறம் மாறிப் பொரிந்ததும், பூண்டைச் சேர்த்து2 நிமிடம் வதக்கவும் இதனுடன் வினிகர், மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
தேவையானவை:மாங்காய் - 2 பெரியது (துருவியது)வற்றல் மிளகாய் தேவைகேற்பபெருங்காயம் 1 சிறு துண்டுஉப்பு -1டீஸ்பூன்நல்லெண்ணெய் 1/2 கப்வறுத்த வெந்தயப் பொடி 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் செய்முறை :1 வெறும் கடாயில் வற்றல் மிளகாயை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.அதே கடாயில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங்காயம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதனுடன் மாங்காய் துருவல், உப்பு, வெந்தயப்பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.மாங்காய் துருவல் வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள மிளகாய்ப் பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி இறக்கி வைக்கவும். இதை சுத்தமான ஜாடியில் வைத்து சுமார் 180 நாட்கள் உபயோகிக்கலாம்.
தேவையானவை:தக்காளி -1 கிலோ (நறுக்கியது)மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்கடுகு-1 டீஸ்பூன்வெந்தயம் - 1 டீஸ்பூன்பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்நல்லெண்ணெய் -1/2கப்புளி விழுது – சிறிதுஉப்பு-தேவைக்கேற்பசெய்முறை :நறுக்கிய தக்காளியை நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும் ஒரு வெறும் வாணலியில் வெந்தயம் சேர்த்து வறுத்து மிக்ஸ்சியில்அரைத்துக் கொள்ளவும்.வாணலியில்1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கடுகு கருவேப்பிலை பெருங்காயம் வெந்தயப்பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தக்காளி விழுது பாதியாகும் வரை வேக விடவும். இடையிடையே கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். தக்காளி விழுது பாதியாகக் குறைந்த பின் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மீதமுள்ள. எண்ணெய் புளி விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மேலும் இருபது நிமிடங்கள் வேக விடவும் எண்ணெய் மிதந்து வரும் வரை வேக விட்டு இருக்கவும்.தக்காளி தொக்கு தயார்.
தேவையானப் பொருட்கள்:முருங்கைப்பூ- 2 கப் ,பாசிப்பருப்பு - 100 கிராம் ,பெரிய வெங்காயம் -2,தக்காளி -2,பூண்டு பல் -10 பச்சை மிளகாய் -4,எண்ணெய், கடுகு,மஞ்சள் பொடி- சிறிதளவு கறிவேப்பிலை,உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பாசிப்பருப்புடன் நறுக்கிய வெங்காயம், துண்டாக்கிய தக்காளி, பூண்டு, மஞ்சள் பொடி, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணை சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, நீள வாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் தாளித்து, சுத்தம் செய்த முருங்கைப் பூ போட்டு வதக்கவும். அதில், வெந்த பாசிப்பருப்பு கலவை, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.மருத்துவ குணம் நிறைந்த, 'முருங்கை பூ கூட்டு!' தயார். சுவை அமோகமாக இருக்கும்.
தேவையானவை: உருளைகிழங்கு – 2,அப்பளம் - 8,கடலைப்பருப்பு -1/2கப்,கடுகு-1/4 ஸ்பூன்,சீரகம் - 1/4 ஸ்பூன்,மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்,மிளகாய் தூள் -1ஸ்பூன்,தனியாதூள்- 1/2 ஸ்பூன்,உப்பு-1ஸ்பூன்,வெங்காயம் -1,தக்காளி -1,பூண்டு - 3 பல்,கருவேப்பிலை – சிறிது,எண்ணெய் - 3 ஸ்பூன்செய்முறை : ஒரு குக்கரில் கடலை பருப்பு உருளைகிழங்கு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 கப் தண்ணீர் உற்றி இரண்டு விசில் விடவும். கடாயில் எண்ணெய் வைத்து அப்பளத்தை பொரித்து வைக்கவும்.பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும், வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ,தனியா தூள் ,உப்பு சேர்த்து கிளறவும் பின் அதில் வேகவைத்த கடலைபருப்பு வேகவைத்த தண்ணீருடன் வெந்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிடவும்.பொரித்து வைத்த அப்பளம் உடைத்து அத்துடன் சேர்த்து கிளறி பரிமாறவும்.
தேவையானவை: சுண்டைக்காய் -2 கப்,பயத்தம் பருப்பு 1/2 கப்,சாம்பார் பொடி 1 டீஸ்பூன்மஞ்சள்தூள்ஒருசிட்டிகை,தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,பச்சை மிளகாய்-1,சீரகம் 1டீஸ்பூன்,உப்பு - 1/2 டீஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்,கறிவேப்பிலை- சிறிது சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)செய்முறை: சுண்டைக்காயின் காம்பைக் கிள்ளி விட்டு, இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும். பயத்தம் பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேக வைத்தெடுக்கவும்.ஒரு பாத்திரத்தில், சுண்டைக்காயைப் போட்டு, அதில் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அத்துடன் காய் மூழ்கும் அளவிற்கு தேவையான நீரைச் சேர்த்து வேக விடவும். காய் வெந்ததும் அத்துடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் கொதிக்க விடவும்.தேங்காய்த்துருவல், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மைய அரைத்து, கொதிக்கும் கூட்டில் சேர்த்துக் கிளறி விடவும்.கடைசியாக கடுகு ,வெங்காயம் ,கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.
தேவையானவை :அகத்திக்கீரை - 1 கட்டு, பாசிப்பருப்பு - 50 கிராம் துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய்-3 கடுகு-1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு , தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும் பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் கீரையை போட்டு நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை கழுவிப் போட்டு நன்கு பிரட்டி விட வேண்டும் . பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும் கீரையானது நன்கு வெந்த பின் அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் அகத்திக்கீரை கூட்டு ரெடி!!
தேவையானவை:கோஸ் - 1 கப்,கடலை பருப்பு -1/2 கப், வெங்காயம் – சிறிது,பச்சை மிளகாய் -2,பெருங்காயம் – சிறிது,மஞ்சள் பொடி – சிறிது,கடுகு உளுந்து தாளிக்கசெய்முறை: கடலை பருப்பை மஞ்சள் பொடி பெருங்காயம் சேர்த்து வேகவிடவும்.கோஸ் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வேக வைக்கும் அதனுடன் வெந்த கடலை பருப்பை சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் .கடைசியில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் .இப்பொழுது கோஸ் கூட்டு ரெடி..
தேவையானவை:சௌ சௌ -1,வெங்காயம் – சிறிது,பச்சை மிளகாய் -2இஞ்சி – சிறிது,தக்காளி -1,பாசி பருப்பு - அரை கப்,உப்பு - சிறிது,கொத்தமல்லி இலை – சிறிது,தேங்காய் துருவல் -1 ஸ்பூன்கடுகு உளுந்து மற்றும் சீரகம் தாளிக்கசெய்முறை: சௌ சௌ வெங்காயம் தக்காளியை நறுக்கி கொள்ளவும்..அதனுடன் பாசி பருப்பையும் சேர்த்து வேகவைக்கவும். தேங்காயுடன் பச்சைமிளகாய் இஞ்சியும் சேர்த்து அரைத்து விழுதாக்கவும்.தேங்காய் விழுதை காயுடன் சேர்க்கவும் நன்கு வெந்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சேர்க்கவும்.கடைசியில் கொத்தமல்லியை சேர்க்கவும்.சௌ சௌ கூட்டு ரெடி.
தேவையானவை : சீரகம், தனி ஆம்ச்சூர் (மாங்காய் தூள் ) தூள், உப்பு தலா அரை கப், கருப்பு உப்பு, மிளகு தலா 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 15. செய்முறை: மேலே கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வெயிலில் நன்றாக காயவைத்து நைஸாக அரைத்தெடுத்தால் அதுதான் சாட் மசாலா பொடி.இந்தப் பொடியை பழங்களின்மீது தூவி சாப்பிடலாம். தயிர் பச்சடியோடு கலந்து பரிமாறலாம். பேல் பூரி, பானி பூரி ,வகைகளிலும் உபயோகிக்கலாம். எதனோடு சேர்த்தாலும் சுவை தூக்கலாக இருக்கும்.